கரிம நுண் ஊசிகள்: வலியில்லா குறைந்த விலை தீர்வு

கரிம நுண் ஊசிகள்: வலியில்லா குறைந்த விலை தீர்வு

கரிம நுண் ஊசிகள்: 1 மில்லி மீட்டர் அளவே கொண்ட கரிமத்தினால் ஆன சிறு நுண் ஊசிகளை கரக்பூர்-ல் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அவற்றை முறையாக ஒரு இழை ஒட்டியில் வைத்து பயண்படுத்தினால், அது வலியில்லாமல் மருந்தை தோல் வழியே ஏற்ற பயண்படும்.

சென்ற ஆண்டே, இதே குழு, இது போன்ற நுண் ஊசிகளை ஒளி உணர் பல்லுருப்பி (பாலிமெர்) கொண்டு உருவாக்கினார்கள். ஆனால், அந்த ஊசிகள் போதுமான அளவு கடினாமாக இல்லை, மற்றும் உயிர் இசைவுறு தன்மையிலும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

இதற்காக, காற்றில்லா வெப்பமூட்டல் (வெப்பத்தால் பகுப்பு) முறையை பயண்படுத்தி, அதிகளவு சூட்டை ஏற்றி பொருளின் தன்மையை மாற்றினர்.

இதனால், 300 மடங்கு திடமான கண்ணாடி போன்ற கரிம ஊசிகள் உற்பத்தியானது.

இவை, கரிமத்தினால் ஆனதால், உயிர் இசைவுறு தன்மை அடைந்தன.

வெப்பமானது, பல்லுருப்பியில் இருந்த உயிரி (ஆக்சிசன்) மற்றும் தழை (நைட்ரொசென்) காற்று ஆகியவை நீக்கி முழுமையாக கரிமத்தினால் மட்டும் ஆன ஊசிகள் கிடைத்தது.

எலிகளில் பயண்படுத்து ஆய்வு செய்தபோது எவ்வித நச்சுத்தன்மையையும் இந்த ஊசிகள் காட்டவில்லை.

ஊசிகள் 10 க்கு 10 என்ற அளவில் அடுக்கப்பட்டு ஒட்டியில் வைத்து மருந்து ஏற்ற பயண்படுத்தப்பட்டது.

ஒட்டிகளை 5 மி.லி மருந்தேற்று பீற்றுக்குழல் (சிரிஞ்) சேர்க்கப்பட்டு மருந்து பாய்வு வீதம் கணக்கிடப்பட்டது.

பாய்வு வீதம், பீற்றுக்குழலில் ஏற்படும் அழுத்தத்திற்கு தக்க இருப்பதால், மருந்து ஏற்றுவதற்கான அழுத்தத்தை எழிதில் கட்டுப்படுத்தலாம் என கண்டறியப்பட்டது.

மருந்து ஏற்றுவது

இத்தகைய ஊசியானது இன்சுலின் குறைபாடால் அல்லல்படுவோருக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும்

பொதுவாக, ஏதாவது ஒரு பொருளை நமது தோலின் மேல் அழுத்தி நுழைக்க முயன்றால், நமது தோல் அதற்கு எதிர்வினையாக ஒரு எதிர்ப்பை வெளிப்படுத்தும்.

ஒரு சிறந்த ஊசியானது, அத்தகைய எதிர்ப்பு விசைகளை தாண்டி தோலிநுள் உள் நுளைய வேண்டும்.

அமுக்குதல் மற்றும் நெளித்தல் ஆய்வுகள் பயண்படுத்து, ஆய்வாளர்கள் தாம் உருவாக்கிய ஊசிகள் உடையவோ அல்லது வளையவோ இல்லை என கண்டறிந்தனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: