மணல்வாரி என்றால் என்ன, எதனால் ஏற்படுகிறது?

மணல்வாரி என்றால் என்ன, எதனால் ஏற்படுகிறது?

மணல்வாரி என்பது ருபெல்லா, ஜெர்மானிய தட்டம்மை, தட்டம்மை என பல பெயர்களால் அழைக்கப்படும் ஒரு வகை அம்மை தொற்று நோய் ஆகும்.

இது குழந்தைகளிடம் வேகமாக வெப்ப சூழ்நிலையில் பரவக்கூடிய அம்மை நோய் ஆகும்.

தட்டம்மையானது பாரோமைக்சோ என்றழைக்கப்படும் நச்சுயிரி (வைரஸ்) -ஆல் ஏற்படுகிறது.

மணல்வாரி நோய் அறிகுறிகள்
முதல் அறிகுறியாக வெளிப்படுவது, உடல் வெப்பத்தில் மாறுதல். லேசான காய்சல் தென்படும்.

பின்பு, வேர்குரு போன்று உடலின் சில பாகங்களில் மட்டும் அதிகளவு தோன்றும். இது சிவந்து காணப்படுவதால் எழிதாக வேர்குருவில் இருந்து வேறுபடுத்த இயலும்.

இந்த நச்சுயிர் நோய் தொற்று குழந்தைகளிடம் பெரும் பாத்திப்பு எதையும் செய்வதில்லை என்றாலும், கருத்தறித்துள்ள பெண்கள் வயிற்றில் உள்ள கருவிற்கு பெரும் கேடாக அமைகிறது.

 • இருமல்
 • விழிவெண்படல அழற்சி - கண் சிவந்து காணப்படும்.
 • சளி - மூக்கு ஒழுகுதல், கண்ணில் நீர், விழிமடல் வீக்கம், தும்மல் போன்ற சளி அறிகுறிகள்
 • கண் சிவத்தலும் ஒளிக் கூச்சமும்
 • குறைந்த அளவு காய்ச்சலில் இருந்து அதிகக் காய்சல் வரை (உச்சம் 40.6C (105F) பல நாட்கள் தொடரும். பின் குறைந்து, கொப்புளம் தோன்றும்போது மீண்டும் வரும்.
 • களைப்பு, எரிச்சல் மற்றும் பொதுவான ஆற்றல் இழப்பு
 • இளம் பெண்களுக்கு மூட்டுகளில் வலி
 • பசியின்மை
 • வாயிலும் தொண்டையிலும் நுண்ணிய சாம்பல் வெள்ளைப் புள்ளிகள் (கோப்லிக்கின் புள்ளிகள்)
எதனால் மணல்வாரி ஏற்படுகிறது?

மணல்வாரியை அம்மை நோயின் வகை என்று அடையாளப்படுத்தினாலும், இது பொதுவான அம்மை நோய் ஏற்படுத்தும் நச்சுயிரி மூலம் ஏற்படுவதில்லை.

இதை ஆங்கிலத்தில் ரூபெல்லா என்று அழைக்கின்றனர்.

நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர் இரும்பும் போதும், தும்மும் போதும் காற்றில் அவர்களின் சளி மற்றும் எச்சிலுடன் கலந்து இந்த நச்சுயிரி பரவுகிறது.

நச்சுயிரி உடலில் தொற்றி முத ஏழு நாட்களுக்கு எவ்வகை அறிகுறிகளும் தோன்றாது.

சிலருக்கு நோய் தொற்று ஏற்பட்டு எவ்வகை அறிகுறிகளும் இன்றி தானாகவே விலகி விடும். ஆனால், இவர்களால் நோய் பெருமளவில் பொது இடங்களில் பரப்பி விடப்படும்.

இது பாரோமைக்சோ நச்சுயிரியால் ஏற்படும் மூச்சு மண்டல தொற்று நோயாகும்.

இந்த நச்சுயிரி, ஒற்றை இழையும், எதிர்-உணர்வும், ஆர்.என்.ஏ. பொதிந்த நச்சுயிரியாகும்.

பாரோமைக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த மார்பிலி நச்சுயிரி இனத்தைச் சார்ந்தது.

இந்த நச்சுயிரி இயற்கையான ஓம்புயிரி (Host) மனிதர்களே.

ஏற்படும் கோளாறுகள்

சிறுவர் சிறுமியருக்கு இந்த தொற்று நோய் ஏற்படுவது பொதுவான ஒன்றுதான். குறிப்பாக வெயில் பெருமளவு உள்ள வெப்ப நாட்களில் இந்த மணல்வாரி நோய் தொற்று எழிதாக தொற்றும்.

கருவுற்ற பெண்களுக்கு இந்த நோய் மிக கொடியது. அதிலும் மூன்று திங்கள் கருவுற்ற நிலையில் இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நச்சுயிரி கருவாக வளரும் குழந்தைக்கு மாற்ற இயலாத பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

கருவில் வளரும் குழந்தையின்


 • இதயத்தில் பாதிப்பு மற்றும் கோளாறு
 • கண்ணில் புரை
 • செவிட்டு தன்மை
 • கற்றல் குறைபாடு
 • ஈரலில் குறைபாடு
 • நீரிழிவு நோய்
 • என்டோகிரைன் சுரப்பி கோளாறு (தைராய்டு)

ஆகிய மாற்ற இயலா ஊணத்தை ஏற்படுத்தும்.

சில பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படும். சிலருக்கு குழந்தை இறந்து பிறக்கும்.

ஆண்களை விட இந்த நோய் தொற்று பெண்களுக்கு பெரும் பாதிப்புக்களை விட்டுச்செல்லும்.

குறிப்பாக இளம் பெண்கள் இந்த நோய் தொற்று ஏற்பட்டால் பல பக்க விளைவுகளால் அல்லல் படுவார்கள்.

சில நேரங்களில், மூளையையும் இந்த நச்சுயிரி பாதிக்கும்.

தடுக்கும் முறைகள்

தற்பொழுது இந்த தட்டம்மை என்றழைக்கப்படும் மணல்வாரி தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசிகள் இருக்கிறது,

இந்த தடுப்பூசியை MMR என்றழைக்கின்றனர்.

இந்த தடுப்பூசியை முதலில் குழந்தை பிறந்த 12 ஆவது திங்களிலும் அடுத்த ஊக்க தடுப்பூசியை 4 அல்லது 5 வயது ஆன பின்பும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நோய் தொற்று பெரும் அளவில் உள்ள பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு 6 ஆவது திங்களிலேயே பெற்றுக்கொள்ள வைப்பது சிறந்தது.

தடுப்பூசி பெறப்படாத பெண்கள் திருமணத்திற்கு முன்போ அல்லது கருவுற முடிவெடுப்பதற்கு 6 திங்களுக்கு முன்போ தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருவுற்ற பெண்ணிற்கு மணல்வாரி தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?

தடுப்பூசி பெறாத கருவுற்ற பெண் தனக்கு மணல்வாரி தொற்று ஏற்பட்டதாக கருதினால் உடனடியாக மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

கருவை நச்சுயிரி தாக்க வன்னம் "ஃகைப்பர் இம்மூன் குளோபுலின்" என்றழைக்கப்படும் நோய் நுண்ணுயிர்க்கொல்லி பயன்படுத்தி காக்கலாம்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: