வரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி?

வரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி?

உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர் டார்வின், 150 ஆண்டுகளுக்கு முன் வினவிய கேழ்விதான், "வரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி?"

வரிக் குதிரை என்றாலே எல்லோர் கண் முன்னும் வருவது, கருப்பு வெள்ளை நிற பட்டைகளை கொண்ட குதிரை.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், விக்டோரியாவை சேர்ந்த உயிரியல் அறிவியலாளர் சார்லெஸ் டார்வின் மற்றும் ஆல்பிரட் ரசல் வாலச் ஆகியோருக்கும் மனதில் தோன்றி ஒரு ஆய்வு கலந்துரையாடலுக்கு வழி வகை செய்தது.

கடந்த 150 ஆண்டுகளாக கேள்வி மட்டும் இருந்ததே தவிர அதற்கான விடை யாரும் சொல்ல வில்லை.

இந்த டார்வின் தான் பரினாம வளர்ச்சி குறித்த கருத்தை முதல் முதலில் சொன்னது.

இந்த 150 ஆண்டுகளில் பல்வேறு வகையான கருத்துக்கள் வரிக் குதிரையின் வரிகள் குறித்து பகிறப்பட்டன.

அவற்றுள் தலையானவை:

1. வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க தான் இந்த வரிகள்.
2. இந்த வரிகள் ஒரு சமூக அடையாளம்.
3. கோடை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள இந்த வரிகள் பயன்படுகின்றன.
4. ஈ கடியில் இருந்து தப்ப இந்த வரிகள்.

வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க தான் இந்த வரிகள்.

முதலில் கூறப்பட்ட "வேட்டை விலங்கிடம் இருந்து தப்புவது" என்பதை பலரும் ஆராய்ந்தார்கள்.

மனிதனும் ஒரு வேட்டை விலங்கு என கணக்கிட்டு, அடர்ந்த மரம் செடிகள் நிறைந்த பகுதியில் நிற்கும் வரிக் குதிரையை அடையாளப்படுத்த முடிகிறதா மனித கண்களால் என அராய்வு நடத்தப்பட்டது.

இதில், மினிதர்களால், வரிக்குதிரை எவ்வளவு அடர்ந்த பகுதியில் மறைந்து நின்றாலும், எளிதாக அதை கண்டு பிடிக்க முடிகிறது என்பது கண்டறியப்பட்டது.

அடர்ந்த பகுதியில் வரிக்குதிரை

மனிதர்களை விட பார்வை திறன் குறைந்தவை அரிமாக்களும் கழுதை புலிகளும்.

ஆனாலும் இவைகளின் மிக விரும்பிய உணவாக வரிக் குதிரைகள் எளிதில் மாட்டிக்கொள்கிறன என்கிறது ஆப்பிரிக்க காடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு.

அப்படியானால் வரிக் குதிரையின் வரிகள் காட்டில், அதன் வேட்டை விலங்குகளிடம் இருத்து காப்பதற்கு அல்ல என்பது உறுதியானது.

இந்த வரிகள் ஒரு சமூக அடையாளம்

அடுத்து வருவது, வரிக் குதிரை கூட்டத்தில் அவை ஒன்றை ஒன்று வேறுபடுத்தி கடையாளம் காண என்ற கருத்து.

உண்மையில், வரிக் குதிரைகளின் வரிகள், நமக்கு எல்லாம் ஒன்றாக தோன்றினாலும், கூர்ந்து கவணித்தால், ஒவ்வொரு வரிக் குதிரையும் ஒவ்வொரு வரி வடிவம் பெற்றிருக்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த வரிக் குதிரைகளால் வரிகள் இருக்கும் குதிரைகளுக்கும், வரி இல்லா குதிரைகளுக்கும் வேறுபாடு காண இயலவில்லை என்பது தான்.

குதிரையும் வரிக்குதிரையும் கலந்ததால் பிறந்தது

அவை வரி இல்லாதவற்றுடன் கலந்து குட்டிகளும் ஈனுகின்றன.

அப்படியானால், அவை உடலில் உள்ள வரிகளை கொண்டு தன் இனத்தவரை அடையாளப்படுத்துவது இல்லை என்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

கோடை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள இந்த வரிகள் பயன்படுகின்றன.

வெள்ளை பட்டைகள் ஞாயிறு ஒளியை எதிரொளிக்கும். அதனால் வெப்பத்தின் தாக்குதலில் இருந்து எழிதாக தப்பலாம்.

வண்ணம் பூசப்பட்ட பீப்பாய்கள்[/caption]

வரிக் குதிரைகளின் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை பட்டை அமைந்துள்ளதால், கருப்பு பட்டை வெப்பதை உரியவும், வெள்ளை எதிரொளிக்கவும் என மாரி மாரி செய்வதால், ஒரு குளிரோட்டம் உடலில் ஏற்படுகிறது என பலர் கருத்து கூறினர்.

இதை ஆய்வு மூலம் உறுதிப்படுத்த, பெரிய பீப்பாய்களில் தண்ணீர் நிறப்பப்பட்டு அவற்றின் மீது வரிக் குதிரை போன்று கோடுகள் வரையப்பட்டன.

அந்த பீப்பாய்களில் சிலவற்றிற்கு வேறு நிற வண்ணங்களும் பூசப்பட்டன.

உள் வெப்பத்தை தொடர்ந்து ஆராய்ந்த போது, எல்லா நிற பீப்பாய்களின் உள் இருக்கும் தண்ணீரும் ஒரே வெப்பத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், வரி குதிரையுடன், அதே வெயில் நிலையில், காட்டு எருமை, ஒட்டக சிவிங்கி, இம்பாலா மான் என பலவகை விலங்குகள் புல் வெளியில் மேய விடப்பட்டு அவற்றின் உடல் வெப்ப நிலை கணக்கிடப்பட்டது.

இந்த ஆராய்வின் முடிவில், எல்லா விலங்குகளும் ஒரே மாதிரியான உடல் வெப்ப தாக்கத்திற்கு உள்ளாவது கண்டறியப்பட்டது.

அப்படியானால், வரிக் குதிரையின் கோடுகளுக்கும், உடல் வெப்ப பாதுகாப்பிற்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

ஈ கடியில் இருந்து தப்ப இந்த வரிகள்.

இருக்கும் ஒரே கருத்து, ஈக்களிடம் இருந்து இந்த கோடுகள் காக்கின்றனவா என்பதை கண்டறிவது தான்.

1980 களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த வரிக் குதிரை கோடுகள், குதிரை ஈக்களிடம் இருந்து அவற்றை காப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கருத்து பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பலரும், இது தொடர்பாக முழு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என கருத்துறைத்தனர்.

குதிரை ஈக்களால் வெள்ளையை திடமான தளமாக கண்டறிய இயலவில்லை

இப்பொழுது முழு ஆய்வு மேற்கொண்டதில், குதிரை ஈக்கள் வெள்ளை பட்டையை வெற்று இடமாகவும்,கருப்பு பட்டையை திடமான தளமாகவும் பார்க்கின்றன என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த குளப்பத்தினால், இந்த ஈக்கள் வெள்ளை பட்டை இருக்கும் பகுதியில் பறந்து கடந்து செல்ல எத்தனித்து மொதிக்கொள்கிறன.

இந்த ஆராய்வின் மூலம், கடிக்கும் ஈக்களிடம் இருந்து காத்துக்கொள்ளத் தான் இந்த வரிக் குதிரை வரிகள் என உறுதி செய்யப்பட்டது.

இதற்காக, ஒரு குதிரையும் வரிக்குதிரையும் ஒரே இடத்தில் மேய விடப்பட்டன.

இந்த ஆய்வானது, குதிரை ஈக்கள் இனப்பெருக்கக் நேரத்தில் நடத்தப்பட்டது. ஏனெனில், அப்பொழுது தான் இந்த ஈக்கள் குதிரைகளை கடித்து தன் முட்டை வளர குருதியை எடுக்கும்.

நடத்தப்பட்ட ஆராய்வில், ஈக்கள் குதிரையின் நாற்றத்தினால் கவரப்பட்டு அவை அருகில் வந்தாலும், வரிக் குதிரையின் உடல் மேல் உட்காருவதற்கு அவை குளப்பம் அடைகின்றன.

அதே வேளையில், வரி இல்லா குதிரை மேல் அவை எளிதாக உட்கார்ந்து விடுகின்றன.

இந்த வேறுபாட்டிற்கு அடிப்படை என்னவென்றால், வரிக் குதிரை மேல் இருக்கும் வரிகள், அவற்றை குளப்பி விடுவதே.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: