சூரி கதாநாயகனாக நடிக்கும் படம்

சூரி கதாநாயகனாக நடிக்கும் படம்

சூரி கதானாயனாக நடிக்க இருக்கும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவாரா என்று கேள்வி எழுந்த நிலையில், ஆம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இந்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.

விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களை ஆர் எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் சார்பாக எடுத்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தைத் எடுக்கிறார்.

இந்தப் படத்தின் மூலமாக முதல்முறையாகக் கதாநாயகனாக நடிக்கிறார் சூரி.

தனுஷ் நடிப்பில் அசுரன் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அதற்கடுத்ததாக இந்த நகைச்சுவைப் படத்தை இயக்கவுள்ளார்.

சூரி - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள நகைச்சுவைப் படத்தை இப்போதிருந்தே கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேச துவங்கிவிட்டன.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: