மருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட

மருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட

பாகம் 1 / பாடம் 3

மருத்துவனின் இலக்கணம்

கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் இவ்வுலகின்கண் தர்மம், அதர்மம், காமம், மோஷம் என்ற நான்கு புருஷார்த்தங்களை அடைந்து உயிர் வாழ்வதற்கு முதற்காரணமாயுளது உடல் நலமே.

இதற்கு விரோதியாக உள்ளதுதான் வியாதிகள் எனப்படும். ஆகவே இப்பிணி முதலிய பீடைகளின்றும் விடுபட்டு சுசுவாழ்வுபெறத் துணைபுரியும் மருத்துவர்களைக் கடவுளுக்குச்சமமாகக் கருதப்படும்.

கூர்மையான அறிவுடையவனும்,தைரியவானும், ஆசாரமுள்ள வனும் தேகம், பல், கண், உதடு, செவி இவைகள் விகார மற்றவனும், சந்தேக மற்வனும், ஞாபக சக்தியுடையவனும், சகல வித்தைகளில் தேர்ந்தவனும், உயிர்களிடத்து அன்புள்ளவனும், நல்லொழுக்க முள்ளவனும், எந்நோயையும் அசாத்திமென கைவிடாமல், உயிர் உடலைவிட்டு நீங்கும் வரையில் தீவிர புத்தியுடனும் மனோ திடத்துடனும்,மருத்துவம் செய்பவனும், ஆகிய இத்தியாதி குணங்களுடையவனே சிறந்த மருத்துவனாவான்.

மருத்துவனின் இலக்கணம் - மருத்துவன் அறிந்து கொள்ள வேண்டியவைகள்:

சோதிடம் பஞ்சபட்சி, சரநூல், குற்றமற்றவிகார வித்தை, அகத்தியமா முனிவர் அருளிய நூல்கள், தீதில்லா மந்திரங்கள், கர்மகாண்டம் முதலியவைகளைக் கசடறக் கற்றவர்களே சிறந்த மருத்துவனாக கருதப்படும். இவற்றுள் சோதிடம் என்பது கோள்களின் ஆதிக்கத்தை குறிப்பிடும் சாத்திரமாகும்.

இதில் ஜன்ம லக்கனத்திற்கு ஆறாம் வீட்டதிபதினாகிய, ரோக ஸ்தானாதிபதி, இலக்கனாதிபதி, ஆகிய இவர்களின் இயக்கங்களைக் கொண்டு மானிடர்களுக்கு எற்படக்கூடும் நோய்க¨ளெயும், அவற்றின் வன்மை மென்மைகளையும், ஒருவாறு கண்டறிய முடியும்.

ஐந்து பறவைகள் (பஞ்ச பட்சி) என்பது வல்லூறு ஆந்தை, காகம், கோழி, மயில் முதலிய இயக்கங்களைக் கூறும் சாத்திராகும்.

இதுவும் சோதிடத்தைப் போலவே காலத்தின் நன்மை தீமைகளைக் கண்டறிந்து, நடக்கப் பயன்படும்.சரம் என்பது சூரிய கலை சந்திர கலை ,சுழி முனை முதலிய சுவாசக் குறிப்புகளைக் கூறும் சாத்திரமாம்.

இதனால் நோயின் சாத்யா சாத்தியங்களை ஒருவாறு கணிக்க முடியும். விகார வித்தை என்பது இரச வாதத்தைப் பற்றிக் கூறப்படுஞ் சாத்திரமாம்.

அதாவது செம்பு, ஈயம் முதலிய மட்ட லோகங்களைத், தங்கம், வெள்ளி முதலிய உயர்ந்த லோகங்களைச் செய்யும் வித்தை,

இது பெரும்பாலும் முப்பு முதலிய குரு மருந்துகளைக் கொண்டு செய்யப்படும்.

இத்தகைய விகார வித்தையை யறிந்தவனே வாதி யென்றும். அவன் ரசகந்தி முதலிய சரக்குகளைக் கட்டி நீற்றி மருந்தாக முடித்து பிணிகட்கு வழங்க எத்தகைய பிணிகளும் விரைவில் குணப்படும் என்று அனுபவத்தில் கண்டுள்ளது.மற்றும் பதினென் சித்தர்களில் முதன்மை யானவராகிய அகத்தியனார் எழுதிய நூல்களையும், மந்திரங்களையும், கற்றறிதல் வேண்டும்.

கர்ம காண்டம் என்பது கர்மாதிகளினால் நோய்கள் சம்பவிக்கும் விதத்தையும், அதற்குச் சாந்தி செய்யும் வகை முதலியவைகளையும் கூறப்படுவனவாம்.

ஆகவே இதுவரையில் கூறப்பட்டவகள் யாவற்றையும் குற்றமற கற்றுணர்ந்தவர்களெ சிறந்த வைத்தியர்களாகவும், கடவுளுக்குச் சமமாகவும் கருப்படுவர்.

இவற்றுள் ஒரு சிலவற்றைமற்றும் கற்றுவிட்டு வைத்தியம் செய்வது ஆபத்துக்கிடமாகும்.

மருத்துவ முறைகளையும், நல்லமருந்து முறைகளையும், மட்டும் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது.

உடற்கூறு தத்துவங்கள் அஷ்டவித பரிஷை முதலியச்வற்றையும், அவற்றின் வாயிலாக நோய்களைக் கணிக்கவும் பயில வேண்டும்.

மற்றும் மருந்துகளின சக்தி, குணம், நிகண்டு, முறிவு, செயல்பாக நூணுக்கங்களை முதலியவற்றை அறிந்துருப்பதுடன், கூடுமான வரையில் தானே மருந்துகளை செய்யும் திறமையும் பெற்றிருத்தல பெரிதும் நன்மயை பயக்கும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: