ஓசூர் அருகே பக்கத்து வீட்டுக்காரருடம் மனைவி ஓட்டம்: கணவர் கதறல்

ஓசூர் அருகே பக்கத்து வீட்டுக்காரருடம் மனைவி ஓட்டம்: கணவர் கதறல்


ஓசூர் அருகே பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட பழகத்தால், அவருடன் தனது மனைவி ஓடி விட்டார் என கதறி அழுத்தபடி கணவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ஓசூர் அருகே உள்ள குருபரபள்ளி அருகே உள்ள பச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரப்பன் மகன் செல்வம் (35). இவர் தச்சு வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி அசுவினி (28). இவர்களில் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் அதே பகுதியை சார்ந்த முனுசாமி என்பவரது மகன் சுரேசு (35).

அசுவினியும், சுரேசும் ஒரே ஊர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதால் உரிமையுடன் பழகி வந்தனர்.

இந்நிலைலில் கடந்த திங்கள் 15-ம் நாள் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்ற அசுவினி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவியை பல்வேறு இடங்களில் மணம் பதபதைத்து தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து குருபரபள்ளி காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தறும்படியும் புகாரளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவலர்கள் நடத்திய புலனாய்வில் அசுவினி அதேப் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சுரேசு(35) என்பவருடன் பழக்கம் இருந்துள்ளதாகவும் அவருடன் சென்றதாக தெரியவந்தது.

இதனையடுத்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து அசுவினி மற்றும் சுரேசை தேடி வருகின்றனர்.Share this Post:

தொடர்பான பதிவுகள்: