சோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா?

சோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா?

சோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா?

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகி பாபு நடித்துள்ள படம், ஜாக்பாட்.

இதன் தயாரிப்பாளர் சூர்யா பேசும்போது, "இதில் ஜோதிகா சிலம்பம் சுழற்றியதைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. எனது தொழிலில் இன்னும் கூட எவ்வளவு நேர்மையாக இருந்தாக வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன்.

நாள் தோறும் 5 மணிக்கு எழுந்து அன்றைய வசனங்களை மனப்பாடம் செய்வார். இதை பார்த்த நான், சூரரைப் போற்று என்ற படத்துக்காக முன்கூட்டியே வசனங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்துவிட்டேன்" என்றார்.

ஜோதிகா கூறுகையில், "இந்த படத்தில் செயல் நாயகர்கள் என்னென்ன செய்வார்களோ, அதை என்னை வைத்து நடத்திக் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

ஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும் சண்டை போட்டுள்ளேன். அதற்காக சூர்யா எனக்கு ‘ஆக்‌ஷன் கிட்’ வாங்கி கொடுத்தார். எனக்கு சூர்யா தங்கை பிருந்தா ஒரு பாடல் பாடியிருக்கிறார்" என்றார்.

இந்தபடம் வரும் ஆகஸ்டு 2 ஆம் நாள் திரைக்கு வருகிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: