வின்-ரார் மென் பொருளில் ஊடுருவல் வாய்ப்பு

வின்-ரார் மென் பொருளில் ஊடுருவல் வாய்ப்பு
வின்-ரார் மென் பொருளில் ஊடுருவல் வாய்ப்பு. உடனே புதிப்பிப்பு செய்யுங்கள்.

வின்டோஸ் இயங்கு தளம் பயன்படுத்தும் பெரும்பாலான கணிணிகளில் கோப்புகளையும் கோப்புறைகளையும் அதன் இட பயன்பாட்டு அளவை சுறுக்குவதற்கு வின் - ரார் என்ற மென்பொருள் நிருவப்பட்டு, பயன்படுத்தப்படும்.

குறிப்பாக மின்னஞ்சல் அனுப்பும் பொழுது, கோப்புகளை ஒன்றாக சுருக்கி அனுப்பும் பழக்கம் இருந்து வருகிறது.

மின்னஞ்சலில் கோப்புகளை பெருபவர்கள், இதே மென்பொருள் கொண்டு கோப்புகளை மீட்டெடுத்து பயன்படுத்துவர்.

இந்த மென் பொருள் மூலம் உருவாக்கப்படும் சுருக்கிய கோப்புறைகள் .RAR என்ற கோப்பு பெயர் விரிவாக்கம் கொண்டிருக்கும்.

பெரும்பாலானவர்கள், இந்த வின் ரார் மென்பொருளை புதிப்பிப்பு செய்வதில்லை. ஏனெனில், அதற்கான தேவை எழுவதில்லை.

இந்த வின்-ரார் மென்பொருள் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி கணிணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

செக் பாய்ன்ட் சாப்ட்வேர் டெக்னாலொசீஸ் என்ற நிறுவனம் தற்பொழுது மேற்கொண்ட ஆய்வில், இந்த மென் பொருளில் சுமார் 19 ஆண்டுகளாக விடப்பட்டிருந்த ஊடுருவல் வாய்ப்பு கண்டறியப்பட்டது.

2006 வரை இந்த வின்-ரார் மென் பொருள் . ACE என்கிற கோப்பு பெயர் விரிவாக்கம் கொண்ட கோப்புறைகளை பிரிப்பதற்கு ஏதுவாக இருந்தது.

UNACEV2.dll என்ற மென்பொருள் நூல் கட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 2005-ஆம் ஆண்டு அதன் மூல நிரல் தொலைந்துவிட்டதால், இந்த .ACE ற்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்டது.

எனினும், .ACE கோப்பு பெயர் விரிவாக்கம் கொண்ட கோப்புறைகளை .RAR என்று பெயர் மாற்றம் செய்து பிரித்துப்பார்க்க இயலும்.

அனாலும் இந்த டி எல் எல் கோப்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

தற்போதைய ஆய்வில், இந்த டி எல் எல் கோப்பின் ஊடுருவல் வாய்ப்பை பயன்படுத்தி, .ஏஸ் கோப்புறைகளுள் ஊடுருவலுக்கான நிரல்களை பொதித்து, அதை .ரார் என்று பெயர் மாற்றி மின்னஞ்சல் மூலம் அனுப்புகின்றனர்.

நாம் ஊடுருவல் நிரல் இருப்பது அறியாது அத்தகைய கோப்புகளை இந்த வின் ரார் மென்பொருள் கொண்டு விரிக்கும் போது நம் கணிணியில் தீங்குநிரல் நிறுவப்படுகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள காணொளி இதற்கான விளக்கத்தை காட்டுகிறது.

இதற்கான தீர்வை தற்பொழுது வின் ரார் வெளியீட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு, நாம் கணிணியில் ஏற்கனவே நிறுவப்பட்ட வின்-ரார் மென்பொருளை நிருவல் நீக்கம் செய்து விட்டு வின் ரார் 5.7 வெளியீட்டை பதிவிறக்கம் செய்து நிருவ வேண்டும்.

என்றும் நமக்கு தொடர்பில் இல்லாதவர்கள் அனுப்பும் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: