மனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது

மனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது

தன் உணர்வு இல்லாமலேயே புவியின் காந்த புலன் வேறுபாடுகளுக்கு இனங்க மனித மூளை செயல்படுவதை ஆய்வின் மூலம் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வுக்கூட ஆய்வில், மனித மூளையானது எவ்வாறு புவி காந்த வேறுபாடுகளுக்கு இனங்க மறுமொழி தருகிறது என்பதை கண்டறிந்து விளக்கியுள்ளனர்.

கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் மற்றும் டோக்கியோ பல்கலை கழக அறிவியலாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் பல மனிதர்களின் மூளை தன்னை அறியாமல் எவ்வாறு புவி காந்த வேறுபாடுகளை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு எவ்வாறு பதில் தருகிறது என்பதை விளக்கியுள்ளனர்.

கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தை சார்ந்த புவி காந்தவியல் வல்லுனர் சோசப் கிரிச்விங் மற்றும் மூளை நரம்பியல் வல்லுனர் சின் சிமோசோ மற்றும் டோக்கியோ பல்கலை கழத்தை சார்ந்த நரம்பியல் பொறியாளர் அயு மடானி ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் மனித மூளை செயல் அலைகளானது புவியின் காந்த திடனுக்கு ஏற்ப வேறுபாடுகளை பதிலாக தருவதை கண்டறிந்தனர்.

இதற்காக புவி காந்த அலைகளின் திடனை கட்டுப்பாட்டுடன் பங்கேற்பாளர்களை ஆய்விற்கு உட்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

கடல் ஆமைகள், தேனீக்கள், சில பறவை இனங்கள், திமிங்கிலம், வவ்வால், சாலமன் மீண்கள் போன்ற உயிர் இனங்களால் புவி காந்த அலைகளின் விசையை உணர முடியும் என ஏற்கனவே பல ஆய்வுகள் எடுத்துக் கூறியுள்ளன.

நாய்களை காந்தங்கள் ஒழித்து வைக்கப்பட்ட இடங்களை துல்லியமாக கண்டுபிடிக்க பழக்க முடியும்.

இந்நிலையில், மனிதர்களால் புவி காந்த விசையில் ஏற்படும் மாறுதல்களை உணரமுடியுமா என்ற கேள்வி பல ஆண்டுகளாக அறிவியலாளர்களிடையே இருந்து வந்தது.

1980 களில் இருந்தே மனிதர்களும் பிற உயிர் இனங்கள் போல புவி காந்த அலைகளில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும் என்ற நம்பிக்கை அறிவியலாளர்களிடம் இருந்து வந்தது.

இருப்பினும், இதற்கான முறையான ஆய்வுகளோ அல்லது தொழில் நுட்ப வாய்புகளோ இல்லமல் இருந்ததால் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.

அறிவியல் முன்னோடியாக கருதப்படும் அரிச்டாட்டில், மனிதர்களின் அடிப்படை உணர்வுகளாக பார்வை, கேட்டல், ருசி அறிதல், நாற்றம் உணர்தல், தொடு உணர்வு ஆகியவற்றை பட்டியலிட்டார்.

இன்றைய அறிவியலின் படி மனித மூளையால் வெப்பம் உணர்தல், வலி, புவி ஈர்பு, நிலை தடுமாற்றம் என பலவற்றை உணர முடியும் என உறுதி படுத்தப்பட்டுள்ளது.

புவி காந்த ஆய்வகம்:

அறிவியலாளர்கள், மனிதர்களால் புவி காந்த விசை வேறுபாடுகளை உணர முடியுமா என்பதை குறித்து ஆய்வு மேற்கொள்ள தனிமைபடுத்தப்பட்ட, வேறு எந்த காந்த அலைகளும், குறிப்பாக மின் காந்த அலைகளான வானொலி அலைகள் புகா வன்னம் ஒரு அறையை உருவாக்கினர்.

ஆய்விற்கு உட்பட ஒப்புக்கொண்ட பங்கேற்பாளர்களை இந்த அறையில் முழு இருட்டில் சுமார் ஒரு மனி நேரம் உட்கார வைத்தனர்.

அவர்களின் தலையில் 64 மின்முனைகளை பொருத்தி அவர்களின் மூளை அலைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, கட்டுப்படுத்தப்பட்ட காந்த அலைகளை அறையுனுள்ளே வெவ்வேறு திசைகளில் இருந்து செலுத்தினர்.

இந்த ஆய்வில் 34 பங்கேற்பாளர்கள் பங்கெடுத்தனர். அவர்கள் வேறுபட்ட வயதை கொண்டிருந்தனர்.

மேலும், அவர்கள் பல இன அடையாளங்களை கொண்டவர்களாகவும் இருந்தனர்.

ஆய்வின் முடிவு:

இதில், சிறப்பு என்னவென்றால், ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட எந்த பங்கேற்பாளரும் தாங்கள் ஒரு இருட்டறையில் விடப்பட்டிறிந்தோம் என்பதை தவிர வேறு எதையும் தன் உணர்வு கொண்டு உணரவில்லை என்பதே.

அனால், இவர்களில் பெரும்பாலோரின் மூளை அலைகளில் காந்த அலைகளின் வேறுபாடுகளுக்கு ஏற்ப வேறுபாடு வெளிப்பட்டது.

குறிப்பாக, மனித மூளையின் முதல் நிலை இசைவான 8 மற்றும் 13 hertz அளவீடு செய்யப்பட்டு அவை காந்த அலை வேறுபாடுகளுக்கு ஏற்ப பதில் தருகிறதா அல்லது தானியங்குகிறதா (உறக்க நிலை) என்பது கண்டறியப்பட்டது.

முதல் நிலை இசைவு [alpha-ERD (event-related desynchronization)], மூளை எதையாவது உணர்ந்தால் உடனே அதன் திறன் வெளிப்பாடு குறைவாகவும், எந்த வித உணர்தலும் இல்லா நிலையில் அதன் திறன் வெளிப்பாடு பெரும் அளவில் இருப்பது அறியப்பட்டது.

பிற உணர்வுகளும் இத்தகைய வெளிப்பாட்டையே காட்டும்.

சில பங்கேற்பாளர்களின் முதல் நிலை இசைவு காந்த விசையில் மாறுபாடு காட்டப்பட்டவுடன் சுமார் 60 விழுக்காடு வரை வேறுபாட்டை காட்டியது.

இதில் மேலும் சிறப்பு என்னவென்றால், இயற்கைக்கு ஒவ்வாத வெறுபாடுகளை இனம் கண்டு மனித மூளை அவற்றிற்கு செவிகொடுப்பதும் இல்லை, அதற்கு பதில் தருவதும் இல்லை.

எனெனில், மூளையில் பாக்கவாட்டிலிருந்து காந்த அலைகள் செலுத்தப்பட்டால் அதற்கு பதில் தரும் மூளை தலையின் நேர் மேல் பகுதியில் இருந்து காந்த அலைகள் வந்தால் அவற்றை மொத்தமாக எந்த பதிலும் தராமல் கழித்து ஒழித்து விடுகின்றன.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: