முப்பரிமாண அச்சாக்கம் - ஒளியை கொண்டு நொடிப்பொழுதில்

முப்பரிமாண அச்சாக்கம் - ஒளியை கொண்டு நொடிப்பொழுதில்
முப்பரிமாண அச்சாக்கம் - இதுவரை முப்பரிமாண அச்சாக்கம் முறை என்பது, அடுக்கடுக்காக நெகிழியை அமைத்து அதன் மூலம் ஒரு முப்பரிணாம பொருளை அச்சிடுவதாக இருந்தது.

இதற்கு மாற்றாக பெர்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலை கழகத்தை சார்ந்த ஆராய்வாளர்கள், முப்பிரிணாம அச்சிடும் முறையை ஒரு கொழ-கொழக்கும் பிசின் மீது ஒளியை பாய்ச்சி அதை திடத் தன்மை வாய்ந்த முப்பரிணாம பொருளாக அச்சடித்துள்ளனர்.

முப்பரிணாம அச்சு முப்பரிணாம அச்சு

கணிணி வரைவி (Computer Topography) மருத்துவத்தில் உடல் உறுப்பு நிலை குறித்த முப்பரிணாம படங்களை உருவாக்க துணை புரிகிறது.

அதே தொழில் நுட்பத்தை, இதுவரை, ஒரு பொருளை உருவாக்குவதற்கு என்று யாரும் பயன்படுத்தியதில்லை.

ஆனால், முதல் முறையாக, கலிபோர்னியா பல்கலை கழக மின்னியல் பொறியாளர்கள், இதை பயன் படுத்தி "கணக்கிடு அச்சு கல்லச்சுக்கலை" (Computed Axial Lithography) என்ற நுட்பம் மூலம் பொருட்களை முப்பரிணாமமாக அச்சடித்துள்ளனர்.

இந்த தொழில் நுட்பமானது, ஒளி கூருணர்வு கொண்ட ஒரு பிசின் போன்ற பொருளை சுழலும் குடுவையில் வைத்து, அதை சுழற்சிக்கு ஏற்ப கணக்கிடப்பட்ட ஒளி வரிசைமுறை அமைப்பை செலுத்தி ஒரு முப்பரிணாம பொருளை அச்சிடுவதாகும்.

ஒளியை குறிப்பிட்ட இடங்களின் மீது பாய்ச்சுவதன் மூலம், அந்த பிசின் போன்ற பொருள் வேதிவினை புரிந்து அதன் தன்மை மாறி, அது ஒரு பொருளாக வடிவு பெறுகிறது.

மருத்துவ கணிணி வரைவி இயந்திரத்தில் உள்ள எக்ஸ் கதிர் குழாய் நோயாளியியை சுழன்று படம் பிடிப்பதால், ஒரு முப்பரிணாம படத்தை அதனால் உருவாக்க முடிகிறது.

அதே முறையை, தலைகீழாக, கணிணியானது தன்னிடம் பதிவேற்றப்பட்ட முப்பரிணாம படத்திற்கு ஏற்ப ஒளியை சுழன்று பொருளின் மீது வீசுவதன் மூலம், இங்கே ஒரு முப்பரிமாண அச்சாக்கம் உருவாகிறது.இந்த முறையில், ஒளி வீசும் கருவி நிலையாகவும், பொருள் சுழல்வதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால், நேரம் மீதம் ஆகிறது.

மேலும், அடுக்கடுக்கான நெகிழி அச்சாக பொருள் தோன்றாமல், ஒரே சீரான மேற்பரப்புடைய பொருளாக உருப்பெறுகிறது.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: