சுஷ்மா ஸ்வராஜ் மரணமடைந்தார்

சுஷ்மா ஸ்வராஜ் மரணமடைந்தார்

நடுவன் அரசின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜக-வின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல் நலக்குறைவினால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவம் பலனின்றி மரணமடைந்தார்.

சுஷ்மா ஸ்வராஜ் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக தனது பொது வாழ்வை துவக்கினார்.

சிறந்த பேச்சாளரான அவர், தனது 25- வது வயதிலேயே அரியானா மாநிலத்தில் அமைச்சர் ஆனார்.

1998-ம் ஆண்டு டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றார்.

வாஜ்பாயி தலைமையிலான நடுவன் அரசில் பல்வேறு பொருப்புக்களை சுஷ்மா வகித்தார்.

இந்திரா காந்தியின் அவசர நேரத்தில் ஜார்ஜ் ஃபெர்னான்டஸுடன் கைத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுஷ்மா ஸ்வராஜ் 2014 மக்களவை தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை முதன்மை அமைச்சர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் பதவி வகித்துள்ளார்.

இவர் இந்தியாவின் 2-வது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார்.

மரணமடைவதற்கு சற்று முன்பு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடுவன் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்காக முதன்மை அமைச்சர் மோடிக்கு தனது டிவிட்டர் பதிவின் மூலம் வாழ்த்து தெறிவித்திருந்தார்.

சுஷ்மா ஸ்வராஜ்-க்கு (67) நேற்று (06.08.2019) இரவு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டது. ஆனாலும் மருத்துவம் பலனின்றி மரணமடைந்தார்.

செய்தி அறிந்த நடுவன் அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அர்ஷவர்தன் ஆகியோர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு சிறுநீரக கோளாறினால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை மருத்துவம் செய்துகொண்டார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: