எத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது?

எத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது?

எத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் இன்றைய சூழலில் சிறந்ததாக இருக்கும் என நினைத்தாலே குழப்பம் வருகிறதா?

இதோ... உங்களுக்கான வழிகாட்டி!

காட்சி தெளிவு (Pixels & Resolution)

தொலைக்காட்சி பெட்டி வாங்கப்போகிறோம் என்றால், நமக்கு கடல் அளவு தகவல்கள் நம்மை வந்தடைகின்றன.

8K, 4K என்று துவங்கும் இந்த தகவல்கள், பல வகையில் நம்மை குழப்ப முயல்கின்றன. அதனால், முதலில் இதை குறித்து தெரிந்துகொள்வோம்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய நீர்மப் படிகக் காட்சி திரை கொண்ட தொலைக்காட்சிகள் சரிதிட்டமான காட்சி அமைப்பை கொண்டிருந்தன. அவை பொதுவாக 352 படப்புள்ளி கூறாக்கம் என்ற காட்சி தெளிவு அமைப்பு கொண்டிருந்தது.

அதாவது ஒரு படக் காட்சிக்கு 352 வரிகள் என்ற அளவில்.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால், 42 நிமிடங்களுக்கான ஒளிப்படக் காட்சி, சுமார் 350 mb சேமிப்பு இடத்தை எடுத்து கொண்டது.

அதை விட பண் மடங்கு காட்சி தெளிவுடன் வந்தது உயர் காட்சி தெளிவு கொண்ட திரைகள். இத்தகைய தெளிவு என்பது, 720 கூறாக்கம் என்ற காட்சி தெளிவாகும்.

அதாவது ஒரு படக் காட்சிக்கு 720 வரிகள் என்ற அளவில்.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால், 42 நிமிடங்களுக்கான ஒளிப்படக் காட்சி, சுமார் 1.1 GB சேமிப்பு இடத்தை எடுத்து கொண்டது.

அதற்கு அடுத்தபடியாக வந்தது தான் தீவிர உயர் காட்சி திரைகள் கொண்ட தொலைக்காட்சிகள்.

இந்த தீவிர உயர் காட்சி திரைகள் என்பது உயர் காட்சி திரைகளை விட சுமார் 4 மடங்கு தெளிவு கொண்டது.

இதை 4K என்றும் அழைக்கிறார்கள்.

8K, இந்த 4K -யை விட 4 மடங்கு படத் தெளிவு கொண்டது. சந்தையில் இன்னும் முழுமையாக அறிமுகமாகததால், இதன் விலை பல மடங்கு கூடுதல்.

உயர் இயங்கு திறன் வீச்சு (HDR)

நல்ல தரமான 4K தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்த உயர் இயங்கு திறன் வீச்சு அமைப்பை கொண்டிருக்கும்.

இதனால் என்ன பயன் என்றால், ஒளிமிக்க காட்சிகளை தெளிவான பொலிவுடனும், கறும் நிற காட்சிகளை அதற்கு ஏற்றபடியும் காட்டும்.

முழு வரிசை பின் ஒளி அமைப்பு (Full Array Back-lighting)

முழு வரிசை பின் ஒளி அமைப்பு என்பது, தொலைக்காட்சி திரையின் ஓரங்களில் இருந்து ஒளியை வீசாமை, முழு திரையையும் ஒளிர்விக்கும் முறையாகும்.

இதனால், செயற்கை அறிவாற்றல் முறை கொண்டு, காட்சியின் ஒளி அமைப்பிற்கு தக்கவாறு தேவையான இடங்களைல் அதிக ஒளிவிப்பும், தேவையற்ற இடங்களின் மங்கலான ஒளி அமைப்பையும் ஏற்படுத்தி சிறந்த ஒளிக்காட்சி அமைப்பை தரும்.

ஒளி உமிழும் இருமுனையம் (Light Emitting Diode - LED)

ஒளி உமிழும் இருமுனையம் திரை கொண்ட தொலைக்காட்சி என்பது, திரை முழுதும் ஒளி உமிழும் இருமுனையம் கொண்டதாக இருக்கிறது என குழம்ப வேண்டாம்.

நீர்மப் படிகக் காட்சி (LCD) திரைகள் தான் எல்லா தொலைக்காட்சி திரைகளிலும் பயன்படுகிறது.

முன்பு, நம் வீடுகளில் விளக்காக பயன்படுத்தப்பட்ட "தண் எதிர்மின்வாய்க் குழல் விளக்கு" -களை (CFL) கொண்டு பின் புற ஒளி அமைப்பு திரைகளை ஒளிர்விக்க பயன்படுத்தப்பட்டது.

அதற்கு பதில், ஒளி உமிழும் இருமுனையம் விளக்குகள் தற்போது திரையை ஒளிர்விக்க பயன்படுகிறது.

இதைத் தான் சுருக்கமாக LED திரை என்று அழைக்கிறார்கள்.

இதனால் தான் உயர் இயங்கு திறன் வீச்சு மற்றும் முழு வரிசை பின் ஒளி அமைப்பு ஆகியவற்றை அமைக்க முடிகிறது.

கரிம ஒளி உமிழும் இருமுனையம் (Organic Light Emitting Diode - OLED)

கரிம ஒளி உமிழும் இருமுனையம், அளவில் மிக பொடியதாக உருவாக்க முடியும்.

இதனால், ஒரு படப்புள்ளிக்கு ஒன்று என்கிற வீதத்திலும் இதை வரிசை படுத்தி அமைக்கலாம்.

ஆகவே, ஒவ்வொறு படப்புள்ளியின் ஒளிர்விப்பை முழுமையாக கட்டுப்ப்டடுத்தி, கருப்பாக இருக்க வேண்டிய இடங்களை முழு கருப்பகவும், ஒளிர்வாக இருக்க வேண்டிய இடங்களை தெளிவான ஒளியுடனும் காட்சிப் படுத்தலாம்.

மிகத் தெளிவான காட்சி அமைப்பிற்கு கரிம ஒளி உமிழும் இருமுனையம் பயன்படுத்துகிறார்கள்.

பங்கீட்டு ஒளி உமிழும் இருமுனையம் (Quantum Light Emitting Diode - QLED)

பங்கீட்டு ஒளி உமிழும் இருமுனையம் என்பது, வழக்கமான ஒளி உமிழும் இருமுனையம் கொண்டு திரையை ஒளிர்விப்பதே.

ஆனால், இதில் தொழில் நுட்ப முறையில் மட்டும் வேறுபாடு உள்ளது.

இதை சாம்சங் நிறுவனம் ஒரு விற்பனை திட்டமுறைக்காக பயன்படுத்துகிறது. இந்த தொழில் நுட்பத்திற்கு காப்புறிமையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

திரை அளவு

இன்றைய சூழலில், திரையின் அளவு சுமார் 55 அங்குலம் இருப்பின் சிறப்பு.

நல்ல தெளிவான திரையில் ஒரு ஒளிக்காட்சியை தெளிவாக பார்க்க வேண்டுமேயானால், 55 அங்குலம் கொண்ட திரையாவது தேவையாக இருக்கிறது.

திறன் தொலைக்காட்சி (Smart Television)

திறன் தொலைக்காட்சி என்று வந்து விட்டால், அதன் இயங்கு தளம் என்ன? அவற்றில் எது சிறந்தது எனப் பார்ப்போம்.

எல்லா திறன் தொலைக்காட்சிகளும் இணைய இணைப்பின் மூலம் செயல்பட வல்லது.

LG webOS, Roku TV, Samsung Smart TV (Tizen), Android TV, Vizio SmartCast, Amazon Fire TV OS என பல இயங்கு தளங்கள் கிடைகின்றன.

நீங்கள் கூகுளின் அடிமை என்றால், கண்ணை மூடிகொண்டு ஆண்டிராய்டு இயங்கு தளத்தை தேர்வு செய்யுங்கள்.

இல்லையேல், ரோக்கு, எல்ஜி-யின் வெப்-ஓஎஸ் அல்லது அமேசான் பயர் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

ஒன்றை நன்றாக கவணிக்க வேண்டும். இந்த இயங்கு தளங்களை வடிவமைத்தவர்களின் விளம்பரங்கள் எவ்வளவு நம் திரைகளில் தோன்றும்.

எந்தளவிற்கு நமக்கு பயனற்ற செயலிகளை நம் திறன் தொலைக்காட்சியில் நிறுவ முயல்வார்கள் என்பதை நன்கு அறிந்து முடிவெடுங்கள்.

ஏனெனில், தேவையற்ற செயலிகள் நம்மை வேவு பார்க்கும். அதனால், நம் தனி நபர் பயன்பாடு தகவல்கள் திரட்டப்படலாம்.

நம் மீது தினிக்கப்படும் செயலிகளின் தன்மை, நாம் வாங்கும் தொலைக்காட்சி உற்பத்தியாளரை பொருத்து வேறுபடும்.

சில உற்பத்தியாளர்கள் பண்பானவர்களாக இருப்பார்கள். சிலர் தரம் தாழ்ந்து செயல்படுவார்கள்.

ஒலி அமைப்பு

நல்ல திரை காட்சி மட்டும் நாம் வாங்கும் தொலைக்காட்சியில் இருந்தால் போதாது.

நல்ல ஒலி அமைப்பும் இருக்க வேண்டும். டால்பி அல்லது சவுண்ட் பார் என்கிற ஒலி அமைப்புகள் அல்லது அவற்றை வடமற்று இணைக்கும் வசதி கொண்ட தொலைக்காட்சி வாங்குவது சிறந்தது.

இணைப்பு

குறைந்தது 3 HDMI துவாரமாவது இருக்க வேண்டும். இது பிற கருவிகளை தொலைக்காட்சி பெட்டி -யில் இணைப்பதற்கு பயன்படும்.

எதை வாங்க?

தரமற்ற சீன தயாரிப்புகளை வாங்காதீர்கள்.

ரூபாய் 25,000 முதல் தரமான தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன. சுமார் ரூபாய் 50,000 திற்கு மேல் முதலீடு செய்தால், மிகத் தரமான தொலைக்காட்சி பெட்டி வாங்கலாம்.

சோனி, எல்ஜி, சாம்சங், விசியோ, சேன்யோ, வூ, பானாசோனிக், ஹேயர், டிசிஎல் போன்றவற்றில், தங்களின் வரவு செலவிற்கு ஏற்ப தரமான தொலைக்காட்சியை வாங்குங்கள்.

கடனில் இத்தகைய பொருட்களை வாங்குவதால் தங்களின் சிபில் மதிப்பீடு குறையும்.

தவிர்த்தால், பின் நாளில், வீட்டுக் கடனோ அல்லது தொழில் கடனோ தேவை என்றால் வங்கிகளில் எளிதாக குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: