பற்கரை மற்றும் பற்படலம் நீக்குவது எப்படி?

பற்கரை மற்றும் பற்படலம் நீக்குவது எப்படி?

பற்கரை -யை நீக்குவது எப்படி?

பற்படலம் என்பது, பல்லின் மேல் புறத்தில் படியும், ஒட்டும் தன்மை கொண்ட ஒரு மெல்லிய மென்மையான படலம்.

பற்படலம் ஏற்படாமல் தவிர்க்க, முறையாக பல் துலக்கினாலே பொதும்.

முறையாக பல் துலக்காதோருக்கு, நாளடைவில், இந்த பற்படலமானது கடிணமான மஞ்சள் நிறம் கொண்ட பற்கரை -யாக பல்லில் படியும்.

நாம் உணவு உட்கொள்ளும் பொழுது, நம் வாயில் உள்ள நுண்ணுயிர்கள் உணவில் உள்ள மாவுச்சத்தை, அமிலமாக மாற்றும்.

வாயை தூய்மையாக வைக்காதோருக்கு, இந்த அமிலம், மீதம் உள்ள உணவு துகள்களும் எச்சிலும் சேர்ந்து பற்கரையாக படியும்.

முதலில் தோன்றும் பற்படலத்தை எளிதாக பல் துலக்குவதன் மூலம் நீக்கி விடலாம்.

ஆனால், பற்கரை தோன்றிவிட்டால், அதை நீக்க கண்டிப்பாக மருத்துவர் உதவி தேவைப்படும்.

வாய் தூய்மை இல்லாதோருக்கு, வாய் நாற்றம், பல் மக்குதல், ஈறுகளில் தொற்று என பல இன்னலுக்கு ஆளாவார்கள்.

முறையாக வாய் தூய்மையை பேணாதோருக்கு இதய நோய், குலைக்காய்ச்சல் மற்றும் ஞாபக மறதி போன்ற உடல் நலக் குறைவுகள் ஏற்படலாம்.

பல் மருத்துவர் கூட்டமைப்புகள், ஒரு மனிதர் நாள் ஒன்றிற்கு இரு முறை பல் துலக்குவது சிறந்தது என எடுத்துக் கூறுகின்றனர்.

ஃபுளூரைட்டு கலந்த பற்பசைகள் சிறந்தது எனவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பல் துலக்கும் முறை
  • முதலில், வாயின் மேல் பற்களை துலக்க வேண்டும்.
  • பற்குச்சியை சுழன்ற வாக்கில் பல்லின் மீது தேய்ப்பதால், பல் நன்கு தூய்மையடையும்.
  • பற்களின் முன் மற்றும் பின் புறங்களை கவணித்து தேய்க்க வேண்டும்.
  • மேல் பற்களை துலக்கிய பின் கீழ் பற்களையும் அதே போன்று துலக்க வேண்டும்.
  • பற்பசையை அதிக நேரத்திற்கு வாயில் விட்டு வைக்கக் கூடாது.
  • அதிக நேரம் பல்லை தேய்த்துக்கொண்டே இருக்கக் கூடாது.
  • 30 விணாடிகள் பல் துலக்குவது என்பது வீண். அதே வேளையில் 3 நிமிடங்களுக்கு மேல் பல்லை தேய்த்தால், பல் வீணாகும்.

ஈறு அழற்சி உடையவர்கள், கடைகளில் கிடைக்கும் வாய் கொப்பளிப்பான்களை பயன்படுத்தினால்,பாதிப்பில் இருந்து தப்பலாம்.

பல்லில் நோய் தொற்று உடையவர்கள், மின் பற்குச்சி பயன்படுத்துவதால், அதிகம் பலனடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இனிப்புகளை உண்டால், உடனே வாயை தண்ணீரால் கொப்பளித்துக் கொள்வது சிறந்தது.

காபி, டீ, பால் மற்றும் அது போன்ற பொருட்களை உட்கொண்டாலும் வாயை உடனே தண்ணீரால் கொப்பளிப்பது நல்லது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: