ஓசூர் - ஆகஸ்ட்டு திங்களின் மின் தடை தகவல்

ஓசூர் - ஆகஸ்ட்டு திங்களின் மின் தடை தகவல்

Hosur Maintenance power shutdown notice August 2019

ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திங்கள் தோறும் ஒரு முழு பகல் நேரம் மின் பகிர்மானம் நிருத்தப்பட்டு துணை மின் நிலையங்களில் ஒக்கிடுதல் பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அதே போல இந்த ஆகஸ்ட்டு திங்களில் ஓசூர் முழுமைக்கும் 17.08.2019 - காரி கிழமை அன்று மின் பகிர்மானம் நிறுத்தப்பட்டு ஒக்கிடுதல் பணிகளை மேற்கொள்ள மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

வழக்கமாக, ஒவ்வொரு பகுதிக்கு என்று ஒரு நாள் அறிவிக்கப்படும்.  ஆனால் இந்த முறை, இதற்கு மாற்றாக ஒரே நாளில் அணைத்து பகுதிகளிலும் மின் பகிர்மானம் நிறுத்தப்படும்.

அதனால், ஓசூர், சூளகிரி, சிப்காட் என அணைத்து பகுதிகளிலும் 17.08.2019 அன்று மின் தடை இருக்கும்.

ஆகவே தொழில் முனைவோரும், வீட்டு மின் இணைப்பு பெற்றவர்களும் தத்தமது மின் தொடர்பான வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

There will be a monthly maintenance power shutdown at Hosur in All Substations on Saturday 17.08.2019 from 08.00 AM to 06.00 PM.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: