நடிகர் விஷாலை கைது செய்ய ஆணை

நடிகர் விஷாலை கைது செய்ய ஆணை

வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக, அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டத்தாக நடிகர் விஷாலை கைது செய்ய ஆணை பிறப்பித்தது கூடுதல் தலைமை பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2.

பிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்.

குற்றச்சாட்டு என்னவென்றால், விஷாலின் படப்பிடிப்பு நிறுவனம், தமது ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருமான வரியை வருவாய் துறைக்கு கடந்த 5 ஆன்டுகளாக செலுத்தவில்லை என்பதாகும்.

விஷாலுக்கு நீதிமன்றம் பலமுறை செய்தி அனுப்பியும் வராததால் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

முன்னதாக, நீதிமன்றத்தில் விஷாலுக்காக வழக்காடிய வழக்கறிஞர், விஷாலுக்கு நீதிமன்றத்தில் நேரில் வரச்சொல்லி எந்த செய்தியும் அனுப்பப்படவில்லை என்றுரைத்தார்.

அதை எதிர்கொண்ட வருமான வரி துறை சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் ஷீலா, விஷால் கையொப்பமிட்டு பெற்றுக்கொண்ட அழைப்பு சீட்டின் நகலை தாக்கல் செய்தார்.

மறு பேச்சின்றி நீதி அரசர் கைது ஆணையை வெளியிட்டார்,

Share this Post:

தொடர்பான பதிவுகள்: