ரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி

ரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி

தமிழ் திரை உலகின் நாயகர்களின் கணவி நிலை எதுவென்றால் அது ரசினி கொண்டிருக்கும் "சூப்பர் ஸ்டார்" என்கிற நிலை தான்.

யாருக்கும் எட்டாத இடத்தை ரசினி மக்கள் மனதில் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ரசினியை கிண்டலடிக்கும் விதமாக செயம் ரவி தனது புதிய படத்தில் காட்சி அமைத்திருப்பதாக கூறப்படுகிறது

ரசினி அரசியலுக்கு வருவதாக கடந்த 16 ஆண்டுகளாக சொல்லிவருவதாக, கேலி செய்து செயம் ரவியின் கோமாளி படத்தில் காட்சி இடம் பெற்று உள்ளது!!!

ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் முன்னோட்டம் காரி (சனி) கிழமை வெளியானது.

கோமாளி முன்னோட்ட காட்சி வெளியான சில மணி நேரங்களிலேயே யூ டியூப்பில் பல ஆயிரம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

இந்த முன்னோட்டத்தின் ஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக இந்த காட்சி படத்தில் இடம்பெற்றதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளரும், நாயகன் ஜெயம் ரவியும் மறுப்பு தெரிவித்தனர்.

ஓசூர் பையன்:  எது எப்படியோ... படம் பேமஸ் ஆகி ஓடினால் சரி...