சிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக

சிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக

சிலந்தி வலையின் நூல்கள் எடையளவில் குறைவானதாக இருப்பினும், வலுவில் அவற்றிற்கு இணை என்று எதுவும் இல்லை.

அதாவது, பொருளின் எடைக்கும் அதன் வலுவிற்குமான விகிதத்தின் படி பார்த்தால், சிலந்தி வலை வலுவில் முதல் நிலையில் உள்ளது.

செயற்கை தசைகள் உருவாக்க சிலந்தி வலையின் நூல் தன்மைகள் மிகச் சரியான மூலப்பொருளாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

அறிவியலாளர்கள், சிலந்தி நூலை ஈரப்பத வேறுபாட்டிற்கு உட்படுத்தி ஆய்வு மேற்கொண்ட போது, ஈரப்பதத்திற்கு தக்கவாரு அவை இழுபடவும் முறுக்கிக்கொள்ளவும் செய்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் கேம்பிரிட்சில் உள்ள மசசுசட் தொழில் நுட்பக் கழகத்தை சார்ந்த பொறியியல் அறிவியலாளர்கள் மார்குச் பெஃக்லர், அன்னா டொரக்கனோவா மற்றும் இளம் நிலை மானவர் கிளாரி சூ மற்றும் சீனாவின் வூகானில் உள்ள ஊளாங் பல்கலை கழகத்தை சார்ந்த டாபியோ லியு ஆகியோர் வெளியுட்டுள்ள ஆய்வறிக்கையில், சிலந்தி நூலின் பயன்பாடு குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சிலந்தி நூலின் மேன்மையான சுருங்கும் தன்மை

ஈரப்பதத்திற்கு ஏற்ப மிக விரைவாக மேன்மையான சுருங்கும் தன்மை சிலந்தி நூலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவை விரைவாக சுருங்குவது மட்டுமின்றி முறையாக முருக்கிக் கொள்ளவும் செய்கிறது.

இது புதுமையான இயல் நிகழ்வாகும் (Phenomenon).

இந்த தன்மையை எதேச்சியாக கண்டுணர்ந்ததால், மேலும் உறுதி செய்து கொள்ள, அவர்கள் ஒரு எடையை சிலந்தி நூலில் கட்டி அதை ஒரு மூடிய குடுவையில் தொங்கவிட்டனர்.

அந்த குடுவையின் உள் ஈரப்பதத்தை மாறுபடுத்தி ஆராயும் விதமாக வடிவமைத்திருந்தனர்.

ஈரப்பதத்தின் மாறுபாட்டிற்கு தக்கவாறு அந்த எடையானது மேலே தூக்கப்பட்டும், சுழன்று கொண்டும் எதிர் வினை ஆற்றியது.

ஆகவே, இந்த சிலந்தி நூல் இளைகளின் தன்மையை கொண்டு செயற்கை தசைகள் உருவாக்க இயலும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

உலகம் முழுவதும் இது தொடர்பான ஆராய்வு

உலகம் முழுவதிலும் உள்ள பல அராய்சியாளர்கள், சிலந்தி நூலின் சிறப்பு தன்மை குறித்த தங்களின் ஆராய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலந்தி நூல் எடைக்கும் திடத்திற்குமான விகிதத்தில் சிறந்து விளங்குவதாலும், இளக்கமான தன்மையுடையதாக இருப்பதாலும், அவை பல பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது.

புரோலைன் என்கிற புரதப்பொருள் சிலந்து நூல் முருக்கிக்கொள்வதற்கான அடிப்படையாக இருக்கிறது.

சிலந்தி நூல் இரு வேறு புரத்த கூட்டுப் பொருட்களால் ஆனது. அவை முறையே MaSp1 மற்றும் MaSp2.

புரோலைன் என்பது MaSp2 என்ற மூலக்கூறில் இருக்கும் புரதமாகும்.

ஈரப்பதம் கூடும் போது, நீரியத்தின் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி முருக்கும் தன்மையை ஏற்படுத்துகிறது.

மேலும், முருக்கு தன்மை எப்பொழுதும் ஒரே திசையை நோக்கி மட்டுமே ஏற்படுகிறது.

எந்திரனுக்கான செயற்கை தசை

புரோலைன் புரதத்தின் தன்மையை செயற்கையாக செயற்கை பொருட்களின் உருவாக்கினால், நீடித்து உழைக்கக்கூடிய ஒரு செயற்கை இளையை விரைவில் கண்டு பிடிக்க இயலும்.

அத்தகைய செயற்கை பொருள் வரும் நாட்களில் எந்திரன்களில் பயன்படத்தக்க செயற்கை தசையாக செயல்படும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: