"நீல திமிங்கலம் அறைக்கூவல்" தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன?

"நீல திமிங்கலம் அறைக்கூவல்" தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன?

"நீல திமிங்கலம் அறைக்கூவல்" - Blue Whale Challenge - தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன?

நீல திமிங்கலம் அறைக்கூவல் என்றழைக்கப்பட்ட நிகழ்நிலை தற்கொலை விளையாட்டு, பதின்ம வயதினரை குறிவைத்து 50 நாட்களில் 50 இடுபணிகள் என்ற விளையாட்டாகும்.

உலகம் முழுவது, இந்த விளையாட்டால், பல பதின்ம வயதினரின் வாழ்க்கை பறிபோனது.

பலருக்கும், இந்த விளையாட்டு குறித்து முழுமையாக தெரியவில்லை.

இந்த விளையாட்டை துவங்கும் போது, அது விளையாட்டாகவே இருக்கும்.

நடு இரவில் எழு, பயங்கரமான திரைப்படங்களை நட்ட நடு இரவில் பார், என்பது போன்று துவங்கும் இந்த விளையாட்டு, நாட்கள் செல்லச் செல்ல வஞ்சனையாக மாறும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கோபுரத்தின் நுனியில் நில், அல்லது, கையை கூர் ஆயுதத்தால் வெட்டி திமிங்கில படம் வரை என்பது போன்று.

பின் 50 நாளில், உன்னை நீயே கொன்றுகொள் என்பதில் முடியும்.

துவக்கம்

இந்த அறைக்கூவல் விளையாட்டு, முதலில் இரஷியாவில் துவங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. வேகமாக இது வட அமெரிக்கா, இந்தியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு பரவியுள்ளது.

1000 மேற்பட்ட பதின்ம வயதினர் இந்த விளையாட்டால் தமது உயிரை மாய்த்துக்கொண்டனர்.

புலன் ஆய்வின் போது, இப்படி ஒரு விளயாட்டு என்பது இருந்ததில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நீல திமிங்கில அறைக்கூவல் 2015 நவம்பர் 22 ஆம் நாள், இரஷியாவின் ரீனா பலென்கோவா தன்னை தானே ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டத்தில் துவங்குகிறது.

அவர், வெளியில் நின்று தனது வாய் மற்றும் மூக்கை கருப்பு துணியால் மூடி, குருதி கசிந்த தனது நடு விரலை ஒளிப்படக் கருவி முன் காட்டிய நிலையில் இருப்பது போலும் ஒரு படத்தை எடுத்து, அதில் சென்று வருகிறேன் என குறிப்பு எழுதி வெளியிட்டு மறு நாள் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள்.

ஆக, இது தற்கொலை, ஒரு விளையாட்டு அல்ல!

ரீனாவின் இந்த செயல், பதின்ம வயதினர் அதிகம் பயன்படுத்தும் இரஷிய சமூக வலைத்தளமான வீகொண்டக்டே என்ற தளத்தில் பெருமளவில் கருத்துக்களால் கலந்துரையாடப்பட்டது.

சில இளைஞர்கள் ரீனாவின் இந்த செயலை வீர தீர செயலாக பார்க்கத் துவங்கினர். அது தொடர்பான பாராட்டுகளும் சமூக தளத்தில் பரவியது.

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த பெண் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது இதுவரை யாராலும் சொல்ல இயலவில்லை. அது ஒரு மன அழர்ச்சியால் ஏற்பட்ட செயல் என்றே கருதுகின்றனர்.

இந்த செய்தி ஓய்வதற்குள், அதே ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள், கிருத்துமஸ் நாளில் 12 வயது ஆஞ்சலின் தன்னை தானே இரசியாவின் ரியாசன் நகரில் மாய்த்துக்கொண்டார்.

சிறிது நாட்களில் அதே ஊரைச் செர்ந்த மற்றொரு பெண்ணும் தன்னை மாய்த்துக்கொண்டார்.

இவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை எடுத்துப்பார்க்கும் போது, ஒருவரை ஒருவர், தற்கொலைக்கு தூண்டி தம்மை தாமே மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.

ஏன் திமிங்கலம்

இரசியாவின் கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது திமிங்கலங்கள் கரை ஒதுங்கி சாகும். மேலும், அவை சோகத்தில் இருப்பது போல பல வரைபடங்களும் வந்துள்ளன.

இரசிய பாடல் ஒன்று திமிங்கலம் குறித்த ஒரு சோக பொருளுடன் பாடப்படுகிறது.

வருத்தத்தை கிண்டலாக சொல்ல இரசியாவில் திமிங்கில படத்தை பயன்படுத்துகின்றனர்.

விளையாட்டல்ல

இந்த நீல திமிங்கலம் அறைக்கூவல் என்பது ஒரு நிகழ்நிலை நிரலால் இயங்கக்கூடிய விளையாட்டல்ல.

இது ஒரு நிகழ்னிலை சமூக தளங்களில் குழுவாக இருந்து ஒருவருக்கொருவர் கட்டளை இட்டு தம்மை தாமே தீங்கிற்கு தூண்டும் செயலாகும்.

சில வயது தாண்டிய இளைஞர்கள், பிறர் சாவதை இரசிக்கும் என்னத்துடன், இப்படி பல பதின்ம வயதினரை தற்கொலைக்கு தூண்டியிருப்பது புலன் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தூண்டுதல்களுக்கு பலியான பிள்ளைகளின் பெற்றோர்கள், இரசியா மீதும், அதன் மக்கள் மீதும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட வெளிநாடுகளின் தாக்குதல் என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அதற்கு சான்றாக பல இரசிய புலன் ஆய்வுகள் வெளிநாட்டு புலன் அமைப்புகளின் ஈடுபாடு இந்த அறைக்கூவல் குழுக்களில் இருந்ததை கண்டுபிடித்துள்ளது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: