ஊடுருவலாளர்களை தடுக்க செயற்கை அறிவாற்றல்

ஊடுருவலாளர்களை தடுக்க செயற்கை அறிவாற்றல்

செயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது

ஏதாவது ஒரு சூழலில் நாம் நமது தனிப்பயன் தகவல்களை இணைய தளங்களில் பதிவிடுவதால், நமது தனிப்பயன் தகவல்கள் இணைய வழங்கிகளில் சேமித்து வைக்கப்படும் நிலை வந்துவிடுகிறது.

எடுத்துக்காட்டாக, நாம் நிகழ்நிலை தளத்தில் ஒரு பொருளை வாங்குகின்றோம் என்றால், நமது வங்கி (பற்று/கடன் அட்டை) தகவல்கள், நம் பெயர், நமது முகவரி என நமது தனிப்பயன் தகவல்களை உள்ளிட்டே ஆக வேண்டிய சூழலில் நாம் தகவல்களை பகிர்கிறோம்.

இத்தகைய தகவல்கள் இணைய வழங்கிகளில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதை திருடுவதற்கு பல ஊடுருவலாளர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக, இத்தகைய ஊடுருவலாளர்களின் தாக்குதலில் இருந்து வழங்கிகளை காக்க, தடுப்புகள் ஏற்படுத்தி வைப்பார்கள்.

இத்தகைய தடுப்புகள், ஊடுருவ வருபவருக்கு, தம்மால் ஊடுருவ இயலவில்லை என்ற தகவலை கொடுக்கும். அதனால், அவர்கள் பல்வேறு மாற்று முறைகளை கையாள்வார்கள்.

ஊடுருவலாளர்கள், பொதுவில் இரு வகைப்படுகின்றனர். ஒன்று, தனிப்பயன் தகவல்களை திருடுபவர்கள், மற்றவர்கள், பிட்காயின் போன்ற தகவல்களை திருடுபவர்கள்.

இதற்கு ஒரு தீர்வாக, ஊடுருவலாளர், எத்தகைய தகவலை திருட முயற்சிக்கிறார் என்பதை, செயற்கை அறிவாற்றல் கொண்டு கண்டறிந்து, அதெற்கு ஏற்ப, வழங்கிகளின் பாதுகாப்பு செயலிகள் பதிலளித்தால், ஊடுருவலாளர்களை குழப்பத்தில் விட்டுவிடலாம்.

ஊடுருவலாளர்களை தடுப்பது

எப்படியெனில், ஊடுருவலாளர்களால், ஊடுருவ இயலவில்லை என்று தடுப்பு செயலிகள் பதிலளிப்பதற்கு பதில், அவர்களால் ஊடுருவ இயல்கிறது என்பது போன்ற செயற்கை சூழலை உருவாக்கினால், அவர்கள் தாங்கள் ஊடுருவுகிறோம் என்ற என்ணத்தில் இருப்பார்கள்.

இதனிடையே, ஊடுருவலாளர் ஒருவர் வழங்கியை ஊடுருவ முயற்சிக்கிறார் என்ற தகவல் பொறியாளரை சென்றடையும்.

இதனால் வழங்கி பொறியாளர்கள், தமது பாதுகாப்பு திட்டங்களை வடிவமைத்துக்கொள்ள நேரம் கிடைக்கும்.

ஊடுருவலாளர் ஊடுருவிய பின் பாதுகாப்பு நடவடிக்கை என்பதற்கு பதில், ஊடுருவல் முயற்சிக்கான நிகழ்வு நடைபெறும் போதே பாதுகாப்பை அமைப்பது என்பது சிறந்ததல்லவா!

Share this Post:

தொடர்பான பதிவுகள்: