மூலம் என்றால் என்ன? மூலம் குறித்து தெறிந்துகொள்வோம்!

மூலம் என்றால் என்ன? மூலம் குறித்து தெறிந்துகொள்வோம்!

மூலம் என்றால் என்ன?

சூத்து (ஆசன வாய் என்பது வட மொழி சொல் ஆகும். சமற்கிருதத்தில் ஆசன என்றால் உட்காரும் பகுதி என்று பொருள். நாம் அதை குண்டி என்று அழைக்கிறோம். ஆக தமிழில் சரியான சொல் சூத்து என்று அந்த உறுப்பிற்கு பெயர் இருக்கும் பொழுது இரவல் சொல் எதற்கு?) மற்றும் அதன் குழாய் பகுதிகளில் ஏற்படும் சதை வீக்கத்தையே நாம் மூல நோய் என குறிப்பிடுகிறோம்.

குருதி நாளங்கள், தாங்கி நிற்க உதவும் திசுக்கள், சதை மீள் நார் பகுதிகள் ஆகியவை கொண்டது நமது சூத்து உறுப்பு ஆகும்.

பலருக்கு மூலநோய் இருப்பினும், ஒவ்வொருவருக்கும் தாக்கத்தின் வெளிப்பாடு வேறுவிதமாக இருக்கும்.

குறைந்தது 50 விழுக்காடு மக்கள் தொகை இந் நோயால் அல்லல் படுகிறது.

சிலர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு அதற்கான மருத்துவம் எடுக்காமலேயே விட்டு விடுகின்றனர்.

பாதிப்பு ஏற்பட்டால், சூத்து பகுதியை தூய்மையாக வைத்திருந்தாலே 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் தானாகவே அந்த நோய் நீங்கிவிடும்.

மூல நோய் குறித்த உண்மைகள்:


 • மூல நோய் என்பது, சூத்து பகுதியின் திசுக்கள், குருதி நாளங்கள் மற்றும் சதை பகுதியில் சிதைவு ஏற்படுவதால் ஏற்படும் வீக்கம் ஆகும்.
 • வீக்கமானத்து சூத்தின் உள் பகுதியிலோ அல்லது வெளிப்பகுதியிலோ ஏற்படும். அதையே உள் மூலம், வெளி மூலம் என குறிப்பிடுகின்றனர்.
 • கடுமையான மலச்சிக்கல், கடுமையான வயிற்றுப்போக்கு, கூடுதலான எடையை தூக்குவது, பிள்ளைப்பேறு அல்லது மலம் கழிக்கும்பொழுது மிகவும் வயிற்றை அழுத்துவது ஆகியவை மூல நோய் உண்டாவதற்கான அடிப்படைகளாகும்.
 • மருத்துவர், தனது ஆய்வின் மூலம், மூல நோய் மற்றும் அதன் தன்மையை உடன் அறிவார்.
 • திசு சிதைவின் தன்மையானது 1 முதல் 4 என குறியீடுகளால் வகைப்படுத்தப்படுகின்றது. 3 மற்றும் 4 என் கொண்ட குறியீடுகள் அறுவை முறை மருத்துவ தேவையை குறிக்கின்றன.


மூலம் என்றால் என்ன?

[caption id="attachment_16767" align="alignleft" width="300"]மூலம் - உள் மூலம் - வெளி மூலம் மூலம் - உள் மூலம் - வெளி மூலம்

சூத்துப் பகுதியில் ஏற்படும் தசை சிதைவினால் ஏற்படும் வீக்கமே மூலம் என அழைக்கப்படுகிறது.


வீக்கத்தின் அளவு மற்றும் அது ஏற்பட்டிறுக்கும் இடம் ஆகியவை ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.


உள் மூலம் என்பது, சூத்து குழாயின் உள் பகுதியில், சுமார் அறை அல்லது ஒரு அங்குலம் உட்புரமாக ஏற்படும். இத்தகைய மூலமே பொதுவானதாகும்.


வெளி மூலம் என்பது, வெளிப்புறம், அதாவது சூத்து வாயில் தோன்றும் வீக்கமாகும்.

அறிகுறிகள்

பெரும்பாலான நேரங்களில், மூலம் என்பது தானாக வந்து போகும் ஒரு இடையூறு ஆகும். அவை பொதுவாக தாமே சரி செய்து கொள்ளும் தன்மை கொண்டது.


மூலம் உள்ள ஒருவர் இவ்வாறான அறிகுறிகளை காண்பார்கள்:


 1. கடினமான, வலியுடன் கூடிய ஒரு வீக்கத்தை சூத்து பகுதியில் உணரலாம். இது ஒரு குருதிக் கட்டியாக இருக்கலாம். அவ்வாறு குருதிக்கட்டி இருந்தால் அதை "வெளிப்புற குருதிக்கட்டி மூலம்" என அழைப்பார்கள்.
 2. மலம் கழித்த பின்னும், தாம் முழுமையாக கழிக்கவில்லை என்ற உணர்வு மூல நோய் உள்ளவர்களுக்கு இருக்கலாம்.
 3. மலத்தில் குருதி வெளிப்பாடு காணலாம்.
 4. சூத்துப்பகுதியானது, அரிப்புடனும், சிவந்தும், வலியுடனும் இருக்கும்
 5. மலம் கழிக்கும் போதெல்லாம் வலி இருக்கும். வலியின் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.


மூலத்தின் தீவிரம் ஏற்படும்போது


 1. சூத்து பகுதியில் குருதிக் கசிவு, அதனால் குருதி சோகை.
 2. பிற நோய் தொற்று
 3. மலம் வெளியேறுவதை அடக்க இயலாமை அல்லது தொடர்ந்து மலம் வெளியேறிக்கொண்டிருக்கும் ஒரு நிலை.
 4. சூத்தின் வெளிப்புறத்திற்கும் உள் புறத்திற்குமாக தொற்று புண் புரையோடுதல். இதற்கு அறுவை மருத்துவத்தில் தான் தீர்வு.
 5. அழுத்தத்தினால் குருதி ஓட்டம் தடுக்கப்பட்ட மூலம். இது மிகவும் ஆபத்தானது. இதை முறையான அறுவை மருத்துவத்தால் சீர் செய்யவில்லை என்றால் பல சிக்கல்கள் ஏற்பட்டு கடுமையான பின் விளைவுகள் பின் புறத்தில் ஏற்படலாம்.

மூலத்தின் தன்மை அடிப்படையில் குறியீடுகள்:


 • தரவகை I :  தசை சிதைவும் அதனால் இலேசான எரிச்சல். கண்ணால் காண இயலாது.
 • தரவகை II : மலம் கழிக்கும் பொழுது சிறிய அளவில் தசை வெளியில் தள்ளப்படும். அது தானாகவே உள்ளே சென்று விடும். வலி இருக்கும்.
 • தரவகை III : தசை சிதைவு ஏற்பட்டு அதனால் வீக்கம் உண்டாகும். இது சூத்தின் வெளியே தென்படும். வெளியே ஏதோ தொங்குவது போன்ற உணர்வு இருக்கும். விரலினால் தள்ளினால், உள்ளே சென்றுவிடும்.
 • தரவகை IV : விரலினால் தள்ளினால், உள்ளே செல்லாது. பெரிதான வீக்கம் இருக்கும். மருத்து உதவி கட்டாயம் தேவை.


உள் மூலமாக இருந்தாலும் வெளி மூலமாக இருந்தாலும் நல்ல மருத்துவரை அனுகுவது அறிவார்ந்த செயல்.

தண்ணிர் அருந்துவதை முறையாக, ஒரு கடமையாக செய்யுங்கள்.

விரைவு உணவு வகைகளை தவிர்து நல்ல காய் கறி கணிகள் கொண்ட உணவிற்கு பழகுங்கள். கொய்யா மற்றும் மாதுளம் பழங்கள் நல்லது.

மலச் சிக்கல் உடையவர்கள் வாழைப்பழம் தவிர்பது நல்லது.

தேவையான அளவு எண்ணையை உணவில் கட்டாயம் பயன்படுத்துங்கள்.

மது குடித்தல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை விட்டொழியுங்கள்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: