பக்க விளைவுகள் அற்ற மருத்துவம் என்று எதுவும் இல்லை

பக்க விளைவுகள் அற்ற மருத்துவம் என்று எதுவும் இல்லை

பக்க விளைவுகள் அற்ற மருத்துவம் என்று எதுவும் இல்லை என சொல்லலாம்.


"மருத்துவர் மருந்தின் பக்க விளைவுகள்

குறித்த தகவல் தர மறுக்கிறார் என்றால்,

மருத்துவரை உடனடியாக மாற்றி விடுங்கள்.

உடல் உங்களுடையது.

நீங்கள் ஆய்வுக்கூட விலங்கு அல்ல."

தொற்றிய நோய் தீர்க்க மருத்துவம் தீர்வு என்றால், மற்ற பிற நோய்கள் தொற்ற அவையே வழிவகையாக அமைந்து விடுகிறது.

அலோபதி மருத்துவம் மட்டும் தான் பக்க விளைவுகளை கொண்டது, நாட்டு மருத்துவம் மற்றும் பாட்டி மருத்துவம் பக்கவிளைவுகள் அற்றது என்று நம்மில் பலர் தவறான கருத்துக்களை கொண்டிருக்கிறோம்.

உண்மையில் எல்லா வகை மருத்துவமும் பக்க விளைவுகளை கொண்டது. அலோபதி மருத்துவத்தில் ஒவ்வொரு மருந்திற்கும் அல்லது மருத்துவ முறைக்கும் என்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை முறையாக பட்டியலிட்டு நமக்கு தெளிவு படுத்தி விடுகின்றனர்.

பிற மருத்துவ முறைகளில் பக்க விளைவுகள் குறித்த ஆய்வுகள் பெருமளவில் இருப்பதில்லை என்பதால் அது குறித்த தெளிவு இருப்பதில்லை.

பக்க விளைவு என்றால் என்ன?

நாம் உட்கொள்ளும் மருந்தால் அல்லது மேற்கொண்ட மருத்துவ முறையால், தலை சுற்றலோ அல்லது வயிற்று அளைச்சல் என எது ஏற்பட்டாலும் அதுவும் பக்க விளைவே.

பல மருத்துகள் மற்றும் மருத்துவ முறைகள் நமக்கு பக்க விளைவினால் ஏற்படும் உடல் தொல்லைகளை நேரடியாக காட்டாது.

எடுத்துக்காட்டாக, பல மருந்துகள் மனிதனின் பாலியல் ஈடுபாட்டை பாதிக்கும். சில, உடல் எடையை சத்தமின்றி கூட்டும்.

சில இரவு தூக்கத்தை கெடுக்கும். இன்னும் சில மருந்துகள், நாம் எதையோ இழந்து தவிக்கிறோம் என்ற மன நிலையை ஏற்படுத்தும்.

இவற்றையெல்லாம் விட பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் மருந்துகள், ஓசை இன்றி நம் சிறு நீரகம் செயல் இழப்பு, இதயத்தின் மேல் தோல் தடித்தல், இதயத்தின் தடுக்கிதழ் (வால்வு) செயல் இழப்பு , குருதியில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம், எலும்பு தேய்மானம், வயிற்றில் புண் ஏற்படுத்துதல், முற்றிலும் பாலியல் ஈடுபாட்டை நீக்குதல் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பக்கவிளைவை எப்படி கண்டறிவது?

பக்கவிளைவு மருந்தினால் ஏற்பட்டுள்ளதா அல்லது நோயின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ளதா என்பதை வேறுபடுத்த முதலில் தெரிந்திருக்க வேண்டும்.

மருத்துவர் மருந்தை பரிந்துரைக்கும் போது, நீங்கள் என்ன என்ன மருந்துகளை ஏற்கனவே எதெற்கெல்லாம் உட்கொண்டு வருகிறீர்கள் என்பதை அவரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

ஏதேனும் அறுவை மருத்துவம் மேற்கொண்டிருந்தால் அது குறித்த முழு தகவலையும் மருத்துவரிடம் முதலிலேயே எடுத்துரைக்க வேண்டும்.

மருத்துவர் எழுதி தரும் மருந்தின் பக்கவிளைவு தன்மை குறித்து மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மருத்துவர் தகவல் தர மறுக்கிறார் என்றால் மருத்துவரை உடனடியாக மாற்றி விடுங்கள்.

உடல் உங்களுடையது. நீங்கள் எலியோ அல்லது ஆய்வுக்கூட விலங்கோ அல்ல. அவர் முயற்சி செய்து பார்பதற்கான உயிர் அல்ல நாம். நமக்கு கடமைகள் பல உள்ளது.

மருந்தை மருந்தகத்தில் வாங்கும் பொழுது, மருந்து வழங்குனரிடம் ஒரு முறை அந்த மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து கேட்டுக்கொள்ளுங்கள்.

கை பேசியில் இனைய இணைப்பு இருக்கும். அதை கொண்டு தேடு பொறியில் மருந்தின் பெயரை உள்ளிட்டு தேடுனீர்கள் என்றால், அந்த மருந்தின் தன்மை, எதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அவற்றின் பக்க விளைவுகள் என்ன என்ற தகவல்களை பெறலாம்.

ஒரு மருந்து உங்களுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது என்பதற்காக அது தொடர்பான மருந்துகள் எல்லாம் அத்தகைய தன்மையுடையதாக இருக்கும் என்பதற்கில்லை.

உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவம் இன்று ஒரு வருவாய் மட்டும் ஈட்டும் தொழில் முறையாக மாறிவிட்டது.

மருத்துவமனைக்குள் செல்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைகிறீர்கள். இதை தான் அரசும் சொல்கிறது.

உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதுதான் சிறந்தது.

உங்களுக்கு தெரிந்தவர் உங்களை போன்றே நோய் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார் என்றால், அவர் என்னன்ன மருந்துகள் உட்கொள்கிறார் என்பதை குறிப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்த முறை நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது அவரின் மருந்திற்கும், நீங்கள் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட மருந்திற்கும் என்ன வேறுபாடு என்பது குறித்து வினவி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

எது அடிப்படையில் தேவை

எல்லா மருந்துகளும் பக்க விளைவு உள்ளவை என்பதை நாம் தற்பொழுது அறிவோம்.

பக்கவிளைவு உள்ளது என்று அறிந்தும் நாம் மருந்து உட்கொள்ள இருக்கிறோம் என்றால், எது நமக்கு அடிப்படையில் தேவை என்று அராய வேண்டும்.

நமக்கு சளி பிடித்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சளிக்கான மருந்தை உண்டால், பக்க விளைவாக, நமக்கு மேலும் களைப்பு ஏற்படும். தலை சுற்றல் வரும். பார்வை மங்கலாகும். வண்டி ஓட்டக் கூடாது. சற்று நேரத்தில் நாம் தூங்கி விடுவோம்.

இப்படியான ஒரு நிலை இருக்கும் போது, கட்டாயமாக வேலைக்கு செல்லத்தான் வேண்டும் என்றால், மருந்து உட்கொள்வதை தவிர்த்து சளியின் தாக்கத்தை தாங்கிக் கொள்ளலாம்.

மருந்து எடுத்துக் கொண்டாலும், எடுக்கா விட்டாலும் சளி தொல்லை ஐந்து நாட்களில் நம்மை விட்டு தானே விலகும்.

பக்க விளைவா அல்லது நோயின் தாக்கத்தை சாமாளித்து மீண்டெள முடியுமா என்று சிந்தித்து அதற்கு ஏற்ப செயல்படுவது அறிவார்ந்த செயல்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: