இந்திய அறிவியலாளர்களின் 2018 ஆண்டின் கண்டுபிடுப்புகள்

இந்திய அறிவியலாளர்களின் 2018 ஆண்டின் கண்டுபிடுப்புகள்

இந்திய அறிவியலாளர்களின் 2018-ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடுப்புகள்

கடந்த ஆண்டில், இந்திய அறிவியலாளர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளை குறித்து ஓர் கண்ணொட்டம்.

2018-ஆம் ஆண்டு இந்திய அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் மகத்தான சாதனைகளை நிறைவேற்றியுள்ளனர்.

நானோ தொழில்நுட்பம் முதல் விண்வெளி வரை பல துறைகளில் நம் அறிவியலார்கள் புதிய பல கண்டுபிடுப்புகளை அரங்கேற்றி உள்ளதாக நாளது செய்திகளாக வந்தவன்னம் உள்ளன.

இவற்றில் சிறப்பான, குறிப்பிட தக்கவை மட்டும் பார்ப்போம்.

1. நச்சு பூச்சிக்கொல்லிகளிடமிருந்து உழவர்களை காக்கும் ஒரு கூழ்:

வயல்வெளிகளில் பனிசெய்யும் பல உழவர்கள், எவ்வித தற்காப்பு கருவிகள் இன்றி வயல் வெளிகளில் கொடும் நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளையும் வேதியல் உரங்களையும் கையாள்கின்றனர்.

பெங்களூரின் செயல்படும் குருத்தணு  உயிரியல் மற்றும் மீளாக்க மருத்துவம் (Institute for Stem Cell Biology and Regenerative Medicine)-தின் அறிவியலாளர்கள் -  பாலி ஆக்ஸிம் என்கிற ஒருவகை கூழை உருவாக்கியுள்ளது.

இந்தக் கூழை தோலின் மேல் தடவிக்கொண்டால், நச்சு வேதி பொருட்கள், தோலில் படும்போது, அவற்றும் கூறுகள் உடைக்கப்பட்ட நச்சு அற்றவையாக மாற்றப்படுகின்றன.

இதனால், நச்சு, தோல் வழியில் உள் புகுந்து, தோல், உடல் உறுப்புகள், மூளை மற்றும் நுரையீரலை தாக்கி பாதிக்காத வகையில் ஒரு தடுப்பானாக இந்த கூழ் செயல்படும்.

தோலுக்கான தடவியாக இந்த கூழ் பயன்பட்டாலும், காது, மூக்கு, கண் போன்ற திறப்புகள் வழியாக நச்சு உள்ளே செல்லாத வகையில் ஒரு முக மூடி ஒன்றையும் இந்த ஆய்வாளர்கள் உருவாக்க இருக்கிறார்கள்.

2. புதுமையான நுட்பத்தில் உலகின் மிக மெல்லிசான பொருள்:

குசராத்தின் காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆய்வாளர்கள், நானோ தொழில்நுட்பத்தில் ஒரு காகித தாளை காட்டிலும் 100,000 தடவை மெல்லியதான ஒரு பொருளை கண்டறிந்துள்ளனர்.

இவர்கள் ஒரு நானோ மீட்டர் தடிமன் (மனித தலை மயிரானது 80,000 நனோ மீட்டர் தடிமன்) கொண்ட இரு பரிமான பொருளை, மெக்னேசியம் டை போரைட் - ஒரு போரான் கலவை - கொண்டு இணைத்துருவாக்கியுள்ளனர்.

இதுவே உலகத்தின் மிக மெல்லிசான பொருளாகும்.

இதைக்கொண்டு அடுத்த தலைமுறை மின் கலன்கள், புற ஊதா கதிர் உறிஞ்சிகள் என பல பொருட்கள் உற்பத்திக்கு முன்னெடுக்கலாம்.

3. வாழை பழ மரபணுத்தொகுதியின் மரபணு தொகுப்பை மாற்றி அமைத்துள்ளனர்.

மரபணு தொகுப்பு முறையை பயன்படுத்தி நாட்டு வேளான் - உணவு உயிர்த்தொழில்நுட்பவியல் கழகம், மொகோலி-யை சார்ந்த ஆய்வாளர்கள், வெற்றிகரமாக வாழைப் பழ மரபணுத்தொகுதியின் மரபணு தொகுப்பை மாற்றி அமைத்துள்ளனர்.

இத்தகைய செயல், இந்தியாவில் முதல் முறையாக பழ பயிரில் மேற்கொள்ளப்பட்ட செயலாகும்.

இந்தியாவை பொருத்தமட்டில், வாழப் பழமானது, கோதுமை, அரிசி, சோளம் ஆகியவற்றிற்கு அடுத்து நான்காம் நிலையில் உற்பத்தி அடிப்படை வரிசையில் உள்ள பயிராகும்.

மரபணு தொகுப்பு மாற்றுதல், பயிரின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துவதற்கு உதவும்.

மேலும், பயிரின் உழவியலில் குறைபாடுகளை நீக்கவும், உற்பத்தி தரத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு திரனை வாழைப் பழத்தில் உயர்த்தவும் பயன்படும்.

4. சிகா, டெங்கு, சப்பானிய மூளை வீக்கம் (சப்பனீஸ் என்செபிலடஸ்) முற்றும் சிக்கன் குனியா ஆகியவற்றை சமாளிக்க புதிய கண்டுபுடிப்பு.

அரியானா மாநிலத்தின் மனேசரில் இயங்கும் நாடு மூளை ஆய்வு நடுவம் (National Brain Research Center), சிகா நச்சுயிரியின் அறைகலங்கள் மற்றும் மூலக்கூறு செயல்பாடுகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு, அவை எவ்வாறு சிறுதலை அல்லது குழந்தைகளில் சிறு மண்டை ஏற்படுத்துகிறது என கண்டறிந்துள்ளனர்.

ஆய்வாளர்கள், சிகா நச்சுயிரியின் மேல் புரதமானது, மனித நரம்பு குருத்தணு வளர்சியய் தடுத்து முதிராமலேயே வளர வைக்கிறது என கண்டரிந்தனர்,

அரியானா மாநிலத்தின் பரிதாபாதில் உள்ள உயிர்த்தொழில்நுட்பவியல் வட்டார நடுவமானது, டெங்கு மற்றும் சப்பானிய மூளை வீக்கம் உருவாக்கும் நச்சுயிரிகளின் அடிப்படை புரதம் எவ்வாறு மனித உடலினினுள் தன்னை தானே  தொற்றை எதிர்த்து செயல்படும் நோய்தடுப்பு நிலையை தடுத்து பெருக்கிக் கொள்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பானது விரைவில் டென்கு மற்றும் சப்பானிய மூளை வீக்கம் ஆகியவற்றிற்கு மருந்து கண்டுபிடிக்க உதவும்.

நோய்டாவை சார்ந்த அமிடி பல்கலைகழகம், டில்லியின் சாமிய மில்ல இசுலாமிய பல்கலைகழகம் மற்றும் ரோடக்-யின் மகரிசி தயானந் பல்கலைகழகம் இவை இணைந்து மோலி-படினியம் டை சைபைட் கொண்ட நானோ தாலினால் ஆன உயிரிய உணரி-யை உருவாக்கியுள்ளனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: