பலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்

பலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்

நடிகை மெக்ரின், ஓசூர்ஆன்லைன் நிருபரை கண்டதும் கொஞ்சம் வெட்கி ஒதுங்கி செல்ல முயன்றார்.

அவரை இடை மறித்து, என்ன இந்த வெட்கம் என்று கேட்டபோது, தனது கொஞ்சலான தமிழில், எல்லாம் தனுசு தான் என்று முடித்தார்.

எல்லாம் நடிகர் தனுசு தானா... அதுவும் இந்த கொஞ்சல் பேச்சிற்கும் வெட்கத்திற்கும் என நாம் சற்று அதிர்ந்து மேலும் அவரிடம் பேச்சு கொடுத்த போது:

எந்த நடிகருக்கும் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டால் வருத்தமாகத்தான் இருக்கும். நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தை இயக்கிய சுசீந்திரன், அதில் நான் நடித்த அனைத்து காட்சிகளையும் நீக்கிவிட்டார்.

இதுகுறித்து அவர் முன்கூட்டியே சொல்லிவிட்டார்.

திரை துரையில் சில நேரங்களில் நம்முடைய கட்டுப்பாட்டையும், இயக்குனருடைய  கட்டுப்பாட்டையும் மீறி நிறைய செயல்கள் நடக்கும். இதை அப்படித்தான் எடுத்துக்கொண்டேன். எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும்,

தனுசு ஒரே டேக்கில் நடிப்பார். நானும் அதுபோல் நடிக்க முயற்சித்து வருகிறேன். அவர் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்.

தெலுங்கு சரளமாக தெரியும். நானே எனது குரலில் பேசுகிறேன். நிறைய படங்களில் கவர்ச்சிக்கு பெரும் முதன்மை இருக்கும்.

சில படங்கள் யதார்த்த வாழ்க்கையை எடுத்துக்கூறும். எனக்கு வரும் வாய்ப்பை வைத்து கவர்ச்சியாக நடிப்பதை முடிவு செய்வேன்.

விசய், அஜீத் உள்பட என பல முன்னனி நாயகர்களின் நடிப்பை ரசிக்கிறேன்.

சொல்லிக்கொண்டிருந்தவர், நம் கண்கள் அவரின் அழகை இரசிப்பதை உணர்ந்து வெட்கப்பட்டுக்கொண்டே இடம் விலகினார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: