திருட்டை தடுக்க கணிதவியல் மூலம் கணக்கிட முடிகிறது

திருட்டை தடுக்க கணிதவியல் மூலம் கணக்கிட முடிகிறது

ஆராய்வாளர்கள், திருட்டை தடுக்க கணிதவியல் மூலம் நேர்ப்பாங்கற்ற மாதிரியை, காவலர்கள் இருப்பதற்கும், நேரத்திற்கும், இடத்திற்குமாக தொடர்படுத்தி, வீடு புகுந்து கொள்ளை நிகழ்வுகளை கணக்கிட்டுள்ளனர்.

பெரும்பாலான குற்ற நிகழ்வுகள் பேரூர் பகுதிகளில் நடப்பது போல வீடு புகுந்து திருடும் நிகழ்வுகளும் அப்பகுதிகளிலேயே பெரும்பாலும் நடைபெருகிறது.

பொதுவாக வீடு புகுந்து திருட்டு என்பது பேரூர் பகுதிகளில் அதிகளவு நிகழ்வது ஏனெனில், தொத்துக்கள் பெருவாரியாக இந்த பகுதிகளில் தான் குவிந்துள்ளது.

மேலும், வளர்ந்துவிட்ட பேரூர் பகுதிகளில், தனி நபர்களை அப்பகுதிகளில் வாழ்வோர் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.

இதனால், மக்களோடு மக்களாக கொள்ளையர்களும் அந்த பகுதியிலேயே காவல்துறையிடம் இருந்து மறைந்து வாழ முடிகிறது.

சாலைகளும், கட்டிடங்களும் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், கொள்ளையர்களுக்கு, தங்களின் திட்டங்களை முறையாக வடிவமைத்துக்கொள்ள உதவியாகிவிடுகிறது.

கணித மாதிரிகள்

ஏற்கனவே, பல கணித மாதிரிகள், கொள்ளை நடக்கத்தக்க குடியிருப்புகள், சூழல்கள், வீட்டு அமைப்புகள் என பலவற்றை, பழைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு, அலைமையங்களை வரைந்துள்ளனர்.

இத்தகைய திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள், வினைமுதல் அடிப்படையிலும், சில வகையீட்டு சமன்பாடு அடிப்படையிலும், சில காவல் துறையினரின் இருப்பை கணக்கிட்டும் உருவாக்கப்பட்டன.

இத்தகைய கணிதவியல் மாதிரிகள், கொள்ளையர்கள், தாங்கள் ஏற்கனவே வந்து சென்ற குடியிறுப்பு பகுதிகளுக்கு வருவதை பெரிதும் விரும்புவர் என கணக்கிட்டுள்ளது.

கொள்ளையர்கள் அந்த பகுதிகளை தேர்வு செய்வது ஏனெனில், அவர்களுக்கு, வந்து செல்வது என்பது ஒரு பழகிய இடமாகவும், பாதுகாப்பு கருவிகள் குறித்த தெளிவும் நன்றாக இருக்கும் என்பதால் தான்.

மேலும், இந்த குடியிருப்பு பகுதிகளில் எத்தகைய பொருட்கள் கிடைக்கும் என்பதும் இவர்களுக்கு தோராயமாக தெரிந்திருக்கும்.

ஒரு வீட்டின் அமைப்பு கணிதவியல் மாதிரி மூலம் திருடர்களை "வருக" என்று வரவேற்பது போல கணக்கிட்டு இருப்பதாக கண்டறியப்பட்டால், அத்தகைய அமைப்புகளை கொண்ட எல்லா வீடுகளும் அந்த வரவேற்பை கொள்ளையர்களுக்கு தரும்.

இது, ஒரு ஊருக்கு மட்டும் என்றில்லாமல், உலகம் முழுவதும் உள்ள எல்லா கொள்ளையருக்கும் பொருந்துகிறது.

திருட்டை தடுக்க கணிதவியல் மூலம் நேர்ப்பாங்கற்ற மாதிரி

நேர்ப்பாங்கற்ற மாதிரி ஒன்றை வடக்கு எசுப்பானியம் (ஸ்பெயின்) நாட்டின் காட்டலோனியா பகுதியின் கொள்ளை நிகழ்வுகளை கணக்கில் கொண்டு கணிதவியல் ஆராய்வாளர்கள் சோவன் சால்டானா, மரிய அகுரெலெசு, ஆல்பெர்ட் அவின்யோ, மார்டா பெல்லிசெர் மற்றும் சோர்டி ரிப்போல் ஆகியோர் அடங்கிய குழு வடிவமைத்துள்ளது.

இவர்கள், இடத்தை கணக்கில் கொள்ளாமல், கொள்ளை நடக்கும் நேரத்தை மட்டும் கணக்கிட்டு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

எப்படி, வானிலை மாற்றங்களை, கணிதவியல் மூலம் கணக்கிட முடிகிறதோ, அதே போன்று, கணிதவியல் மூலம், கொள்ளை நிகழ்வுகளையும் கணக்கிட முடியும் என காட்டலோனியாவின் காவல் துறையில் பணியாற்றும் கணிதவியலாளர் பெரே போக் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணிதவியலாளர்கள், கணிதவியல் மாதிரிகளை உருவாக்கும் போது, பகுதியில் வாழும் மனிதர்களின் சராசரி வயது, பகுதியின் வயது, வீடுகளின் வயது, கொள்ளை நிகழ்வுகளின் எண்ணிக்கை, கொள்ளை நடக்கும் நேரம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.

ஆகவே திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள் துல்லியமாக அடுத்த கொள்ளை எங்கு, எப்பொழுது நடக்க இருக்கிறது என்பதை காட்டுகிறது.

இந்த மாதிரிகள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் இருப்பதால், மக்களும், காவல் துறையினரும் எளிதில் இவற்றை பயன்படுத்தி தம் பகுதிகளை காத்துக்கொள்ளலாம்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: