பொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து

பொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து

இரண்டு இரு சாக்கர வண்டி ஓட்டுனர்கள் மீது அரித்தா நிறுவன பேருந்து மோதியதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.  மற்றொரு வண்டியில் பயணித்த தாயும் மகனும் படுகாயமடைந்தனர்.

ஓசூர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து ஓசூர் காந்தி சிலை நோக்கி செல்லும் தேண்கனிக்கோட்டை சாலையும், ஓசூர் உள்வட்ட சாலையும் சந்திக்கும் இடமானது பல விபத்துக்களை நாளொரு பொழுதும் நிகழ்த்தி வருகிறது.

பெரும்பாலான விபத்துக்கள் வண்டி ஓட்டுனர்களின் கவணக் குறைவாலேயே நிகழ்ந்து வருகின்றன.

கடந்த நாள் இரவு (06.08.2019) அன்று இரவு, அரித்தா நிறுவன பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுனர் கவணக்குறைவாக பேருந்தை இயக்கி சாலையில் சென்று கொண்டிருந்த இரு இரண்டு சக்கர வண்டிகள் மீது ஏற்றி இறக்கினார்.

இதில் நிகழ்விடத்திலேயே தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை சார்ந்த ஒருவர் பலியானார்.  மேலும் தாயும் மகனுமாக பயணித்த வண்டியும் விபத்தில் சிக்கியது.  இதில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த சாலை சந்திப்பில் போதிய மின் விளக்குகள் அமைக்காததும், காவல் துறையினர் முறையாக போக்குவரத்தை கட்டுப்படுத்தாதுமே இந்த விபத்து ஏற்பட வழிவகுத்ததாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இந்த சாலை சந்திப்பு அருகே பல ஆக்கிரம்மிப்பு கடைகளும் கட்டிடங்களும் உள்ளன.  இவையும் விபத்தை ஏற்படுத்த துனை புரிகின்றன.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: