தொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது?

தொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது?

தொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது? தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

தொண்டை புற்று நோய் என்பது, தொண்டை, குரல் வளையம், உள் நாக்கு ஆகியவற்றில் ஏற்படும் புற்று கட்டியாகும்.

தொண்டை பகுதி நம் மூக்கிற்கு பின் பக்கம் துவங்கி கழுத்தில் முடிவுரும் ஒரு சதை நார் குழாய் பகுதியாகும்.

தொண்டை புற்று கட்டியானது நம் தொண்டை பகுதியில் உள்ள தட்டையான பகுதிகளில் பெரும்பாலும் தோன்றும்.

குரல் வளையம் ஆனது, நம் தொண்டை பகுதியின் கடைசியில் அமைந்துள்ள ஒரு அதிரும் தன்மை வாய்ந்த சதை பகுதியை கொண்டது. நாம் பேச எத்தனிக்கும் சொற்களை இந்த அதிரும் தசை நார்களே வெளி வரும் காற்றை அதிர வைத்து வார்த்தைகளாக மாற்றி தருகிறது.  அது, எளிதாக புற்று கட்டி தோன்றுவதற்கான பகுதியாக திகழ்கிறது.

மேலும், நம் மூச்சுக் குழாய்க்கும், உணவு குழாய்க்குமான மூடியாக செயல்படும் குரல்வளை மூடி புற்றுக் கட்டி வருவதற்கு தோதான இடமாக அமைந்துள்ளது.

தொண்டை புற்று நோய் அறிகுறிகள்:

1. தொடர் இருமல்

2. குருதியுடன் கூடிய சளி வெளிப்பாடு

3. குரலில் மாறுதல். குரல் கர கரத்து பேச்சு.

4. காதில் வலி

5. தொண்டையில் ஏற்பட்ட புண் ஆராமல் இருப்பது

6. அடிக்கடி தொண்டையில் புண்னுடன் கூடிய வலி

7. வேகமாக எடை குறைதல்

மருத்தவர் உதவி:

தொண்டை பகுதியிலோ அல்லது காதிலோ வழக்கத்திற்கு மாறான மாறுதல்களை உணர்ந்தால் கண்டிப்பாக மருத்துவர் உதவியை நாள் கடத்தாமல் நாட வேண்டும்.

தொண்டையில் ஏற்படும் வலி மற்றும் புண் எல்லாம் தொண்டை புற்று கட்டிக்கான அறிகுறியாக இருக்க வேண்டும் என்பதில்லை என்றாலும், புற்று கட்டிகளை பொருத்த வரையில் உடனடி கவணிப்பு உயிர் காக்க உதவும்.

தொண்டை புற்று கட்டி எதனால் ஏற்படுகிறது?

இதுவரை மேற்கொண்ட மருத்துவ ஆய்வுகள் எதுவும், குறிப்பிட்ட ஏதோ ஒன்றினால் தான் தொண்டை புற்று கட்டி ஏற்படுகிறது என்ற தெளிவை தரவில்லை.

ஆனால், கீழ்காணும் ஏதாவது ஒரு பாதிப்பு உள்ளவர்கள் இந்த தொண்டை புற்று நோய் பாதிப்பிற்கு உள் ஆகிறார்கள் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

1. புகை பிடித்தல்

2. எந்த வகையில் புகை இலை பொருட்களை பயன்படுத்தினாலும்.

3. பாலியல் ஈடுபாட்டால் வரும் மனித பப்பிலோமா நச்சுயிரி தொற்று (HPV)

4. காய் கனிகள் அற்ற உணவு முறை

5. தொடர் நெஞ்செரிவு - எரி கழிப்பு

தொண்டை புற்று கட்டியின் வகைகள்

1. மூக்குத்தொண்டை பகுதியில் ஏற்படும் புற்று கட்டி. இது மூச்சு குழலுக்கு பின்புறம் தொண்டையில் தோன்றும்.

2. வாய்த்தொண்டை பகுதியில் ஏற்படும் புற்று கட்டி. இது உள் நாக்கு பகுதிக்கு உடன் அடுத்த மேல் பகுதியில் தோன்றும்.

3. உணவுக்குழாய் தொட்ட தொண்டை பகுதி. இது உணவுக்குழாயும், தொண்டை பகுதியும் சந்திக்கும் இடமாகும்.

4. குரல்வளை முகப்பு தொண்டை பகுதி. இது குரல் தண்டு அல்லது குரல் நாண் என்கிற குரல் வளை பகுதி.

5. கழுத்துப் பகுதிக்கு மேல், குரல்வளை மூடியில் ஏற்படும் புற்று கட்டி.

6. குரல் வளைக்கு தொட்டடுத்த கீழ் பகுதியில் தோன்றும் புற்று கட்டி.

தொண்டை புற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகள்:

1. புகை பிடிக்கும் பழக்கம் இருப்பின் அதை உடனே கைவிடுங்கள். எந்த வகையில் புகை இலை பொருட்களை எடுத்துக்கொண்டாலும் புற்று நோய் ஏற்பட அது தூண்டுதாக அமைகிறது. தாமாக இந்த பழக்கத்தை விட இயலவில்லை என்றால் மனோ தத்துவ மருத்துவரையோ அல்லது உங்களின் குடும்ப பொது பருத்துவரையோ நாடுங்கள். அவர் உங்களுக்கு தீர்வு தருவார்.

2. குடி குடியை கெடுக்கும். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அது புற்று நோயையும் உண்டாக்கும். அளவிற்கு அதுகமான குடி புற்றுக் கட்டியை உண்டாக்கும். 65 வயதிற்கு உட்பட்ட உடல் நலக் குறைவு ஏதும் இல்லாதவர்கள் ஒரு குவளை அளவிற்கு மட்டும் சாராயம் பருகலாம். 65 வயதிற்கு மேற்பட்ட உடல் திடம் நன்கு உள்ளவர்கள் இரண்டு குவளை அளவிற்கு எடுத்துக்கொள்ளலாம்.

3. உணவில் காய் கணிகளுக்கு குறைவு வைக்கக் கூடாது. வகை வகையான காய் கணிகள் உண்ண வேண்டும்.

4. பலருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு புற்று நோய்க்கும் வழி வகுக்கும். அதில் எச்சரிக்கையாக இருக்கவும்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: