யானைக் குட்டி தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டது

யானைக் குட்டி தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டது

தேன்கனிக்கோட்டை அருகே காட்டுப் பகுதியில் விலங்குகள் நீர் அருந்த அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த யானைக் குட்டியை, அதன் அம்மா யானை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் காட்டுப் பகுதியில் நிலவும் வறட்சியால் யானைகள் தண்ணீர் குடிக்க மனிதர்கள் வாழும் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில், வனத்துறையினர் சார்பில், காட்டுப் பகுதியில் ஆங்காங்கே காட்டு விலங்குகள் நீர் குடிக்க ஏதுவாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொழுவப்பெட்டா காட்டுப்பகுதி மாதேசுவரன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர் தொட்டியில் யானைகள் தண்ணீர் குடிக்க வந்தன.

தண்ணீர் குடித்தபின் யானைக் கூட்டம் அங்கிருந்து சென்றுவிட்டது. அதன்பின், அங்கு தண்ணீர் குடிக்க தாயுடன் வந்த யானைக் குட்டி தண்ணீர் குடித்தபோது தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டது.

தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியே வரமுடியாமல் யானைக்குட்டி தவித்தது.

இந்நிலையில், யானைக்குட்டியை வெளியே கொண்டுவர தாய் யானை போராடியது.

சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின், யானைக்குட்டியை, தாய் யானை தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியே கொண்டுவந்தது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: