சப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா?

சப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா?

நீண்ட நெடிய நாட்களாக சப்பான் நாட்டில் அஷிடபா (Ashitaba) செடி மீது ஒரு  நம்பிக்கை உள்ளது.

அதாவது, அந்த அஷிடபா செடியை மருந்து போல் நாம் அன்றாடம் பருகும் டீயில் கலந்து உண்டு வந்தால், இளமை மாறாது. வயதானவர்கள் உண்டால் இளமை மீட்டெடுக்கப்படும்.

இந்த நம்பிக்கை இது நாள் வரை அறிவியல் படி உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இதனிடையே அந்த அஷிடபா செடியின் மூலக்கூறுகளை ஆராய்ந்த பொழுது, அதில் சில அற்புதமான கலவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கலவைகள் நம் உடல் உயிரணுக்களின் நலனை காப்பால் இளமை நீட்டிக்கிறது என அறியப்பட்டது.

நமது உடலில் உள்ள உயிரணுக்கள், தன் அணுக்களை தாமே உண்டு செரித்து புதிய அணுக்களாக "தன்னுண்ணி " முறையில் மாற்றி அமைப்பதால், பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் அவ்வப்போது களையப்படுகின்றன.

இந்த முறையால், நம் உடல் முழுதும் தேவையற்ற உயிரணுக்கள் பரவி குப்பை மேடாக கிடக்கா வன்னம் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

நம் உடல் அமைப்பின் இந்த தன்னுண்ணி முறை பழைய பாதிப்படைந்த உயிரணுக்களை மாற்றி அமைத்து வந்தாலும், பல நேரங்களில் இது முழுமையாக செயல்பட இயலுவதில்லை.

ஆதலால், நோய் தொற்றுக்கள் பல உடலில் தோன்றுகின்றன.

மேலும், இந்த தன்னுண்ணி முறையே, புற்று நோய் ஏற்பட அடிப்படையாக அமைந்து விடுகிறது.

பல ஆராய்வுகள், தொடர் உடற்பயிற்சியும், நோண்பு இருத்தலும் பழைய அணுக்களை முறையாக நீக்க தூண்டுவதாக கண்டறியப்பட்டது.

ஆஸ்திரியாவின் கிராச் பலகலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஃப்ளேவோநாய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிற ஒரு கலவை பழைய தேவையற்ற அணுக்களை நீக்குவதில் உதவி புறிகிறது என்று கண்டுணர்ந்தார்கள்.

இத்தகைய உயிர்வளி இணைவு எதிர்ப்பி கூறுகள் பல இயற்கையாக நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படும் பல பொருட்களில் இருப்பது பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.

பேராசிரியர் முனைவர் ஃப்ராங் மாடியோ, இந்த "தன்னுண்ணி " முறை குறித்து தனது கருத்தாக "தேவையற்ற புரத குப்பைகளை நீக்கி அவற்றை மறு சுழற்சி செய்தல்" என பதிவு செய்கிறார்.

இவர் தலைமையிலான ஒரு குழுவினர், சுமார் 180 ஃப்ளேவோநாய்ட்ஸ் வகைகளை, வயது மூப்பினால் ஏற்படும் உயிரணு சிதைவுடன் தொடர்பு படுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

4,4 - டைமெதாக்சிசால்கோன் (4,4 -dimethoxychalcone) என்ற கலவை வயது மூப்பினால் ஏற்படும் உய்ரிரணு சிதைவில் இருந்து உடலை காக்கிறது என்று கண்டறிந்தனர்.

இந்த 4,4 - டைமெதாக்சிசால்கோன் சப்பான் நாட்டில் கிடைக்கும் அஷிடபா (Ashitaba) என்ற செடியில் பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த செடியின் அறிவியல் பெயர் ஆங்கலிகா கீஸ்கி (Angelica keiskei).

பழைய கருத்துக்களை புறம் தள்ளாமல் அதில் என்ன உண்மை ஒழிந்துள்ளது என்று ஆராய்வு மேற்கொண்டால், மனித சமூகத்திற்கு பல நண்மைகள் வந்து சேரும் என்பது உறுதி.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: