வியாழன் கோள் எங்கோ உருப்பெற்று வந்துள்ளது

வியாழன் கோள் எங்கோ உருப்பெற்று வந்துள்ளது

வியாழன் கோள் எங்கோ உருப்பெற்று ஞாயிறு குடும்பத்திற்குள் இன்றைய சுற்று வட்ட பாதை நிலைக்கு வந்துள்ளது.

இன்றிலிருந்து சுமார் 700,000 ஆண்டுகளுக்கு முன், வியாழன் கோளானது, இன்றைய அதன் ஞாயிறு சுற்று வட்டப்பாதையில் இருந்து சுமார் 4 மடங்கு தொலைவில் இருந்து அது மெதுவாக ஞாயிறை நோக்கி பயனித்தி வந்தடைந்துள்ளது.

இந்த கூற்றிற்கு சான்றாக வியாழன் கோளை சுற்றி வரும் குறுங்கோள் குழு சான்றாக விளங்குகிறது.

பிற விசும்பு குடும்பங்கள்

பிற விசும்பு குடும்பங்களில் பொதுவாக வியாழன் கோள் போன்ற பெராற்றல் கொண்ட வளிம கோள்கள் தங்களது விண்மீனிற்கு அருகில் தன் சுற்று வட்டப் பாதையை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

லண்ட் பல்கலை கழகத்தை சார்ந்த ஆராய்சியாளர்கள் கணிணி துணை கொண்டு வியாழனின் ஞாயிறு குடும்பம் நோக்கிய அதன் 45 கோடி ஆண்டுகள் பயனத்தை அராய்ந்து இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.

துவக்கத்தில், நமது புவி கோள் போன்ற அளவில் தான் வியாழன் கோளும் இருந்துள்ளது. நாளடைவில் விசும்பில் சுற்றின் திரியும் தூசுக்கள் அதன் மேல் படிந்து அதன் அளவை பல மடங்கு கூட்டியுள்ளது.

ஆய்வின் முடிவானது, வியாழன், அது இன்று ஞாயிறை சுற்றி வரும் பாதையில் இருந்து சுமார் 4 மடங்கு தொலைவில் உருப்பெற்றுள்ளது.

அது மெது மெதுவாக ஞாயிறை நோக்கி நகர்ந்து வந்து இன்றைய சுற்றுவட்ட பாதையை சுமார் 700,000 ஆண்டுகளுக்கு முன் அமைத்துள்ளது.

இதை, வானியல் ஆய்வாளர்கள் வியாழனை தற்போது சுற்றி வரும் குறுங்கோள்களை கொண்டு உறுதிபடுத்துகின்றனர்.

பல்லாயிறக் கணக்கான குறுங்கோள்கள்

வியாழன் கோளின் இன்றைய சுற்று வட்டப்பாதையில் பல்லாயிறக் கணக்கான குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன.

இவை, வியாழன் கோளிற்கு முன்னும் பின்னுமாக சுற்றி வருகின்றன. பின் பகுதியில் சுற்றும் குறுங்கோள்களின் எண்ணிக்கையை விட முன் பகுதியில் சுற்றும் குறுங்கோள்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் கூடுதலாக உள்ளது.

இந்த எண்ணிக்கை வெறுபாடுகள் அறிவியலாளர்களை விடையில்லா வியப்பில் வைத்தது.

தற்போழுதைய ஆய்வு:

பல ஆண்டுகளாக வியாழன் கோளுக்கு பின் பக்கம் சுற்றும் குறுங்கள்களுக்கும், முன் பக்கம் சுற்றும் குறுங்கோளுக்குமான எண்ணிக்கை வேறுபாட்டு புரியாத புதிராக இருந்தாலும், தற்பொழுதைய ஆய்வு இதற்கான விடையை கூறியுள்ளது.

சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஞாயிறு குடும்பம் தோன்றியதாக வைத்துக்கொண்டால், வியாழன் கோளானது ஞாயிறின் ஈர்ப்பு விசையால் ஞாயிறை நோக்கி அது மெதுவாக அதன் பயனத்தை தொடர்ந்துள்ளது. இந்த பயனம் சுமார் 7 லட்சம் ஆண்டுகள் தொடர்ந்துள்ளது.

இவ்வாறு அது பயனித்து வருகையில், அதன் பாதையில் வரும் குறுங்கோள்களை அதன் ஈர்ப்பு விசையால் உள் இழுத்து வந்துள்ளது.

அதனால், ஞாயிறை நோக்கிய அதன் முன் பகுதியில் பெரும் எண்ணிக்கை கொண்ட குறுங்கோள் கூட்டமும், பின் பகுதியில் எண்ணிக்கையில் குறைவான குறுங்கோள் கூட்டமும் சேர்ந்துள்ளது.

மேலும் வியாழனுக்கு வளிம வளிமண்டலம் இல்லாத நிலையில் அது இருந்த பொழுது இந்த குறுங்கோள்கள் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

வரும் 2021 ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளிச் சலாகை (Space Probe) ஒன்று வியாழனின் 6 குறுங்கோள்களை ஆய்வு செய்ய இருக்கிறது.

இந்த ஆய்வு மேலும் பல தகவல்களை வியாழன் குறித்து நமக்கு தரும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: