மண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு

மண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு

மட்டை பந்து வீரர் எம் எஸ் தோனியில் வாழ்கை வரலாற்று படத்தில் நடித்தவர் திசா பதானி.

திசா, தற்பொழுது வரை பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.  அவருக்கு தமிழ் திரையுலகில் தொண்டாற்றுவது தான் வாழ்க்கையின் பெரும் குறிக்கோளாம்.

ஓசூர் ஆன்லைனிடம் அவர் பேசும் பொழுது, தனக்கு மண்டையில் அடிபட்டு விட்டதாகவும், அதனால், தனக்கு பழையவை மறந்து விட்டதாக கூறினார்.

அச்சச்சோ... அப்படியா என்று நம் நிருபர் திசாவின் அழகில் மயங்கி கேட்டு நிற்க... அவரோ "சும்ம 6 திங்கள் அளவிலான தகவல்கள் மட்டுமே காணாமல் போச்சு, மற்றவை எல்லாம் நல்லா நினைவில் இருக்கு..." என்றார்.

பின்பு அவர் தொடர்கையில் "ஒரு முறை மார்ஷல் ஆர்ட்ஸ் செய்தபோது எனக்கு தலையில் பலமாக அடிபட்டது. அதற்காக பல திங்கள் சிகிச்சை பெற்றேன். அதன்பிறகு, கடந்த 6 திங்கள்களில் நடந்த நிகழ்வுகள் எல்லாமே என் நினைவில் இருந்து அழிந்துவிட்டதை உணர்ந்தேன். அதற்காக பயந்துவிடவில்லை. நடிப்பு ஒரு பக்கம் மார்ஷல் ஆர்ட்ஸ் ஒரு பக்கம் என இன்றளவும் மார்ஷல் ஆர்ட்ஸ் பயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன்" என்று முடித்தார்.

எங்கிருந்தோ வந்த திசாவின் மேலாளர்... யாருப்பா தரையில் எச்சில் வடித்தது என வினவ, நமது நிருபர் சட் என்று வாயை மூடி தொடைத்து கொண்டு இடத்தை விட்டு விலகினார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: