சிறந்த பற்பசை எது என்பதை எப்படி அடையாளம் காண்பது?

சிறந்த பற்பசை எது என்பதை எப்படி அடையாளம் காண்பது?

பற்கள் மற்றும் ஈறுகளின் நலனுக்கு நல்ல வாய் நலவியல் அடிப்படையாகும். இது வாய் நாற்றத்தையும் தடுக்கும்.

சரியான பற்பசை, வாய் நலவியலில் அடிப்படையான பங்காற்றுகிறது. ஆனால் எந்த பற்பசையை பயன்படுத்துவது என அடையாளம் காண்பது சிரமம்.

சிறந்த பற்பசையை எவ்வாறு தேர்வு செய்வது?

ஃபுளுரைடும் அதன் பயன்களும்

இயற்கையில் கிடைக்கும் கனிமப்பொருள் ஃபுளுரைடு பல்லின் கனிமப்பூச்சுகளையும் மற்றும் பல் குழி ஏற்படுவதில் இருந்தும் காக்கும்.

வல்லுனர்கள், பற்பசையில் உள்ள ஃபுளுரைடு பல் குழிகளை குறிப்பிடத்தக்க அளவு குறைத்து வருவதாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கூறிவருகின்றனர்.

இவர்களின் கூற்றை பல ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

பொதுவாக, பல் மருத்துவர் கூட்டமைப்புகள், ஃபுளுரைட்டை பற்பசையில் ஒரு கலவை பொருளாக சேர்க்க பரிந்துரைக்கிறது.

ஆனால், சிலர், ஃபுளுரைடு அற்ற பற்பசை பயன்படுத்துவதையே விரும்புகிறார்கள். இவ்வாறான என்னம் கொண்டவர்கள், இயற்கை பொருட்களை கொண்ட பற்பசைகளை தேர்வு செய்வது சிறந்தது.

பல்மருத்துவர் கூட்டமைப்பின் ஒப்புதல்:

பல பற்பசைகள் பல்மருத்துவர் கூட்டமைப்பின் ஒப்புதல் முத்திரைகளுடன் சந்தை படுத்தப்படுகின்றன. அவ்வாறான பற்பசைகள்


  • கட்டாயம் ஃபுளுரைடை ஒரு கலவைப்பொருளாக கொண்டிருக்க வேண்டும்
  • வாய் நலவியலுக்கு ஏற்ற உயிர்ப்புள்ள மூலப்பொருட்கள் இருக்க வேண்டும்
  • ருசி தரத்தக்க, பற்சிதைவை ஏற்படுத்தும் (இனிப்பு) எந்த மூலப்பொருளும் இருத்தல் கூடாது.
  • கலக்கப்படும் கலவை பொருட்கள் பாதுகாப்பனவை மற்றும் பயன்தரத்தக்கவை என அறிவியல் ரீதியிலான சான்றுகள் வேண்டும்

பல்மருத்துவர் கூட்டமைப்பின் ஒப்புதல் குறியீடு இல்லை என்பதற்காக அவை தரமற்றவையாக இருக்கிறது என பொருள் படாவிட்டாலும், குறியீடு, நாம் தேர்வு செய்யும் பற்பசை பயன் மற்றும் பாதுகாப்பு தன்மை குறித்து உறுதி படுத்த உதவும்.

முகப்பு விவரத்துணுக்கை (Label) படிப்பது:

முகப்பு விவரத்துணுக்கை படித்துப் பார்ப்பது என்பது அறிவான செயல். எல்லா வகை பற்பசைகளும் எல்லா மக்களுக்கும் சரிப்பட்டு வரும் என முடிவெடுக்க கூடாது. குழந்தைகளுக்கான பற்பசை வேறு, பெரியவர்களுக்கானது வேறு,

உற்பத்தியாளர்கள் கட்டாயம், ருசி மற்றும் இனிப்பு சேர்க்கை குறித்த தகவல்களை முகப்பு விவரத்துணுக்கில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

முகப்பு விவரதுணுக்கை படித்து அறிவது மூலம், தமக்கு ஒவ்வாத வேதியல் பொருட்களை மக்கள் தவிர்க்கலாம்.

பொதுவாக சேர்க்கப்படும் மூலபொருட்கள்


  • சாக்கரின், ஒரு இனிப்பு ருசி கூட்டி
  • சுண்ணாம்பு மற்றும் மணல் - உராய்வு ஏற்படுத்தும் - தேய்க்க உதவும் பொருட்கள்
  • கிளைசரால், பற்பசையில் கூழ்மத்தன்மை ஏற்படுத்த
  • சோடியம் லௌரல் சல்பேட், நுரை உருவாக்கி அழுக்கை நீக்க


அடிக்கடி வாயில் புண் ஏற்படுபவர்கள், சோடியம் லௌரல் சல்பேட் கலந்த பற்பசை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

சோடியம் லௌரல் சல்பேட் வாய் புண் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

பல் குறைபாடுகளின் அடிப்படையில் பற்பசையை தேர்வு செய்வது

பல் மற்றும் வாய் நலவியல் தொடர்பான இன்னல் உள்ளவர்கள், தமது தேவைக்கேற்ப பற்பசையை தேர்வு செய்யவேண்டும், சிலருக்கு பல் கூச்சத்தை போக்கும் பற்பசை தேவைப்படலாம்.

கூச்சத்தை போக்கும் பற்பசைகளில் பொடாசியம் நைட்ரேட் என்ற மூலப்பொருள் கலக்கப்படும். அவை, பல் வலியை போக்கும். ஈறுகளில் உள்ள உணர்விகளை மட்டுப்படுத்தும்.

வெள்ளை பற்கள் தரும் பற்பசைகள்

சிலர், தமது பற்கள் வெள்ளை வெளேர் என்று மின்ன வேண்டும் என விரும்புவர்.

இத்தகைவருக்காக சந்தைகளில் கிடைக்கும் பற்பசையில், பல்லை அதிகமாக உராய்த்து பல்லை வெளிரச்செய்யும் உராய்ப்பு மூல பொருட்கள் கலந்திருக்கும்.

சில பற்பசைகள் வேதியல் பொருட்கள் சிலவற்றை கலந்து இவ்வாறு வெள்ளை பற்களை பெற உதவும்.

பல் கூச்சம் உடையவர்கள், இத்தகைய பற்பசைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும், பல் மருத்துவரின் அறிவுரை இன்றி இத்தகைய பற்பசைகளை பயன்படுத்தினால், பற்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பல் கூச்சம்

பல் கூச்சம் பல் விளக்குவதை மிகவும் தொந்தரவான செய்லாக மாற்றும்.

சூடான காப்பி அல்லது குளிரான பணி குழைமம் (Ice Cream) என எதை உண்டாலும் பல்லில் வலி ஏற்படும்.

இவர்கள் மருத்துவ உதவியுடன் தமது தேவைக்கான பற்பசையை பயன்படுத்துவது நல்லது.

கடைகளில் பொதுவாக கிடைக்கும், பல் கூச்சத்திற்கானவர்கள் பயன்படுத்தத்தக்க பற்பசைகள் பல இருந்தாலும், பல் மருத்துவரின் அறிவுரைப்படி சரியான பற்பசை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது.

உராய்விகளின் அளவை கணக்கிடல்

பற்பசைகளில், உராய்விகள் எவ்வளவு அளவு இருக்கிறது என்பது கவனிக்க வேண்டும்.

பொதுவாக அவை 250 RDA (RDA - Relative Dentin Abrasivity) அல்லது அதற்கு குறைவான அளவில் இருக்க வேண்டும்.

அதிகளவு உராய்விகள் இருந்தால் அவை பல்லை தேய்த்து சிதைத்துவிடும்.

பல் கரையை கட்டுப்படுத்துவது

பல்லின் மீது பல் விளக்குவதற்கு முன்பும் பின்பும், ஒரு நுண்ணுயிரி பற்படலம் உருவாகும், அதையே தட்டைவீக்க நோய் என அழைக்கிறோம்.

பல் கரையானது அவ்வளவு எழிதில் நீக்கி விடக்கூடியது இல்லை. அவை ஈறுகளில் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடியவை.

முறையான வாய் நலவியல் மற்றும் ஒழுங்கான பல் தூய்மை படுத்துதல் ஆகியவை பல் கரைகளில் இருந்து பற்களை காக்கும்.

இயற்கை பொருட்களால் ஆன பற்பசை

பொதுவாக இயற்கை பொருட்களால் ஆன பற்பசைகளுக்கு எந்த பல் மருத்துவ அமைப்பும் சான்றிதள் தருவதில்லை.

இவ்வகை பற்பசைகளில், ஃபுளூரைடு கலவை இருக்காது.

மாற்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் அல்லது வேதியல் பொருட்களை தவிர்க்க நினைப்பவர்கள் இவ்வாறு இயற்கை பொருட்களால் ஆன பற்பசைகளை நாடிச்செல்வார்கள்.

உராய்வு பொருட்கள் அற்ற ஆனால் மாவுச்சோடா கலந்த பல பற்பசைகள் உள்ளன.

அவை பல்லை தேய்த்து தூய்மை செய்வதற்கு பதில், வேதியல் வினை மூலம் கரை எடுப்பானாக மட்டும் செயல்படும்.

இயற்கை பற்பசைகளை பயன்படுத்துவோர், அவற்றில் என்ன கலந்துள்ளது என படித்து தெரிந்து பயன்படுத்துவது சிறந்தது.

இனிப்பு பற்பசைகளை தவிர்பது

இனிப்பு கலந்த பற்பசைகள் தீங்கு விளைவிப்பவை. ஏனெனில், இனிப்பு பற் சிதைவை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கான பற்பசைகளில் அதிகளவு இனிப்பு கலந்திருக்கும். ஆகவே, பல் துலக்கிய பின், வாயை நன்கு கொப்பளித்து கழுவ வேண்டும்.

முடிந்தவரை பல்மருத்துவர் கூட்டமைப்பு ஒப்புதல் வளங்கிய பற்பசைகளை பயன்படுத்துவது சிறந்தது.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: