தமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை

தமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை

பாகம் 1 / பாடம் 1

நேரமானது உலகத் தோற்றத்திற்குக் அடிப்படையான ஐந்திறன்கள் முதல் எல்லவற்றையும் தோற்றுவிக்கின்றது.

இது வரும் நாட்கள், நிகழ் நேரம், சென்ற நாட்கள், எனும் மூன்று வகையாக திகழ்கிறது.

இதுவே அயன், மால், சிவன், என்று கூறப்படும். ஆகையால் தான் திரிமூற்திகள் காலரூபிகள் எனப்படுகிறார்கள். அயன்,மால்,சிவன்,என்பது காலத்தின் ஆக்கல்,இருத்தல்,அழித்தல். என்னும்,முத்தொழில்களின் பெயராகும்.

மேலும் காலமானது ஆண்டுகளாகவும், அயனங்களாகவும், ருதுக்களாகவும், திங்களாகவும், பட்சங்களாகவும், நாட்களாகவும், பரிணமித்து இருக்கின்றது.

காலத்தின் போக்கினால் தான் மரங்கள் காய்கனிகளைத் தருகின்றது. தானியங்களைத் தருகின்றது. தானியங்கள் விளைகின்றது, மழை முதலியவைகளும் ஏற்படுகின்றது.


காலத்தின் கோலத்தினால் தான் பெண்கள் ருதுவாகின்றனர். திரிகோணங்கள் ஏற்படுகின்றது, ஜனன மாணதிகளும் உண்டாகின்றது. சுருங்கக்கூறின் அண்டபிண்டங்களின் ஆட்சியே காலம் எனலாம். இந்த காலச்சக்கரத்தில் உழலாதவர் எவருங் கிடையாது.

காரிய ஏதுவாகிய இக்காலத்தை வெல்ல எவராலும் முடியாது. எனினும் அவரவர்கள் தங்கள் காலப் பிராப்தி வரையிலாவது சக ஜீவியாய் வாழ நினைக்கலாம்.

சுவரை வைத்துக் கொண்டு தான் சித்திரம் வரைய வேண்டு மென்பது போல, மனிதன் தன் உடல் நன் நிலையில் உள்ள வரையில் தான் எதையுஞ் சாதிக்க முடியும்.

உடலானது நன் நிலையிலிருக்க இதமான உணவும், மிதமான இயக்கமுமே முதற் காரணமாயுள தென்றும், அதின்றி இவைகளின் வியற்பமே பிணி முதலிய பெருந்துன்பங்களுக்குள்ளாகின்றன என்றும் வைத்திய நூல்களில் பன்முறையும் வலியுறித்திக் கூறப்பட்டுள்ளதையும் காணலாம்.

பிணி முதலாதிகளினால் பெருந்துன்பங்கள் எதுவும் ஏற்படாமல், காலப்பிராப்தி வரையிலாவது, சுக ஜீவியாய் வாழ வைத்தியநூல்கள் நமக்கு ஒரளவு துணைபுரிவதால் உயிர் நூலாம் வைத்தியநூலின் காலஞானத்தைக் குறித்துக் கூறப்பட்டது.

காலமென்ற நெருப்பானது ஜடராகினியில் சேர்வதனால் உணவு, நீர், தூக்கம், காமம், என்ற நான்கு வித வாஞ்சைகள் உண்டாகின்றது.

இவைகளில் உணவின்மையால் தாது நட்டமும், நீரின்மையால் குருதி குறைவும், காமத்தினால் நேத்திரந்தியக் கெடுதியும், நித்திரை இன்மையால் சகல பிணிகளும் தொடர்கின்றன.

சுருதி, யுக்தி, அனுபவம் என்னும் மூவிதங்களினால் சரீரம் ஆன்மா என்றும், மனம் அந்தரான்மா என்றும்,பிராணன் பரமான்மா வென்றும் இவைகளே பஞ்ச தத்துவங்களையும் தாரணை செய்து இருக்கின்ற தென்றும்.தெரியவருகிறது.

ஆகையால் ஆன்மாவுக்கும், மனதுக்கும் விகற்பமுண்டாகில், மனிதன் உயிர் வாழ முடியாதென்றும் அவன் காலம் என்றவனால் ஐக்கியப்படுவானென்றும் கூறப்படும்.

அகலில் சம்பூரணமாய் எண்ணெயிருந்தும், சோதியாய் எரிந்து கொண்டிருந்த விளக்கின் வத்தியானது கையால் எப்படி அணைந்து போகிறதோ, அப்படியே யாவற்றிற்கும் ஆதாரமாகிய காற்று, ஆதாரமற்றதாகிற போது, உயிர்களுக்கு மரணம் நிகழ்கிறது. இது மருத்துவனுடைய மணிமந்திர ஒளடதாதிகளினால் ஒரளவு சாந்தியாகின்றது.

மூச்சு

சாதாரணமாய் மனிதன் நாள் ஒன்றுக்கு 21600 முறை மூச்சு விடுகிறான். இதையே மூச்சு என்றும், இது விகற்பமின்றி நடைபெற்று வரின், மனிதன் 100 ஆண்டு வரை, சுக உயிராய் வாழலாமென்றும் நம்முடைய பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இயற்கையான சுவாசமானது 12 அங்குலம் ஒடி,4 அங்குலம் அழிந்து,8 அங்குலம் தான் நின்ற இடத்தை நோக்கும்.இவ்வாறு சுவாசத்தில் 4 அங்குலம் அழிவு ஏற்படுவதால்தான்,

மனிதனின் ஆயுட்காலம் 100 வயதாக ஏற்பட்டதென்றும், அதின்றி மூச்சில் அழிவு எற்படாமல் இருப்பின் பல்லாண்டுகள் உயிருடன் இருக்கலாமென்றும் அறியக்கிடக்கின்றது.

அதனால்தான் யோகாப் பியாசிகள் மூச்சி சிறிது சிறிதாய் பந்தனப்படுத்தி, நீண்ட ஆயுளையும், திடமான உடலையும்யும் அடைந்து வாழ்கின்றனர்.

மூச்சினால் ஒரு அங்குலத்தை பந்தனப்படுத்தினால் பல சக்திகள் ஏற்படுமென்றும்,12 அங்குலத்தை பந்தனப்படுத்தியவர் பேரின்ப நிலையை அடைந்து என்றும் சிரஞ்சீவியாய் இருப்பார்களென்றும் அறியக்கிடக்கின்றது.

வலது பக்கத்து நாசியில் சுவாசிப்பதற்கு சூரியகலை அல்லது பின்கலை என்று பெயர்.  இது 12 கலைகளையுடையது.

இடதுபக்கத்து நாசி சுவாசிப்பதற்க்கு சந்திர கலை அல்லது இடகலை என்று பெயர்.  இது 16 கலைகளையுடையது.

இவைகள் இரண்டிற்கும் இடையில் இருப்பதே சுழிமுனை எனப்படும். மேற் கூறப்பட்டுள்ள சரங்களில் முறைப்படி சுவாச அப்பியாயங்களை செய்துவருவதற்கே பிராணயாமம் என்று பெயர்.

இதனைத்தக்க குரு முகாந்திரமாய்க் கற்றுப் பழகி வருதல் நன்றென்றும்,  இதனால் மனிதன் நீண்ட நாள் சுகானந்தத்தோடு உயிர் வாழ முடியும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: