தோலை புண் மீது அச்சடிக்கும் உயிரி அச்சு இயந்திரம்

தோலை புண் மீது அச்சடிக்கும் உயிரி அச்சு இயந்திரம்

அறிவியலாளர்கள், புண் மீது நேரடியாக இரு அடுக்கு தோலை துல்லியமாக அச்சிட்டு சரி செய்யும் உயிரி அச்சு இயந்திரம் ஒன்றை முயன்றுள்ளனர்.

காகிதங்கள் மற்றும் பிற பொருட்களின் மேல் அச்சிடுகிறோம் என்றால், அதற்கு அச்சு இயந்திரத்தில் வேதி பொருட்கள் அடங்கிய சாய மை பயன்படுத்துவோம்.

அந்த வேதியல் மை -க்கு பதிலாக உயிர் அணுக்கள் இருந்தால், அதிலும் ஒரு மனிதரிடம் இருந்து பெறப்பட்ட தோலின் அணுக்களாக இருப்பின் அதை கொண்டு பதிக்கப்பட்ட மேல் தோலை அச்சிட முடியும் என அறிவியலாளர்கள் செயல் விளக்கமாக காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் வட கரொலைனாவை சார்ந்த வேக் ஃபாரச்ட் பாப்டிஸ்ட் நடுவத்தை சார்ந்த மருத்துவ அறிவியலாளர்கள் கை அடக்கமான ஒரு உயிரி அச்சிடும் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

அந்த உயிரி அச்சு இயந்திரத்தினால், சேதமுற்ற தோல் பகுதியின் அளவை துல்லியமாக அலகீடு செய்து, அதற்கு ஏற்ப, தோல் உயிர் அணுக்களை புண்ணின் மீது நேரடியாக பதித்திட இயலும்.

இந்த புதிய முயற்சி, நீரளிவு நோயினால் பதிக்கப்பட்டு, அதனால் ஏற்படும் நாள்பட்ட புண்ணை குணமாக்குவதற்கான ஒரு எளிய வழிமுறயாக அமையும்.

மேலும், 10 முதல் 30 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டதால் உடல் மேல் தோலை இழந்தவர்களுக்கு இது உடனடி தீர்வாக இருக்கும்.

படுக்கை புண் அல்லது அழுத்தத்தினால் ஏற்படுன் புண்ணினால் பதிக்கப்பட்டவர்களுக்கு இது தீர்வாக அமையும்.

தோல் அணுக்களின் வகைகள்

பாதிப்படையாத தோலில் இருந்து, மேல்தோல் நார்முகை மற்றும் கெரட்டினணுக்களால் ஆன மீந்தோல் ஆகியவற்றை திசு ஆய்வின் மூலம் எளிதாக பிரித்து விடலாம்.

மேல்தோல் நார்முகை தான் புண் குணமடைய தேவையான நார்களை உருவாக்கி ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துகிறது.

கெரட்டினணுக்களால் ஆன மீந்தோல், வெளிப்புற தோலாக இருக்கிறது. இதுதான் நோய் தொற்றில் இருந்து காக்கிறது.

மை உருவாக்கும் முறை

நீர்ம கூழ்மத்தில் தோலின் குறிப்பிட்ட அணுக்களை கலந்து அதை உயிரி அச்சு இயந்திரத்தில் வைக்கவேண்டும்.

இயந்திரத்தில் உள்ள அலகீடு கருவி, புண்ணை ஆராய்ந்து அதை கருவியின் மென்பொருளுக்கு அனுப்புகிறது.

அந்த மென்பொருள் உயிரி அச்சு இயந்திரத்தின் அச்சு பொறிக்கு எவ்வாறு எவ்வளவு அணுக்களை எந்த எந்த இடங்களில் பதிக்க வேண்டும் என்ற கட்டளையை இடுகிறது.

இதன் மூலம் புண் விரைவாக குணமடைய வழி வகை செய்கிறது.

தற்பொழுது உள்ள முறை

தற்பொழுது உள்ள முறையில், நன்றாக இருக்கும் தோலை எடுத்து பாதிப்படைந்த தோல் பகுதிய்ல் ஒட்டும் முரையாகும்.

இது வெற்றிகரமான செயல் முறையாக இருப்பினும், நல்ல தோல் பகுதி இல்லாத நிலையில் இந்த முறையை கையாள்வதில் பல சிக்கல்கள் எழுகின்றன.

தோல் கொடையாளர்களிடமிருந்து தோலை பெற்று ஒட்டும் முறையில், ஒட்டப்பட்ட தோலை, கொடையாக பெற்றவரின் உடலின் எதிர்ப்பு தன்மை தள்ளி ஒதிக்கி விடும் நிலை இருக்கிறது.

அச்சிடும் முறையில், ஒருவரது தோல் அணுக்களை அவரிடமே பெற்று ஆய்வகதில் பெருகச் செய்து அதை பயன்படுத்துவதால், அவரது உடலின் எதிர்ப்பு தன்மை தோலைன் அணுக்களை எதிர்த்து வினைபுறியாது.

தோல் ஒட்டும் முறையில், தோலை அறுவடை செய்வது என்பது வலி தரத்தக்கதாகும். ஒட்டும் போதும், வலி ஏற்படும்.

தோலை அச்சடிக்கும் முறையில் வலி ஏற்படுவதற்கான வாய்புகள் எதுவும் இல்லை.

புண்ணை குணப்படுத்தும் வழி முறைகள் பல இருப்பினும், அவை புண்ணை நேரடியாக குணப்படுத்தும் தன்மை கொண்டவை அல்ல.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: