செம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....

செம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர்  நடிகர் சயிப் அலிகான்.

மக்களிடம் ஏழை எழியவருக்கு உதவி என்ற போர்வையில் பணத்தை ஏமாற்றி பெற்று வருவாய் ஈட்டி அதை உல்லாசமாக தான் வாழ பயன்படுத்தி வந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டை அணிந்து இருந்த இரண்டு சிறுவர் சிறுமிகளின் கல்வி தொண்டுக்கு என்று கூறி அங்கிருந்த பொதுமக்களின் நன்கொடை பெற்று வந்தனர்.

அப்போது எதேச்சையாக அங்கு வந்த அந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் நன்கொடை பெற்று வந்த  நபர்கள் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைக் கண்டுபிடித்தார்.

பின்னர் அந்த இருவரையும் கமுக்கமாக பின்தொடர்ந்த அருண்குமார் இதுபற்றி காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள் நன்கொடை பெற்று மோசடி செய்த  நண்பர்களை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து தங்களது முறையில் விணவினர்.

அவர்கள் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த  சைப் அலிகான் வயது 29 மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த கௌதம் 29 என்பது தெரியவந்தது.

மேலும் பிடிபட்ட சைப் அலிகான் செம்பருத்தி, பகல் நிலவு போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் என்பது தெரியவந்தது.

தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றி பணம் பெற்று அந்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இவரை கைது செய்த காவலர்கள் நீதிமன்றத்தில் நேர்கொணர்ந்து சிறையில் அடைத்தனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: