நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள

நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள

நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா?

கணையத்தால், போதிய அளவு இன்சுலின் இயக்குநீர் உற்பத்தி செய்ய இயலாத போது, குருதியில் இனிப்பு அளவை கட்டுப்படுத்த இயலாததால் நீரிழிவு ஏற்படுகிறது.

ஆய்வாளர்கள், கணையத்தின் உயிரணுக்களை போதிய அளவு இன்சுலின் இயக்குநீர் உற்பத்தி செய்ய கற்றுக் கொடுப்பதன் மூலம், நீரிழிவு நோயில் இருந்து விடுபட முடியுமா என ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கணையத்தில் மூன்று விதமான உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொறு இயக்குநீரை உற்பத்தி செய்து, குருதியில் உள்ள இனிப்பின் அளவை சீர் செய்கின்றன.

இதில், தொடக்க உயிரணுக்கள் குருதியில் இனிப்பின் அளவை ஏற்றும் நொதியை உற்பத்தி செய்கின்றன. இரண்டாவதாக, இரண்டாம் நிலை உயிரணுக்கள் இன்சுலின் இயக்குநீரை உற்பத்தி செய்து இனிப்பு அளவை குறைக்கிறது.

மூன்றாவது உயிரணுக்கள் சோமா-ஸ்டாடின் என்கிற இயக்குநீரை உற்பத்தி செய்து தொடக்க மற்றும் இரண்டாம் உயிரணுக்களின் செயல்பாட்டை சீரமைக்கிறது.

நீரிழிவு நோயின் வகை 1 மற்றும் 2, ஆகியவற்றில், கணையத்தின் இரண்டாம் நிலை உயிரணுக்களின் குறைபாடே இன்சுலின் பற்றாக்குறைக்கு வழிவகை செய்கிறது.

நோர்வேயின் பெர்கென் பல்கலைகழத்தின் ஆய்வாளர்கள், கணயத்தின் இந்த இரண்டாம் நிலை உயிரணுக்களை முறையாக போதிய அளவு இன்சுலின் உற்பத்தி செய்ய கற்றுக்கொடுத்தால், நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம் என கண்டறிந்துள்ளனர்.

உடலில் உள்ள ஒவ்வொறு உயிரணுவும், ஒவ்வொறு குறிப்பிட்ட வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளது.

அனால், சில வளர்ந்துவிட்ட உயிரணுக்கள், சிதைவடைவதால், தனது பணிக்கப்பட்ட வேலையை விடுத்து விடுகிறது. மேலும், இந்த தவரான உயிரணுக்கள் தங்கள் அருகில் உள்ள மற்ற முறையாக பணிக்கப்பட்ட வேலையை செய்யும் உயிரணுக்களையும் வீணடித்துவிடுகின்றன.

அதனால், சிதைவுற்ற இந்த அணுக்களை முறையாக செயல்பட தூண்டுவதன் மூலம், உடல் சீராக செயல்பட முடியும்.

இந்த ஆய்வின் மூலம், கணையத்தின் சுமார் 5 விழுக்காடு அணுக்களை மீண்டும் முறையாக செயல்பட வைத்துக் காட்டியுள்ளனர் ஆய்வாளர்கள்.

இந்த 5 விழுக்காடு என்பது, மிகவும் குறைவு என்றாலும், இத்தகைய ஆய்வை முன்னெடுப்பதன் மூலம் கணையத்தின் செயல்பாட்டை சரிசெய்ய இயலும் என நம்பிக்கை பிறந்துள்ளது.

மேலும் இதய கோளாறுகள், மூளை அணுக்களின் சிதைவுகள் ஆகியவற்றை சரி செய்யவும் இந்த ஆய்வு பயன்படும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: