பூஞ்சானில் இருந்து மலிவான எரிபொருள் - மலிவானது

பூஞ்சானில் இருந்து மலிவான எரிபொருள் - மலிவானது

பூஞ்சானில் இருந்து மலிவான எரிபொருள்!

வேதியல் பொறியாளர்கள் குழு ஒன்று பூஞ்சான்களின் கொழுப்பில் இருந்து உயிர்திரளை எரிபொருளுக்கு பயன்படும் வகையில் வடிகட்டி எடுத்துள்ளனர். இது முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஒப்பிடுகையில் செலவு குறைவானதாகும்.

இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால், மலிவான எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான வழி பிறக்கும்.

அமெரிக்காவின் உத்தாவ் பல்கலை கழகத்தை சார்ந்த வேதியல் பொறியாளர்கள் கப்பல், வாணூர்தி, வண்டிகள் மற்றும் உலங்குகளில் பயன்படுத்தத்தக்க எரிபொருளை பூஞ்சானில் இருந்து வடிகட்டி காட்டியுள்ளனர்.

இந்த புதிய முறையானது, மிக விரைவாகவும், பெரும் அளவிலும் எரிபொருளை வடிகட்டும் தன்மை உடையதாக இருக்கிறது.

இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரும் செலவு பிடிப்பதாக இருந்தது. அதிலும் திறன் செலவிடுதலும் கூடுதலாக இருந்தது.

இவர்கள் இதற்கென்று வேகமாக கலக்கும் இயந்திரம் பயன்படுத்தி முயன்றுள்ளனர்.

இந்த பூஞ்சான்கள், ஏரி, குளம், குட்டை என அனைத்து வகை நீர் நிலைகளிலும் காணப்படும் வளக்கமான பூஞ்சான் வகையாகும்.

இந்த பூஞ்சான்களில் மிகுதியான கொழுப்பு சத்து நிரைந்துள்ளதால், அவற்றில் இருந்து
உயிரி கச்சா எண்ணை வடித்தெடுக்க இயல்கிறது.

பழைய முறைக்கும் புதிய முறைக்கும் வேறுபாடு

பழைய முறையில் பூஞ்சானில் இருந்து முதலில் நீரை வடிக்கட்ட வேண்டும். இதற்கு ஏகப்பட்ட திறன் செலவிட வேண்டி இருந்தது.

நீர் நீக்கப்பட்ட பூஞ்சானில் பலதரப்பட்ட கரைப்பான்களை கலக்க வேண்டும். அதன் மூலம் கொழுப்பு பிரித்தெடுக்கப்படும்.

இதில் இருந்து கச்சா எண்ணை பெறப்பட்டு, பின்பு வடித்தெடுக்கப்பட்ட எரிபொருள் கிடைக்கும். அந்த எரிபொருளை டீசலுடன் கலந்து அதை டீசலில் இயங்கும் இயந்திரங்களுக்கு பயன்படுத்துவர்.

பூஞ்சானில் இருந்து மலிவான எரிபொருள் எடுக்க பலவாரான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முதல் தடையாக வருவது, பெரும் செலவு கொண்ட நீரை பிரித்தெடுக்கும் முறை.

இந்த புதிய முயற்சியில், வேகமாக கலக்கும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

அது, வேகமாக, கரைப்பான்களை பூஞ்சான் கலவை மீது பாய்ச்சுகிறது. அதனால் ஏற்படும் சுழல் கொந்தளிப்பினால் கொழுப்பு பிரித்தெடுக்கப்படுகிறது.

பயன்படுத்தப்பட்ட கரைப்பான்களும் மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதால் அதிலும் செலவு மீதமாகிறது.

பொறியாளர்களின் கூற்று

பொறியாளர்களின் கூற்றுப்படி இந்த வழிமுறையானது பிற உயிரிகள் மீதும் பயன்படுத்தி அதன் மூலம் எண்ணை பெற முடியும்.

உலகம் முழுவதும், புவியில் இருந்து பெறப்படும் எரிபொருளுக்கான மாற்று குறித்த சிந்தனை மேலோங்கி வரும் நிலையில், இந்த புதிய முயற்சி விரைவில் தொழிற்சாலை ரீதியிலான எரிபொருள் எண்ணை உற்பத்திக்கு வரும் என்பதில் ஐயம் இல்லை.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: