ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

அந்த மாநிலம் 2 யூனியன் பகுதிகளாக செயல்படும் என அவர் அரிவித்தார்.  

அதன்படி, ஆளுநரின் கீழ் லடாக் என்ற பகுதியும், சட்டமன்றத்துடன் கூடிய யூனினாக ஜம்மு காஷ்மீர் பகுதியும் இனி இயங்கும்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் இனிமேல் பொருந்தும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசமைப்புச் சட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 1954-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி ஜம்மு காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்ட 370-வது பிரிவின் கீழ் சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு இருந்தன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ, 370 ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

அதாவது இனிமேல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளும், கோட்பாடுகளும், நெறிமுறைகளும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும்.

இந்நிலையில் காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பகுதிகளாக இனி ஜம்மு காஷ்மீர் இருக்கும் என அமித் ஷா அறிவித்தார்.

அதன்படி சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பகுதியாக ஜம்மு காஷ்மீர் செயல்படும் எனவும், அதே வேளையில் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பகுதியாக செயல்படும் எனவும் அவர் கூறினார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: