கழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்

கழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்

குருதி கொடை, சிறுநீரகக் கொடை என்றெல்லாம் போய் இப்போது, மலத்தை கொடையாக பெற்று மருத்துவம் பார்க்கும் மருத்துவ முறை வந்துள்ளது.

அறிவியலாளர்கள், சிலரின் மலத்தில் மட்டும் குடல் நோய்களை தீர்க்க வல்ல நுண்ணுயிர்கள் இருப்பதாக கருதுகின்றனர்.

இத்தகையோரின் மலம், மிக சிறந்த குணமளிக்கும் மலமாக கருதப்படுகிறது.

இவர்கள் நல்ல உணவு பழகத்தையும், நல்ல உடல் நிலையையும் பெற்றிருப்பர்.

இவர்களின் மலத்தை கொடையாக பெற்று, குடல் நோயால் அல்லல்படும் நோயாளிகளின் கடைப்பெருங்குடல் பகுதியில், இந்த குணமளிக்கும் மலத்தை மருத்துவர்கள் செலுத்துகின்றனர்.

இந்த நல்ல நுண்ணுயிர்கள் அவர்களின் குடலில் தாமாக பரவி குடல் நோய் தீர்க்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நோய் தீர்கும் சிறந்த மலம் என்றால் எது?

முழுமையான சைவ உணவு பழக்கம் உள்ளவர்களின் மலத்தில் இத்தகைய நல்ல நுண்ணுயிர்களின் வகைகள் ஏராளமாக காணப்படும் என சிலர் சொன்னாலும், அதை அறிவியலாளர்கள் ஏற்கவில்லை.

நமது குடலில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அவை, நமக்கு நன்மை செய்து வருகின்றன. ஒவ்வொருவருக்கும், இந்த நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் வகைகள் வேறுபடும். எல்லோருக்கும் ஒரே வகையாக இருக்காது.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைகழகத்தின் மூலக்கூற்று உயிரியல் ஆய்வாளர் முனைவர் சஸ்டின் ஓ சுல்லிவன், தனது ஆய்வின் மூலம் சிறந்த மல கொடையாளியை கண்டறியும் முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஆய்வாளர்களுக்கு, ஏன் சிலரின் மலம் மட்டும் குணமளிக்கும் நுண்ணுயிர்கள் நிரம்பிய சிறந்த மலமாக வெளி வருகிறது என்பதை துல்லியமாக கண்டறிய முடியவில்லை.

அதை மட்டும் கண்டறிந்துவிட்டால், பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்த எளிதான வழிகள் கிடைக்கும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: