இணைய இணைப்பின் தரம் எப்படி இருக்க வேண்டும்?

இணைய இணைப்பின் தரம் எப்படி இருக்க வேண்டும்?

சிறந்த பதிவேற்ற வேகம், சிறந்த பதிவிறக்க வேகம் எது? இணைய இணைப்பின் தரம் எப்படி இருக்க வேண்டும்? நல்ல இணைய வேகம் என்று எதை குறிப்பிடுவது?

பல்வேறு இணைய வழங்கள் தொண்டு செய்துவருபவர்கள் நாளது பொழுதும், தங்களது தொண்டே மற்றவரின் தொண்டுகளை விட விரைவான இணைய இணைப்பாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

அப்படியானால், சிறந்த வேகமான இணைய இணைப்பு என்றால் என்ன?

நீங்கள் உங்கள் இணைய இணைப்பின் வேகத்தை அளவிட, பலமுறை, வேகத்தை, நிகழ்நிலை தளங்களில் கிடைக்கும் வேக அளவீட்டு செயலி மூலம் சோதனை செய்து பார்த்திருப்பீர்கள்.

உண்மையில், நமது இணைய இணைப்பு சிறந்ததா?

முதலில், தரத்தை ஆய்வு செய்ய, நமக்கு இணைப்பு தந்தவர்கள், தாங்கள் வாக்களித்த வேகத்தை நமக்கு தருகிறார்களா என்பதை சோதனை செய்வதே!

உங்கள் இணைய இணைப்பு 10 Mbps என்று இருப்பின், அது உண்மையிலேயே அத்துனை வேகம் கொண்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

இணைய இணைப்பு வழங்குவோரில் பெரும்பாலானோர், பரபரப்பான நேரங்களில், வேகத்தை கட்டுப்படுத்துவர்.

வேகத்தை அளவிட்டு சொல்லும் தளங்களின் பயன்பாடுகளை பயன்படுத்தி நமது இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் தளங்களில், எவ்வாரு இணைப்பின் வேகம் இருக்கிறது என்பதை கவணிக்க வேண்டும்.

ஏனெனில், சில இணைப்பு வழங்குபவர்கள், நெட்பிளிக்ஸ், சன் நெக்ச்டு, பிரைம் வீடியோ போன்ற தளங்களுக்கான வேகத்தை அதன் இணைய நெறிமுறை முகவரியின் படி கட்டுப்படுத்தியிருப்பர்.

தரத்தை இப்படி மதிப்பிடுவோம்

ஒரு காணொளி வழங்கும் தளத்தில் இருந்து ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு காணொளியையோ நாம் பார்க்க வேண்டுமேயானால் நமக்கு கீழ் காணும் வேகத்தில் இணைப்பு இருக்க வேண்டும்.

0.5Mbps - அடிப்படை வேகம் - தெளிவாக காணொளி பார்க்க இயலாது
1.5Mbps - குறைந்த வேகம் - பார்க்கலாம், ஆனால், தொங்கி தொங்கி வரும். சீராக இருக்காது
3.0Mbps - SD தரத்தில் பார்க்கலாம்
5.0Mbps - HD தரத்தில் பார்க்கலாம்
25Mbps - ULTRA HD 4K தரத்தில் பார்க்கலாம்

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், யூடியூப் தளத்தை பயன்படுத்த வேண்டுமானால், நமக்கு குறைந்தது 1.5 Mbps வேகமாவது வேண்டும்.

வேகம் மட்டுமல்ல

னிகழ்நிலை தளங்களில் அல்லது செயலி கொண்டு விளையாடுகிறீர்கள் என்றால், வேகம் மட்டும் போதாது. நாம் இணைக்கப்பட்டிருக்கும் விளயாட்டு வழங்கியின் PING 50 மில்லி நொடிக்கு கீழ் இருக்க வேண்டும்.

பதிவிறக்க வேகம்

இணையத்தில் உலாவுவதற்கு பதிவிறக்க வேகம் மட்டுமே அடிப்படை. இதையே நாம் இணையத்தின் வேகம் என பொதுவில் குறிப்பிடுகிறோம். பொதுவாக பெரும்பாலான பயனாளர்களுக்கும் இந்த வேகம் தான் தேவை.

பதிவேற்ற வேகம்

இது, மிகச் சிலருக்கு மிக தேவையான வேகமாக இருக்கும். குறிப்பாக பொறியியல் தொடர்பான வரைபடம் வரைந்து அவற்றை மின்னஞ்சல் மூலமோ அல்லது மற்ற நிகழ்நிலை வழியாக பிறரிடம் பகிர முற்படுபவர்களுக்கு இது தேவை.

ஒரு இணைய வழங்கியை இணைக்கிறீர்கள் என்றால் இந்த வேகம் தான் அடிப்படையில் தேவை.

பொதுவாக, இந்த பதிவேற்ற வேகத்தை பொதுவாக வழங்கும் இணைப்புகளுக்கு பெரிய அளவில் தரமாட்டார்கள். குத்தகை இணைப்பு அல்லது 1:1 அல்லது T1 தொழில் தர இணைப்பு கோருவோருக்கே இந்த வேகம் கூடுதலாக கிடைக்கும்.

கட்டணம் பெரிய அளவில் இருக்கும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: