ஓசூர் மாணவர் தனியார் பள்ளியில் குத்திக் கொலை

ஓசூர் மாணவர் தனியார் பள்ளியில் குத்திக் கொலை

கொடைக்கானல் பாம்பார்புரம் பசுமைப் பள்ளத்தாக்கு அருகே பாரதிய வித்யா பவனின் காந்தி வித்யாஷ்ரமம் என்ற தனியார் சி பி எஸ் சி பள்ளி இயங்குகிறது.

இப்பள்ளியில் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கி தங்களது கல்வி படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.

கொடைக்கானல் பகுதிகளில் போதி பொருட்கள் விற்கும் நபர்களுடன் இந்த பள்ளியில் பயிலும் மானவர்கள் சிலர் தொடர்பில் இருப்பதாக பல புரளிகள் அந்த பகுதியில் உலாவி வருகின்றன.

அனால், இதை காவல் உயர் பொருப்பாளர்கள் வன்மையாக மறுத்தனர்.

இந்த பள்ளியில் ஒசூர் KCC நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது மகன் (16) மற்றும் விருதுநகர் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பழக்கடை உரிமையாளர் மகன் ச்றீஹரீஸ் (16) ஆகியோர்  விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர், ஆனால், கபில், ச்றீஹரஈசின் குடும் உறுப்பினர் ஒருவரை கீழ்தரமான வார்த்தைகளால் வஞ்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால், இவர்களுக்குள் ஏற்பட்ட இடர்பாடு ஏற்பட்டு பகை மூண்டதாக கூறப்படுகிறது.
இதனால், இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, இரவு உணவு வழங்கும் நேரத்தில் மாணவர் கபில் இரவில்  கழிப்பறைக்குச் சென்றபோது, பின் தொடர்ந்த ச்றீஹரீஸ்  தகராறில் ஈடுபட்டுள்ளான்.

இதில், ச்றீஹரீஸ் திட்டமிட்டு தான் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த கிரிக்கெட் ஊண்று கோல்கள் மற்றும் கத்திரிக்கோலால் கபிலை தாக்கி கழுத்தில் குத்தியுள்ளார். இதில், மாணவர் கபில்பலத்த காயமடைந்தார்.

உடனே, ச்றீஹரீஸ் பள்ளி விடுதியிலிருந்து தப்பித்து, கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது, அப்பகுதியில் ரோந்து சென்ற காவலர்கள் மாணவரைப் பிடித்து விணவி உள்ளனர். அதில், தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசி வந்த உடன் பயிலும் மாணவரான கபிலை தாக்கியதாக ச்றீஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து,  மாணவரை காவலர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, விடுதியில் இறந்து கிடந்த மாணவர் கபிலை பள்ளி கண்காணிப்பாளர்கள் மீட்டு, கொடைக்கானல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து, பள்ளி முதல்வர் மற்றும் கண்காணிப்பாளர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காவலர்கள் கொலை செய்யப்பட்ட மாணவரின் உடலை கைப்பற்றி, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியர் சுரேந்திரன், வட்டாட்சியர் வில்சன் மற்றும் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை நிகழ்விடத்திற்கு சென்று விணவினர்.

இது குறித்து பள்ளி முதல்வர் ராதாகிருட்டிணன் அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல் நிலைய ஆய்வாளர் ராசசேகர் வழக்குப் பதிவு செய்து, மாணவர் ச்றீஹரீசை கைது செய்தார்.

உடல் கூறு ஆய்விற்கு பின், இறந்த மாணவர் கபிலின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: