பூச்சிகளின் நுண்ணுயிரிகள் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பொருள்

பூச்சிகளின் நுண்ணுயிரிகள் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பொருள்

சிறு பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள் தர வல்லவை.

இன்றைய மருத்துவத்தில் பயன்படும் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பொருட்கள் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களிடமிருந்து பெறப்பட்டவை.

தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்வுகளின் மூலம், புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருட்களை பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிர்களிடமிருந்து பெற்றால் அவை, "மருந்துகளை எதிர்த்து நிற்க பழகிவிட்ட நுண்ணுயிர்களை" (Superbugs) அழித்தொழிக்க உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.

விஸ்கான்சின் மடிசான் பல்கலை கழகத்தின் ஆராய்சியாளர்கள் முதல் முறையாக, முழு அளவில் பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிர்கள் எவ்வாறு நுண்ணுயிர் எதிர்ப்பொருள் பயன்படுத்துகின்றன என ஆராய்ந்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் காடுகளில் வாழும் ஒரு வகை எறும்பினம் பூசணம் பயிரிட்டு மனிதர்களை போல் உழவு செய்து உணவு உற்பத்தி என்ற முறையை கடைபிடிக்கின்றன. எந்த எறும்பினத்தின் பெயர் சிம்ஃபோமைர்மெக் என்பதாகும்.

இந்த எறும்புகளிடமிருந்து பெறப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பொருள் "சைஃபோமைசின்" பூசணங்களை எதிர்த்து திறமையாக செயல்படுவதாக உள்ளது.

இது நாள் வரை உள்ள மருந்தகளால் இத்தகைய பூசணங்களை எதிர்த்து போரிட முடிவதில்லை.

இந்த புதிய கண்டுபிடிப்பு நுண்ணுயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்பு தன்மை கொண்ட நுண்ணுயிரிகளை எதிர்க்கும் ஆற்றலுடையதாக இருக்கும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

மருந்துகளை எதிர்த்து நிற்க பழகிவிட்ட நுண்ணுயிர்களை - Superbugs

மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள், மருத்துவ வழி முறைகளை முறையாக பின்பற்றாத தால், பல நுண்ணியிறிகள் மருந்துகளை எதிர்த்து நிற்க பழகிவிட்ட நுண்ணுயிர்களாக மாறிவிட்டன.

எடுத்துக்காட்டாக, நுண்ணுயிர் எதிர்ப்பொருள் மருந்துகளை மருத்துவர் அறிவுரை இன்றி தாமே வாங்கி உட்கொள்வது, அவற்றை தேவையான அளவு வாங்கி உட்கொள்ளாமல் அறைகுறையாக விட்டு விடுவது, என்பன போன்ற செயல்கள்.

இதனால், மனிதரை தாக்கும் பூசணங்கள், நுண்ணுயிரிகள், நோய் கிருமிகள் என பலவகை தீங்கு விளைவிக்கும் தன்மைகொண்டவை வலுப்பெற்று மருந்துகளையே வென்று விடுகின்றன. அதனால் லட்சக்கனக்கான இறப்புகள் ஆண்டுதோரும் ஏற்படுகிறது.

பூச்சிகளிடம் நுண்ணுயிர்

எண்ணிக்கையில், மண்னில் எத்தனை நுண்ணுயிர்களோ, அத்துனை, பூச்சிகளிடமும் உள்ளன.

பல நூறு கோடி ஆண்டுகளாக ஸ்டெப்டோமைசெஸ் நுண்ணுயிரி இந்த புவியில் வாழ்ந்து வருகிறது. இவற்றில் இருந்துதான் பெரும்பாலான மருந்துகள் உருவாக்கப்படுகின்றன.

இத்தகைய நுண்ணுயிரிகளின் பல இனங்கள் பூச்சிகளிடமும் வாழ்கின்றன.

ஆராய்வாளர்கள் சுமார் 2500 பூச்சிவகைகளில் இருந்து நுண்ணுயிரிகளை எடுத்து அவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த பூச்சிகளிடமிருந்து ஒரு பயன்படத்தக்க ஸ்டெப்டோமைசெஸ் நுண்ணுயிரி பெறப்பட்டால் அதன் மூலம் சுமார் 10 வகை மருந்துகளை உருவாக்கலாம்.

அதுமட்டுமல்லாது, அந்த நுண்ணுயிரியின் பிற மரபணுக்களை அராய்வதன் மூலம் மேலும் பல மருந்துகளை உருவாக்க முடியும்.

இதுவரை பெறப்பட்ட நுண்ணுயிர் மரபணு மாதிரிகைகளை கொண்டு சுமார் 24 வகை மனித நோய் தொற்று நுண்ணுயிர்களை அளிக்க இயல்கிறது.

இது போன்று சுமார் 10,000 வகை மாதிரிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

காண்டிடா அல்பிகான்ஸ்

நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தால், முதலில் தோன்றும் நோய் தொற்று இந்த காண்டிடா அல்பிகான்ஸ் என்ற பூசணத்தால் ஏற்படுவதாகும்.

வயதானோர், படுக்கையில் இருப்பவர்கள் என நோய் எதிர்ப்பு சிறிது குறைந்தவர்களை இது பாதிக்கிறது.

சைஃபோமைசின் வெற்றிகரமாக இந்த "காண்டிடா அல்பிகான்ஸ்" நுண்ணுயிரை அழித்து விடுகிறது.

மேலும் இந்த சைஃபோமைசின் பக்க விளைவுகளை மிகக் குறைந்த அளவே ஏற்படுத்துகிறதாம்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: