மண நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை

மண நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை

மன நோய் கண்டறிய மெய்நிகர் உண்மை!

மன நோயின் தன்மையை கண்டறிவது என்பது பல சிக்கல்கள் நிறைந்தது.

உண்மையான நிலையை அறிந்து கொள்ள மனநல மருத்துவர்கள் பல சிக்கலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டி இருக்கும்.

அப்படியே முயன்றாலும், 85 விழுக்காடு அளவிற்கு மன நோய் இருப்பதை மருத்துவர்களால் கண்டறிய முடிவதில்லை. மேலும், 35 விழுக்காடு அளவிற்கு தவறான முடிவிற்கு மருத்துவர்கள் வந்துவிடுகின்றனர்.

உலக உடல் நலம் அமைப்பு, ஒரு மன நோய் குணப்படுத்தப்பட வேண்டுமேயானால், முதலில் நோய் கண்டறியப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.

இப்பொழுது, மருத்துவர்களும், ஆராய்வாளர்களும், மெய்நிகர் உண்மை வழிமுறைகளை கொண்டு, மன நோய் கண்டறிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த மெய்நிகர் உண்மை வழிமுறைகள், மன நோயை குணப்படுத்த இயலும் என்கிற நிலையில், நோயை கண்டறியவும் இது பேர் உதவியாக இருக்கப் போகிறது.

மெய்நிகர் உண்மையில் பெரிய வாய்ப்பு என்னவென்றால், மன அழுத்தம் ஏற்படுத்தி நோயின் அறிகுறியை மருத்துவர் கண்டறிய, செயற்கையாக ஒரு சூழலை இதன் மூலம் தூண்ட முடியும்.

மீண்டும் மீண்டும், சூழலை ஏற்படுத்தி ஆராய்வை மேற்கொள்வதால், நோயின் தாக்குதலின் தீவிரம் மற்றும் அது ஏற்படும் சூழல் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடலாம்.

அல்சைமர் சமூகம் ஆராய்வு

கடந்த ஆண்டு (2018) செப்டம்பர் திங்களில், ஐக்கிய குடியரசில் இயங்கும் அல்சைமர் சமூகம் என்ற அமைப்பு, தாங்கள் மெய்நிகர் உண்மை கொண்டு 3 ஆண்டுகள் ஆராய்வுகளில் ஈடுபட்டதாகவும் அதனால் அல்சைமர் என்றழைக்கப்படுகிற மறதி நோய் குறித்து முன்னரே கண்டறிய இயல்கிறது என ஆராய்வு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கெடுப்பாளர்களிடம் மெய்நிகர் உண்மை கருவி கொண்டு, வழிப் பாதையை காட்டி, பின்பு அவர்களை அந்த வழியை பயன்படுத்த தூண்டி விளைவுகளை ஆராய்ந்துள்ளனர்.


HTC Vive - மெய்நிகர் உண்மை கருவி HTC Vive - மெய்நிகர் உண்மை கருவி

இதன் மூலம் ஆராய்ந்த போது, மிக துல்லியமாக மறதி நோயின் தாக்குதல் தன்மையை கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்பு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளால், பல தவறான முடிவுகள் பெறப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்விற்கு HTC Vive என்ற கருவியை பயன்படுத்துயுள்ளனர்.

இரானுவத்தில்

இத்தகைய மெய்நிகர் உண்மை ஆராய்வுகள் இரானுவ வீரர்களுக்கு மன நலம் பேண மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மருத்துவமனையில், ஓர் போர் சூழலை அவர்களிடம் மெய்நிகராக உருவாக்குவதன் மூலம், அவர்களின் இதய துடிப்பு, மன அழுத்த நிலை குறித்து துல்லியமாக கணக்கிட இயல்கிறது.

பீதி சீர்குலைவு (Panic Disorder)

பீதி சீர்குலைவு என்றழைக்கப்படும் மன நல பாதிப்புடையவர்கள், மருத்துவமனை சூழலில், தங்களின் மன நோய் குறித்த தன்மையை வெளிப்படுத்த மாட்டார்கள்.

அவர்களுக்கு பொதுவில், கூட்டம் நிறைந்த இடங்கள் மற்றும் சூழலை உருவாக்கும் சூழ் நிலைகளில் மட்டுமே நோய் தாக்குதல் வெளிப்படும்.

இத்தகையவர்களின் நோய் தன்மையை கண்டறிய இந்த மெய்நிகர் உண்மை பேருதவி புரிகிறது.

தேவைக்கேற்ற சூழல்

மெய்நிகர் உண்மை பயன்பாட்டின் சிறப்பு என்னவென்றால், மன நோய்யை தூண்டும் காட்சி அமைப்பை துல்லியமாக தேவைக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம்.

அதனால், சூழ்நிலையை நோயாளுகளுக்கு மெய்நிகராக ஏற்படுத்தி, நோயின் அறிகுறிகளை வெளிக்கொணரலாம்.

மேலும், மீண்டும் மீண்டும் அதே சூழலை துல்லியமாக உருவாக்க முடியும் என்பதால், நோய் குறித்த ஆராய்வை எளிதில் மேற்கொள்ளலாம்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: