ஓசூரில் பூத்துக்குலுங்கிய பிரம்ம கமல பூக்கள்

ஓசூரில் பூத்துக்குலுங்கிய பிரம்ம கமல பூக்கள்

ஓசூர் மூவேந்தர் நகரில் வாழ்ந்து வருபவர் சுப்பா ராவ். பல்பொருள் தொழில் முகவரான இவர் தனது வீட்டில் பலவகை செடிகளை வளர்த்து வருகிறார்.

கடந்த நாள் (01.08.2019) இரவு, அவரது வீட்டில் உள்ள பிரம்ம கமல பூ செடிகளில், மலர்கள் கொத்து கொத்தாக பூத்தன.

பொதுவாகவே ப்ரம்ம கமல பூக்கள் ஒரே நேரத்தில் பூக்கும் தன்மை உடையவை.சுப்பாராவ் வீட்டில் இருந்த செடிகள் பூ மொட்டுக்கள் நிறைந்து காணப்பட்ட நிலையில் அவை ஒரே நேரத்தில் பூத்துக் குலுங்கியது பார்ப்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.பூக்களின் வாசனை அந்த பகுதியை சூழ்ந்து ஒரு வித இறை தன்மையை வெளிக்கொண்டு வந்தது.இந்த பிரம்ம கமல பூக்களை, அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வியப்புடன் பார்த்து சென்றனர்.