கமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்

கமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்

கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சினமயி பெரும் கண்டனம் தெரிவித்திருப்பது மீண்டும் அவரை சர்ச்சையில் கொண்டு சேர்க்கும் என கோலிவுட் வட்டரங்களும் சின்னத்திரை காரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெண்களை ஆண்கள் உரசுவது கண்டிக்கத்தக்கது என சின்மயி தனது டிவிட்டர் கீச்சில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி தொகுப்பை நடுகர் கமல் திகுத்து வழங்கி வருகிறார்.  அது விசய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

தொலக்காட்சி பார்க்கும் பலரும் தொடர்ந்து இந்த நிகழ்சிகளை எல்லாம் கண்டு இரசித்து பூரிப்படைந்து வருகின்றனர்.

கடந்த நாள் ஒளிபரப்பான ஒரு தொகுப்பில், பங்கேற்பாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன், தான் பேருந்துகளில் இளம் வயதில் பயணித்ததே பெண்களை பின் பகுதிகளில் உரசுவதற்க்கு தான் என்று சொன்னார்.

உடனடியாக, அரங்கில் இருந்த அத்தனை பெண்களும், முகம் சிவந்து வெட்கத்துடன் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.

குறுக்கிட்ட கமல், சரவணன் தற்போது அவற்றை எல்லாம் விட்டு புனிதராகி விட்டார் என நகச்சுவை ததும்ப சொன்னார்.

இதையெல்லாம் தனது வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்த சின்மயி, இந்த நிகழ்சிக்கு தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

தனது கீச்சில் "நடிகர் சரவணன் பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே ஏறியதாகக் கூறுகிறார். அதையும் ஒளிபரப்புகிறார்கள். பார்வையாளர்களுக்கு அது நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பெண்களும் கைதட்டுகிறார்கள்"

இது வெட்கம், வேதனை, வருத்தம், துன்பம், துயரம் என சின்மயி உணர்கிறாராமாம்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: