ஆப்ரிக்க கெழுத்தி மீன்களை குழி தோண்டி புதைத்த அரசு அலுவலர்கள்

ஆப்ரிக்க கெழுத்தி மீன்களை குழி தோண்டி புதைத்த அரசு அலுவலர்கள்

ஓசூரில் பறிமுதல் செய்யப்பட்ட, 10 டன் ஆப்ரிக்கன் கெழுத்தி மீனை, அலுவலர்கள் குழி தோண்டி புதைத்தனர்.

நாட்டு இன மீன்களை அழிக்கும் ஆப்ரிக்கன் கெழுத்தி மீனை வளர்க்க, கிருட்டிணகிரி மாவட்ட மேலான்மை தடை விதித்துள்ளது.

ஆனாலும் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக பாகலூர், ஆவலப்பள்ளி, சென்னசந்திரம், பூதிநத்தம், ஆலூர், தின்னூர், கொடியாளம் உட்பட பல்வேறு பகுதிகளில், ஆப்ரிக்கன் கெழுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

தூய்மையற்ற தண்ணீரில், இறைச்சி கழிவுகளை போட்டு வளர்க்கின்றனர். இவை உள்ளூர் சந்தைகளுக்கு மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓசூர் வட்டாட்சியர் முத்துபாண்டி, புனுகன் தொட்டி ஊர் பகுதியில் நடத்திய வண்டி ஆய்வில், அவ்வழியாக வட மாநிலங்களுக்கு சரக்குந்தில் கொண்டு செல்லப்பட்ட, 10 டன் ஆப்ரிக்கன் கெழுத்தி மீன்களை பறிமுதல் செய்து, மீன் வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.

அவர்கள், அந்த மீன் தடை செய்யப்பட்ட ஆப்ப்ரிக்கன் கெழுத்தி மீன்கள் என்பதை உறுதி செய்த்னர்.

அது குறித்து ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் ஓசூர் மீன் வளத்துறை சார் ஆய்வாளர் கோகிலா மணி தலைமையிலான அலுவலர்கள் புகார் அளித்தனர்.

10 டன் மீன்களையும் வேதி பொடி கொட்டி, பேரண்டப்பள்ளி காட்டு பகுதிக்கு அருகே, அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளம் தோண்டி கடந்த நாள் இரவு புதைத்தனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: