பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் முறைகள்

பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் முறைகள்

பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் வழிமுறைகள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், குழந்தை பிறக்கிறது என்றால், குழந்தையை பெற்றவரின் பெற்றவர் உடன் இருந்து குழந்தையை கவணித்துக் கொள்வார்கள்.

அதனால், குழந்தையை குளிக்க வைப்பது, குறித்த நேரத்தில் மட்டும் தாய் பால் ஊட்டுவது என பெரியவர்களின் அனுபவ பாடம் மூலம் எல்லாம் முறையா நடக்கும்.

இப்பொழுது, அவ்வாரான சூழ்நிலைகள் மாறிக்கொண்டே வருகின்றன.

இந்த கட்டுரையில், பிறந்த குழந்தையை மருத்துவ ரீதியில் முறையாக குளிக்க வைப்பது எப்படி என்பதை அறியலாம்.

குழந்தையை ஏன் குளுப்பாட்ட வேண்டும்?

பிறந்த குழந்தையானது நோய் எதிர்ப்பு திறன் குறைந்த நிலையில் இருக்கும். அதனால், எளிதில், தோல் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மேலும், குழந்தையை குளிக்க வைக்கும் போது, உடலில் ஏதாவது காயங்களோ அல்லது பூச்சிக்கடியோ அல்லது தோல் சிராய்ப்புகளோ அல்லது பிற பாதிப்புக்கள் உள்ளனவா என்பதை பார்க்க இயலும்.

குழந்தையை குளிக்க வைப்பதால், வேர்வை துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் நீங்கி, அந்த துவாரங்களில் ஏதாவது தீமை விளைவிக்கும் நுண் கிருமிகள் இருக்குமேயானால் அவை நீக்கப்பட்டு விடும்.

தோல் மேல் தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் இருக்குமேயானால் அவை குளியலால் நீக்கப்படும்.

குளிக்க வைக்க எந்த சோப்பு, சாம்பு பயன்படுத்துவது?

பெரியவர்களாகிய நாம் பயன்படுத்தும் சோப்பு, சாம்பு, எண்ணை ஆகியவற்றை குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில், குழந்தையின் தோல் மிகவும் மிருதுவானது. நாம் பயன்படுத்தும் குளியல் பொருட்கள் நம் தோலுக்கு ஏற்றது. ஆனால், குழந்தையில் தோலை பாதித்து விடும்.

அதனால், குழந்தைகளுக்கான சோப்பு, சாம்பு, எண்ணை பயன்படுத்துவதே சிறந்தது.

சோப்பிற்கு பதில் பாசிப் பயறு பொடி போன்றவை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.

சூடு இல்லாத, வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். நம் கைகளை கொண்டு சூட்டின் தன்மையை பார்க்காமல், அந்த நீரை நம் வாயில் விட்டு கொப்பளித்து பார்த்தால் தான் உண்மையான சூடு தெரியும்.

அதிக சூடு, குளந்தையின் தோலை வேக வைத்துவிடும். எச்சரிக்கை தேவை.

குழந்தையை நாள் தோரும் குளிக்க வைக்கலாமா?

பிறந்த பச்சிளம் குழந்தையை நாள் தொரும் குளிக்க வைக்க தேவை இல்லை. ஏனெனில், அவை, நன்கு பொதியப்பட்டு தூசு மாசற்ற நிலையில் தான் இருக்கும்.

ஆகவே இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை குளிக்க வைத்தால் போதும்.

குப்புற கவிழ்ந்த குழந்தை பருவம் முதல் நாள் தொரும் குழந்தையை குளுப்பாட்ட வேண்டும்.

ஏனெனில், அப்பொழுது தான் தூசுக்கள் குழந்தையின் மீது படிய ஆரம்பிக்கும். அது குழந்தையில் உடல் நலனுக்கு நல்லதல்ல.

குழந்தையை எங்கே குளிக்க வைப்பது?

குழந்தையை கண்டிப்பாக கழிவு நீர் ஓடைகளின் அருகில் வைத்து குளிக்க வைக்கக் கூடாது.

வீட்டின் வெளியே வைத்து குளுப்பாட்டுகிறீர்கள் என்றால், மாசற்ற இடத்தில் வைத்து குளுப்பாட்டுங்கள்.

முடிந்த வரை வீட்டின் நடு அறையிலோ அல்லது உங்களின் படுக்கை அறையிலோ வைத்து குளுப்பாட்டுவது சிறந்தது.

குழந்தையை கையாளும் இடத்தில் நீரை உறிஞ்சும் நல்ல தரை விரிப்புகளை பயன்படுத்துங்கள்.  தரை எந்த வகையிலும் வழுக்கும் நிலையில் இருக்கக் கூடாது.

வானிலைக்கு ஏற்ப தண்ணீரின் வெப்பத்தை கணக்கிட்டு குளிக்க வையுங்கள்.

எந்த வேளை குழந்தையை குளிக்க வைக்க சிறந்தது?

குழந்தை உணவு அருந்து வேளையையும், உணவு அருந்து முதல் ஒரு மணி நேரத்திலும் குழந்தையை குளிக்க வைக்கக் கூடாது.

மாலை நேரத்தில், ஞாயிறு மறைவத்தற்கு முன் குளிக்க வைப்பது சிறந்தது. ஏனெனில், பகலில் குழந்தையின் மீது படிந்த தூசுக்கள் மற்றும் நோய் தொற்று கிருமிகள் மாலையில் அகற்றப்பட்டால், அதனால், இரவு முழுவது தூய்மையாக குழந்தை இருக்கும்.

வேலைக்கு செல்லும் பெற்றோராக இருப்பின், இருவரும் சேர்ந்து மாலையில் (பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை) குழந்தையை குளிக்க வைப்பதால், குழந்தை பெற்றோருடன் அன்புடன் வாழ பழகும்.

ஞாயிறு மறைந்த பின் எத்த்தகைய சூழலிலும் குழந்தையை குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது.

கோடை நாட்களில், நடுப்பகல் நேரத்தில் குழந்தையை குளுப்பாட்டலாம். அதனால் குழந்தை குளிர்சியாக உணரும்.

பாதுகாப்பு முறைகள்

1. குழந்தை 32 டிகிரி செண்டிகிரேடு சூட்டிற்கு மேலான தண்ணிரில் விடப்பட்டால் உடல் வெந்து விடும்.

2. பழைய முறையான கால்களின் நடுவில் வைத்து குளிக்க வைக்கும் முறை சிறந்தது.

3. டப்பில் வைத்து குளிக்க வைக்க முயல்கிறீர்கள் என்றால் முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்.

4. பயிற்சி இல்லாமல் டப்பில் வைத்து குழந்தையை குளிக்க வைக்க முயல்வது மிகவும் ஆபத்தான செயல்.

5. சோப்பு, சாம்பு ஆகியவற்றை அளவுடன் பயன்படுத்துங்கள். அவை வரட்டு தோலை உருவாக்கும் தன்மை கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: