உலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடம்

உலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடம்

உலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடமும், தண்ணீரைப் போன்று அடர்த்தியும் கொண்டது.

உலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடமும், தண்ணீரைப் போன்று அடர்த்தியும் கொண்டது.

ஆய்வாளர்கள், நிக்கல் உலோகக்கலவையினால், நுண் துளைகள் கொண்ட புரை தன்மையுடைய உலோக தகடு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அது, டைடானியம் உலோகம் போன்று திடமானதாகவும், ஆனால், எடையில், 5 மடங்கு குறைவாகவும் உள்ளது.

வானூர்திகளின் இறக்கைகளும், உயர்தர கோல்ஃப் மட்டைகளும் டைடானியம் உலோகம் கொண்டு செய்வார்கள்.

ஏனெனில், அது திடமான பொருளாகவும், எடையில் குறைவானதாகவும் இருக்கும்.

எடை குறைவானதாக இருப்பது ஏனெனில், அந்த உலோகத்தின் அணுக்கள் அடுக்கப்பட்ட அமைப்பே.

உற்பத்தி முறையில் அவ்வப்போது குறைபாடுகள் ஏற்படுவதால், அவற்றின் திடத்தன்மையில் குறைவு ஏற்படுகிறது.

அணு கட்டமைப்பு கலைஞரால் அணுக்களை முறையாக அமைப்பதன் மூலம், திடமானதாகவும், எடைக்கும் திடத்திற்குமான விகிதம் சிறப்பானதாக இருக்கும்படியும் உருவாக்க முடியும்.

பென்செல்வேனியா பலகலைகழகம், இல்லினோயிஸ் பல்கலைகழகம் மற்றும் கேம்பிரிட்சு பல்கலைகழகத்தை சேர்ந்த அறிவியலாளர்கள், இவ்வாறு நிக்கல் தகட்டின் அணுக்களை முறையாக நுண் புரைகள் கொண்டு கட்டமைத்து, டைடானிய உலோகத்தை விட திடமானதாகவும் அதே வேளையில், எடையில் 5 மடங்கு குறைவானதாகவும் உருவாக்கியுள்ளனர்.

புரையில் உள்ள இடைவெளிகளும், கட்டமைப்பும், உலோகத்தை மரக்கட்டை போன்ற இயற்கை பொருள் போன்று ஆக்கியுள்ளது.

இந்த உலோக மரக்கட்டையில் உள்ள புரை துவாரங்களின் ஊடே, நேர்மின்வாய் மற்றும் எதிர்மின்வாய் மின்வேதியியல் பொருட்களை செலுத்துவதன் மூலம், அதை ஒரு மின்கலன் கொண்ட பொருளாகவும் வடிவமைக்கலாம்.

இது, வானூர்தி இறக்கைகளுக்கும், மின்கலன் கொண்ட செயற்கை கால் கைகள் படைபதற்கும் பயன்படும்.

டைடானியம் போன்ற சிறந்த திடமான உலோகத்தில், இயற்கையாகவே பல நேரங்களில் அதன் அணு கட்டமைப்பில் குறைபாடுகள் இருப்பதால், அதன் திடத்தன்மையில் குறைபாடுகள் இருக்கும்.

ஆனால், இந்த செயற்கை உலோக மரக்கட்டை -யில், அத்தகைய குறைகள் இருக்க முடியாது என்பதால், டைடானியத்தை விட 10 மடங்கு திடமானதாக இது இருக்கும்.

இந்த உலோக மரக்கட்டை 30 விழுக்காடு மட்டுமே உலோகமும், மீதம் 70 விழுக்காடு காற்று துளைகளை கொண்டுள்ளது.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: