மின் இன்றி, இணையத்துடன் இணைந்த கருவிகள் இயக்க

மின் இன்றி, இணையத்துடன் இணைந்த கருவிகள் இயக்க

மின் இணைப்போ அல்லது மின்கலமோ இன்றி, இணையத்துடன் இணைந்த கருவிகள்
இயக்க முடியும்.

வாட்டர்லூ பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களும், முது நிலை முனைவர் பட்டம் பயிலும் அறிவியலாளர்களும் இணைந்து, புதிய முயற்சியாக, மின்கலமோ அல்லது நேரடி மின் இணைப்போ இல்லாத நிலையிலும் இயங்கக் கூடிய இணையத்துடன் இணைந்த பொருட்கள் இயங்க வைக்கும் மாதிரியை காட்டியுள்ளனர்.

பொதுவாக, மின் இணைப்பு பெற முடியாத இடங்களில், ஞாயிறு ஒளி கொண்டு மின் உற்பத்தி செய்து அவற்றை பயன்படுத்துவர்.

பகல் நேரங்களில் ஞாயிறு ஒளி போதிய அளவில் இருப்பதால் மின் உற்பத்தியானாலும், இரவு நேரங்களில் மின் உற்பத்தி செய்ய இயலாது.

அதற்காக, மின்கலம் பயன்படுத்து, பகல் நேரங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து, இரவு நேர பயன்பாட்டிற்காக பயன்படுத்துவர்.

இங்குள்ள சிக்கல் என்னவென்றால், பகல் நேரங்களில் போதிய அளவு ஞாயிறு ஒளி வேண்டும். ஞாயிறு ஒளி கிடைக்கப்பெறாத பகுதிகளில் இத்தகைய முறையில் மின் உற்பத்தி செய்ய இயலாது.

இணையத்தில் இயங்கும் பொருட்கள் பல நேரங்களில், தொலைவில் இருந்து உணர்விகள் மூலம் சூழலை கண்கானிக்க பயன்படுகின்றன.

இவ்வாறு தொலைவில் உணர்விகள் கொண்ட ஒரு இணையத்தில் இயங்கும் பொருட்கள் நிருவப்பட்டால் அதை இயக்குவதற்கு மின் வசதி தேவை.

இந்த சூழலில், ஞாயிறு ஒளியோ அல்லது நேரடி மின் இணைப்போ பெற முடியாது என்றால் அதற்கான தீர்வு இதுவரை இல்லாமல் இருந்தது.

இதற்கு தீர்வாக நுண்ணலைகளை கொண்டு மின் உற்பத்தியை மிக குறைந்த செலவில் செய்திட முடியும் என்பதை அறிவியலாளர்கள் விளக்கமாக காட்டியுள்ளனர்.

அதாவது, வானொலி அலைவெண் அடையாள கருவி பயன்படுத்தி மிக எளிய முறையில் இணையத்துடன் இணைந்த கருவிகள் உடன் பொருத்தப்பட்ட உணர்விகளை செயல்படுத்தியுள்ளனர்.

இதற்கு சந்தையில் கிடைக்கும் வானொலி அலைவெண் அடையாள கருவி ஒட்டியை சிறு மாறுதல் செய்து அதன் மூலம் மின் உற்பத்தி செய்து உணர்விகளை இயக்கியுள்ளனர்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: