புவி குளிர்ச்சி - புவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வு

புவி குளிர்ச்சி - புவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வு

புவி குளிர்ச்சி - புவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா?

புதிய ஆய்வுகள், இதுவரை ஆய்வாளர்கள், தூசு படலத்தால் ஏற்படும் புவி குளிர்ச்சி, அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து குறைவாக மதிப்பீடு செய்துள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே, தற்பொழுது, புவி வெப்பமாவது குறித்த மறு கணக்கீடு தேவை உருவாகியுள்ளது.

அறிவியல் குழுக்கள், புவி வெப்பமடைவது மனிதர்களால் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வளிமங்கள் என்பதையும், புவி குளிர்விக்கப்படுவது தூசு படலங்களாலேயும் என அறிந்து வைத்திருந்தனர்.

செருசலேமின் ஃகீப்புரூ பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் ரோஸென்பெல்ட் , தூசு படலங்கள் நம் புவியை குளிர்விக்கும் அளவு குறித்து அறிவியலாளர்கள் இதுவரை குறைத்து மதிப்பீடு செய்து வந்துள்ளனர் என கண்டறிந்துள்ளார்.

ஆகவே புவி வெப்பமடையும் வேகம் குறித்து கணக்கிட, முதலில், தூசு படலங்களால் புவி கூளிர்விக்கப்படுவது குறித்த தெளிவான கணக்கீடு தேவை என எடுத்துரைக்கிறார்.

தூசு படலமானது, காற்றில் மிதக்கும் நுண் தூசிகளால் ஆன ஒரு படலமாகும்.

அவை, பாலை நிலங்களில் ஏற்படும் தூசுகளாலும் அல்லது மனிதன் தோற்றுவிக்கும் கரி புகைகள் மற்றும் வண்டிகளின் மாசுக்களாலும் ஏற்படுகிறது.

இந்த, தூசு படலமானது, நமது பிவியை மேகமாக மூடி, அதனால், ஞாயிறு கதிர்கள் பெருமளவில் புவியை தாக்குவதை தவிர்த்து, ஞாயிறின் வெப்பத்தை எதிரொளித்து அனுப்புகிறது.

மேகமானது, காற்றில் உள்ள நீர்த்துளிகளால் ஆனது.

எவ்வளவிற்கு எவ்வளவு தூசுகள் அந்த மேகத்தில் கலக்கிறதோ, அவ்வளவு நீர்த்துளிகளை அந்த மேகத்தால் சுமக்க முடியும்.

மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் ஒன்று சேர்வதால் மழை ஏற்படுகிறது.

தூசுகள், அதிகளவில் நீர்த்துளிகளை தாங்கி நிற்பதால், மேகங்கள் அதிக நேரம் வானில் இருக்கும்.

இத்தகைய மேகங்கள் பரப்பளவில் படர்ந்து இருப்பதால், பெரியளவில் ஞாயிறு கதிர்கள் புவியை அடைய விடாமல் தடுக்கும்.

மேலும், இந்த தூசுகள் அடங்கிய மேகங்கள் பெருமளவில் எதிரொளிக்கும் தன்மை கொண்டிருக்கும்.

இதுவரை, ஆய்வாளர்கள், மேக கூட்டங்களை எல்லாம் ஒரே தன்மையுடையவையாக மட்டுமே பார்த்தனர்.

முதல் முறையாக, செயற்கைகோள் உதவி கொண்டு, தூசு நிறைந்த மேகங்கள் எவ்வகையில் புவியை குளிர்விக்கின்றன என்பதை பேராசிரியர் டேனியல் ரோஸென்பெல்ட் மற்றும் அவரின் குழுவினர் கணக்கிட்டுள்ளார்கள்.

புவி, இந்த தூசுகளால், நாம் கணக்கிட்டு வைத்ததை விட பெருமளவில் குளிர்விக்கப்படுகிறது என்றால், ஏன் இன்னும் புவி வெப்பமடைந்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில், நாம், பசுமைக்குடில் வளிமங்களின் தீமைகள் குறித்து குறைத்து மதிப்பிட்டுள்ளோம் என்பதே புதிய ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

புவி வெப்பமடைவதால், காற்றில் தூசுக்கள் கலப்பது அதிகமாகி, அதனால் மனிதர்கள் பல வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: