சிம் மாற்று (SIM Swap) மோசடி காத்துக்கொள்வது எப்படி?

சிம் மாற்று (SIM Swap) மோசடி காத்துக்கொள்வது எப்படி?

சிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன?

பணமில்லாப் பரிமாற்றம் ஊக்கப்படுத்தப்படும் நேரத்தில் பலரும் நிகழ்னிலை (ஆன்லைன்) பரிமாற்றங்களை மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

நிகழ்னிலை பன பரிமாற்றம் செய்யும் தளங்கள் மறையாகம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

இணைய உலாவியின் முகவரி பட்டையை கவணித்தால், நாம் உள்ளிடும் தள முகவரி அருகே பச்சைப்பூட்டு போன்ற குறியீடு, நாம் பயண்படுத்தும் தளம் மறையாக்கம் செய்யப்பட்டது என உறுதி செய்யும்.

HTTPS என துவங்கும் தளங்கள் எல்லாமே மறையாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும்.

இவ்வகை தளங்கள் தான் பச்சை பூட்டு குறியீட்டை உலாவியில் காட்டும்.

அப்படியிருந்தால், அங்கு நாம் கொடுக்கும் நம் தனிப்பயன் தகவல்கள், வங்கிக் கணக்கு மற்றும் கடன்/பற்று அட்டை தகவல்களை தளத்தின் வழங்கிகள் (சர்வர்) மட்டுமே பயன்படுத்த முடியும் , வேறு யாராலும் (இணைய வசதி வழங்குவோர்) இடையில் திருட முடியாது.

ஆனால், சில நேரங்களில் அப்படி மறையாக்கம் செய்யப்படாத தளம் வழியாக நாம் ஏதும் பண பரிமாற்றம் செய்திருந்தால் நமது வங்கிக் கணக்குகள், கடவுச்சொல் தகவல்களை ஊடுருவலர்களிடம் சிக்கிவிடும்.

ஆனால், இதன் மூலமாக மட்டுமே வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முடியாது. அதற்கு நமது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் தேவை.

ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற நம் தகவல்களை திருடும் ஊடுருவியாளர்கள் நம் கைபேசி இணைப்பு வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சிம் அட்டை தொலைந்துவிட்டதாகத் தெரிவிப்பார்கள்.

அதனை மொத்தமாக தடுக்கச் செய்யவும் கூறுவார்கள்.

பின்னர் புதிய சிம் கிடைத்தவுடன் அதைப் பயன்படுத்தி வங்கி பணப் பரிமாற்றத்திற்கான ஒரு முறை கடவு எண் (ஓடிபி) பெற்று பணப் பரிமாற்றம் நமக்கு தெரியாதவன்னம் செய்வார்கள்.

சிம் மாற்று (SIM Swap) மோசடி: நம்மை காத்துக்கொள்வது எப்படி?

முதலில், நாம் சமூக வலைத்தளங்களில் உண்மையான பிறப்பு நாளை குறிப்பிடாமல் இருக்க வேண்டும்.

சரியான பிறப்பு நாளை உள்ளிடுவதன் மூலம், நாமே நமது தனிப் பயன் அடையாளத்தை பொதுவில் விட்டு வைக்கிறோம்.

இதற்கு, எடுத்துக்காட்டாக தாங்கள் 12.12. 2000-ஆம் ஆண்டு பிறந்தீர்கள் என கொள்ளலாம்.

சமூக ஊடகங்களில் தங்களின் பிறந்த நாளை குறிப்பிடும் போது, 01.01.2000 என் குறிப்பிட்டால், ஆண்டு சரியாகவும், திங்களும், நாளும் வேறாக இருக்கும். இது கூடுதல் பாதுகாப்பை நமக்கு தரும்.

முடிந்த வரை தங்களின் அம்மாவின் பெயரை எங்கும் பொதுவில் பதிவிட்டு வைக்காதீர்கள்.

ஏனெனில், வங்கிகள், அம்மா பெயரை கேட்டு தங்களின் அடையாளத்தை உறுதிபடுத்தும் வளக்கம் வைத்துள்ளன.

உங்களது கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தால், உடனடியாக தங்களுக்கு தொண்டு செய்துவரும் நிறுவனத்தின் அலுவலகத்தை நாடி, ஏன் தடைபட்டுள்ளது என தெரிந்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.

யாராவது உங்களை தாமாக அழைத்து, உங்களுக்கு அழைப்பு இணைப்பின் தரத்தை உயர்த்துவதாக சொல்லி ஏதாவது தகவலோ அல்லது கைபேசியில் உள்ள ஏதாவது எண்ணையோ அழுத்தச் சொன்னால் செய்து விடாதீர்கள்.

ஏனெனில், ஊடுருவலாளர்கள், உங்களின் தனிப்பயன் குறியீடுகளை திருட முயற்சிக்கலாம்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: